குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு 4- ஆம் வீதியில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி […]
Tag: புதுகோட்டை
போலீஸ் ஏட்டு ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளர் விட்டு சென்ற பணத்தை வங்கி மேலாளரிடம் கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஏ.நத்தம் பண்ணை பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் கிளையில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரக்கூடிய பகுதியில் ஐந்தாயிரம் ரூபாய் வெளியே எடுக்கும் நிலையில் இருந்ததை பார்த்து பிரபு அதிர்ச்சியடைந்தார். அங்கு வேறு யாரும் இல்லை. […]
பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு நேற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு அரிய நாச்சியம்மன் கோவிலில் இருந்து தொடங்கியுள்ளது. மேலும் பஞ்சபூக விஸ்வகர்மா சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]
திடீரென காணாமல் போன புதுப்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 16-ஆம் தேதி மீனா என்ற பெண்ணை சுரேஷ் திருமணம் செய்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி பெங்களூர் செல்வதற்காக சுரேஷ் தனது மனைவியுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிய மீனா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சுரேஷ் தனது மனைவியை அனைத்து இடங்களிலும் […]
சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி உள்ளார். அதன்பிறகு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடி போதையில் தகராறு செய்தவரை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் கட்டை விரலை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருதங்குடி பகுதியில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதங்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு குடி போதையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மேகநாதன் அவரை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பசுபதி மேகநாதன் கட்டை விரலை கடித்து துப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி […]