ரயில் மோதி முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தப் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு […]
Tag: புதுக்கோட்டை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை செய்யக்கூடிய சந்தை திறக்கப்பட்டது. இந்நிலையில் ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். மேலும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஆடுகளை வாங்கி சென்றனர். இதனையடுத்து ஆடுகள் 5 ஆயிரம் முதல் 25 […]
பணமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாச்சிக்கோட்டை பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவரான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் மீது பணமோசடி வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இதனையடுத்து பன்னீர்செல்வம் கோவை மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் மாதேஸ்வரன் என்பவரிடம் மருத்துவமனை கட்டுவதற்கு கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் மீது துவாக்குடி பகுதியில் வசிக்கும் […]
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வந்தனாக்குறிச்சி பகுதியில் முகமது ரபிக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பொன்னமராவதி பகுதியில் சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இதில் பலத்த காயமடைந்த முகம்மது ரபிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் வேனில் வந்த இரண்டு நபர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். […]
விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் கம்மாய் கரையோரம் விஷம் குடித்துவிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அந்த வழியில் செல்பவர்கள் முருகேசன் இறந்து கிடந்ததை பார்த்து திருமயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமயம் காவல்துறையினர் முருகேசனின் சடலத்தை கைப்பற்றி திருமயம் […]
லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாபண்ணை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேத்தாம்பட்டியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து லட்சுமி திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக லட்சுமி மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த […]
புதுக்கோட்டை மாவட்டம், பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் விரட்டி சென்று கைது செய்துள்ளனர். கோவையை சேர்ந்த மருத்துவருக்கு ரூபாய் 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 2.85 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மோசடி செய்துள்ளார். இதையடுத்து கோவையை சேர்ந்த மருத்துவர் காவல்துறையில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை தேடி வந்த காவல்துறையினர், அவர் சென்னையில் […]
குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது குடிநீர் தொட்டியானது சேதம் அடைந்திருப்பதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் வருவதற்காக பழுதான மோட்டாருக்கு பதில் ஊராட்சி நிர்வாகம் ஒன்றரை லட்சத்திற்கு புதிய மோட்டார் வாங்கி பொருத்தியுள்ளது. ஆனாலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை […]
வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் பாறைக்களம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாட்டிற்கு தருவதற்காக வைக்கோல் படப்பு வைத்திருந்தார். இந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எறிந்த வைக்கோல் படப்பை நீரை பாய்ச்சி […]
காரில் இளம்பெண்ணை வாலிபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கவி என்ற மகள் உள்ளார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சங்கவி திரும்பி வந்திருக்கிறார். இந்நிலையில் சங்கவியின் தந்தை அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். இதனையடுத்து தனது வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த சங்கவியை காரில் வந்த […]
பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி அனைவருக்கும்ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு மாடு இதுவரை 4 காளை கன்றுகளையும், ஒரு பசு கன்றையும் ஈன்றது. அந்த பசுவின் கன்றுக்கு அண்ணாமலை குடும்பத்தினர் ஐஸ்வர்யா என பெயர் சூட்டி தனது பிள்ளை போல் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஐஸ்வர்யா என்ற பசு மாடு 9 மாத சினையாக […]
மாணவர்கள் சுமார் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு அமைத்துள்ள நிகழ்வு பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் புயலின் தாக்கத்தின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்து அழிந்து விட்டன. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சாலை ஓரங்களில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் அஞ்சுரங்காடு கிராமத்தில் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை வளர்த்து குறுங்காடு அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்காக தன்னார்வ […]
சட்டவிரோதமாக கஞ்சாவை வாங்கிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாபட்டினம் பகுதியில் மணமேல்குடி காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆதிபட்டினம் பகுதியில் வசிக்கும் முஜிபுர் ரகுமான் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.இந்நிலையில் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் முஜிபுர் ரகுமான் அந்த கஞ்சா பொட்டலங்களை புதுக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். […]
சட்டவிரோதமாக சாராய கிடங்கு மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வடகாடு காவல்துறையினர் சேதுராமனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் […]
பணம் கேட்டு தரமறுத்த மதுபான ஊழியரை அ.தி.மு.க பிரமுகர் தாக்கிய சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அறந்தாங்கி சாலையில் இருக்கும் மதுபானக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மதுபான கடைக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நகர பேரவை செயலாளராக இருக்கும் மண்டலமுத்து என்பவர் பணம் கேட்டு கார்த்திகேயனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கார்த்திகேயன் பணம் தர மறுத்ததால் வாக்குவாதம் முற்றவே […]
கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கிராம மக்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜர்புரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20 ஆண்டுகள் கடற்படையில் வேலை பார்த்து ஒய்வு பெற்றுள்ளார். தற்போது இவர் வல்லம் புதூர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த 6 ஆண்டுகளாக மக்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து நன்மைகளையும் செய்து அவர்களது மனதில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு […]
மயான வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் வாலிபர் உடலோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்கு பின் மணிகண்டனின் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் மணிகண்டனின் உடலை அடக்கம் […]
நூதன முறையில் அரசு ஊழியரை ஏமாற்றிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமநாடு பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பால்ராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் நான் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண், ஏடிஎம் நம்பர் முதலானவற்றை பெற்றுள்ளார். இதனையடுத்து பால்ராஜிற்கு வங்கி கணக்கிலிருந்து 1 லட்சத்து […]
நிலைதடுமாறிய அரசுப்பேருந்து தூணில் மோதி நின்ற விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கீரனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த அரசு பேருந்தானது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் பேருந்தை ஓட்டுனரால் நிறுத்த முடியவில்லை. இதனையடுத்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருக்கும் தேனீர் கடையின் அருகில் உள்ள ஒரு தூணின் மீது பலமாக மோதிய பின் பேருந்து நின்றது. இதில் பேருந்துக்காக […]
குடிக்க தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் ராசாத்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவருடன் ராசாத்திக்கு குடிநீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது சீனிவாசன் ராசாத்தியை கம்பால் தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த ராசாத்தி சீனிவாசன் மீது வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சுந்தரத்திடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சுந்தரம் மது பாட்டில் விற்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதைப்போன்று இலுப்பூர் பகுதியில் […]
இறந்த நிலையில் இராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் இறந்த ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கி உள்ளது. இதனைப் பார்த்த மீனவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் இறந்த திமிங்கலத்தின் உடலை வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியோடு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனையில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 6 மாத குட்டி இருந்தது தெரியவந்துள்ளது. […]
தம்பியை, அண்ணன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரவணன் மற்றும் ராமன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சண்முகம் தனக்கு சொந்தமான நிலத்தை இரண்டு மகன்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது இளைய மகனான ராமனுக்கு பிரித்துக் கொடுத்த நிலத்தில் 5 சென்ட் நிலத்தை மூன்று லட்ச […]
டீக்கடை தொழிலாளி குளத்தில் உள்ள படிகட்டில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் அகதீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அகதீஸ்வரன் குளிப்பதற்காக கருப்பர் கோவில் குளத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குளத்தின் படிகட்டில் குளிப்பதற்காக அகதீஸ்வரன் இறங்கியுள்ளார். அப்போது படிக்கட்டில் படர்ந்திருந்த பாசியில் அகதீஸ்வரன் கால் வைத்ததால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த […]
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அற்புதபுரம் பகுதியில் அடைக்கலராஜ்-ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தி இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து மர்ம நபர்கள் ஆனந்தியின் இருசக்கர வாகனத்தை தள்ளி விட்டதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடி சென்றனர். இதில் கீழே விழுந்த ஆனந்தி பலத்த காயம் அடைந்தார். இதனை […]
திடீர் தீ விபத்து காரணமாக கொழுந்துவிட்டு எரிந்த வைக்கோல் போரை தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்குச் சொந்தமான வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படைவீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2 சாமி சிலைகளை வருவாய் துறையினர் கைப்பற்றினர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் உள்ள குளத்தில் இரண்டு சாமி சிலைகள் கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அழியாநிலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கடந்த வருடம் அரசமரத்தடி பிள்ளையார் கோவிலில் இருந்த கல்லாலான நாகர் சிலை, சிமெண்டால் செய்யப்பட்ட அம்பாள் சிலையை […]
அவ்வையார் வேடமணிந்த ஆசிரியை மாணவர்கள் பள்ளியில் சேர்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு பலரின் பாராட்டை பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் உதவி பெற்று இயங்கி வரும் பள்ளியில் கிறிஸ்டி ஜோதி என்ற ஆசிரியை வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் இணையவழிக்கல்வி மற்றும் தொலைக்காட்சியில் கல்வி சேனல்கள் வழியாகவும் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து பயில்வதற்கான […]
ஆக்கிரமிப்பட்ட ஏரியை கண்டுபிடித்து தருமாறு வாலிபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் பெரியாத்தாள் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் வரும் உபரி நீரால் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெற்று வந்துள்ளன. இந்த சிறப்பு வாய்ந்த ஏரியானது தற்போதைய சூழ்நிலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதால் காணாமல் போய்விட்டது. இந்நிலையில் ஏரியை கண்டுபிடித்து தருமாறு பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் […]
மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம் என்ற கிராமத்தில் ராக்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிசை வீட்டில் வசிப்பவர். இந்நிலையில் மின்கசிவு காரணமாக ராக்கம்மாளின் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். […]
கடலில் விசைப்படகு மூழ்கியதால் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் காஜாமைதீன், முகமது அபுபக்கர், என்ராஜ் மற்றும் அசாருதீன் ஆகிய நான்கு மீனவர்கள் அர்ஜுனன் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இதனையடுத்து நால்வரும் மீன்பிடித்து கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் வந்த விசைப்படகில் சிறு துளை ஏற்பட்டதால் தண்ணீர் படகுக்குள் புகுந்தது. இதனால் சிறிது […]
மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக கால் தவறிக் கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கட்டளை பகுதியில் செல்வகுமார் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமார் தூங்குவதற்காக தனது வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செல்வகுமார் மாடியிலிருந்து கால் தவறி கீழே விழுந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருச்சி மாவட்டத்திலுள்ள , கைலாச நகர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை விசயமாக மாதவன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலி மலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாதவன் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக 12 வயது சிறுமி ஒருவர் இருப்பதை கண்டு வீட்டிற்குள் புகுந்து கதவை உள்புறமாக தாழ்பாள் போட்டுள்ளார். அதன்பின் மாதவன் அந்த சிறுமிக்கு […]
குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த இளம்பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராஜாளிப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த சித்ரா அரளி விதையை அரைத்துக் […]
மருத்துவ பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நச்சாந்துபட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் இருக்கும் கட்டிடத்தில் மருத்துவப் பொருட்கள், நப்கின், கொசு மருந்து போன்றவற்றை மருத்துவத்துறை அதிகாரிகள் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைந்திருக்கும் பின்புற கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த மருத்துவத்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு […]
குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் சின்னத்துரையின் தம்பியான ரவிச்சந்திரன் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் சின்னதுரைக்கும் மீனாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கம்போல் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மீனா மன உளைச்சலுக்கு […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதனையடுத்து விஜய் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அதன்பின் விஜய் சில நாட்களாக அந்த பெண்ணை சந்திப்பதையும், அந்த பெண்ணிடம் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இதனால் […]
சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பகுடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், மதுமித்ரா, ஜெய்ஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்த ராஜேஷ் கடந்த 2019 – ஆம் வருடம் சவுதி அரேபியாவிற்கு தனது வீட்டின் வறுமை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் […]
தகாத வார்த்தைகளால் பேசிய வியாபாரியை கட்டி வைத்து அடித்த ஊராட்சி தலைவர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் துணி வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகுடி ஊராட்சி தலைவர் சக்திவேல் என்பவரை வெங்கடேஷ் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சக்திவேல் வெங்கடேஷை ஏதாவது செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து சக்திவேல் அவரது தரப்பினரான காசிமுத்து, மணிகண்டன் ஆகியோருடன் வெங்கடேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வெங்கடேஷ் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் களமாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக வாசுதேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாசுதேவன் மிகவும் பலத்த காயமடைந்தார். அதனால் அருகில் உள்ளவர்கள் வாசுதேவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு […]
மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மடிக்கணினி காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் மாணாக்கர்களுக்கு வழங்குவதற்காக 35 மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வேதியியல் ஆய்வகத்திற்கு கண்காணிக்க சென்ற தலைமை […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், நாகஜோதி என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் மேலக்கொத்தக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கடையக்குடி பகுதியில் வசிக்கும் வினோத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இதனை அடுத்து எதிர்பாராதவிதமாக வினோத்குமாரின் மோட்டார் சைக்கிள் நாகஜோதியின் இருசக்கர […]
புது மாப்பிள்ளை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் ஜெம்புலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் திருமண விழாவிற்கு தேவையான சமையல் பாத்திரங்கள். ஒலிபெருக்கி மற்றும் பந்தல் போன்ற பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் வினோத் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வினோத்குமார் அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் […]
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்திக் புதுக்கோட்டைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் மது போதையில் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் புதுப்பட்டி செட்டி ஊரணிகரை அருகே சென்று கொண்டிருந்தபோது கார்த்திக் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அரசு உத்தரவின்படி பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டிலிருந்து கல்விக்கூடங்கள் திறக்கப்படவில்லை. அப்போது கல்வியானது ஆன்லைன், வாட்ஸ்அப், கல்வி தொலைக்காட்சி போன்ற செயலிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அதன்பின் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கல்விக் கூடங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் […]
அறந்தாங்கி அருகில் பெற்றோரை இழந்து தவிக்கும் 4 சிறுவர்கள் அரசு உதவியை எதிர்பார்த்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவற்றக்குடி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பில் ஆனந்தன்- மகமாயி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு கபிலன், மதுபாலன், மதுஸ்டன், மதுபிரியன் ஆகிய 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் மதுபாலன், மதுஸ்டன், மது பிரியன் ஆகியோர் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் ஆவர். இந்நிலையில் கட்டிட வேலையில் பணி புரிந்து வந்த ஆனந்தன் கடந்த 201 ஆம் ஆண்டு மாரடைப்பால் […]
மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டப்பள்ளம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சுயநினைவை இழந்து வண்டியுடன் கீழே தவறி விழுந்து விட்டார். இதனால் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் அன்னவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து நடத்திவந்த 12 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு […]
அரசின் உத்தரவை மீறி மறைமுகமாக திறக்கப்பட்ட ஜவுளி கடையின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனை அடுத்து மளிகை, காய்கறி, இறைச்சி, மருந்தகம் மற்றும் பழக்கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சலூன், தேனீர் மற்றும் பெரிய […]
6 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதான வினோத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வினோத் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனையடுத்து வினோத் இருசக்கர வாகனத்தில் கொக்குப்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வினோத்தை சுற்றி […]