புதுக்கோட்டை மாவட்டத்தில் மரம் வெட்டும் போது வெட்டப்பட்ட மரம் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் மரம் வெட்டும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் தடிமனை பகுதியில் மரம் வெட்டும் பணிக்கு சென்ற அவர் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது வெட்டப்பட்ட மரம் ராமையா தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]
Tag: புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவடத்திலுள்ள அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்துள்ளார். மேலும் டாக்டர்கள் விவேக் ராஜ், மணிவண்னன், சிவசங்கரி, கீதா உட்பட அனைத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் உயிர்நீத்த செவிலியர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மெழுகுவர்த்தி […]
புதுக்கோட்டை மாவட்டதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உடன் இருந்துள்ளார். இதனையடுத்து ஆய்வுக்குப் பின் பணீந்திர ரெட்டி கூறியுள்ளதாவது, ஊரடங்கால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவதுடன் மருத்துமனைகளில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீரென கீற்றுக்கொட்டகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கீற்றுக்கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கீற்றுக்கொட்டகையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். ஆனால் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன் உத்தமன் நகரிலுள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மற்றும் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி விளம்பரங்களை பயன்படுத்தி 8 கார்களை வாடைக்கு எடுத்து மோசடி செய்த இடைத்தரகர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூர் பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் காரை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் மட்டுமே வாடகை தொகையை தந்த நிறுவனம் சில மாதங்கள் கொடுக்காததால் தர்மராஜ் காரை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் காரையும் கொடுக்காததால் தர்மராஜன் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அண்ணாநகரிலுள்ள வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அங்கு மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்ததை பார்த்து காவல் துறையினர் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக உழவர் சந்தை இயங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டையில் உழவர் சந்தை இயங்கி கொண்டிருந்தது. தற்போது அந்த உழவர் சந்தை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த சந்தையில் ஏராளமான […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவிலில் சாமி சிற்பங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. அங்கு பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையோரத்தில் சுவாமி சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முருகன் கோவில் செல்லும் மலைப்பாதையிலிருந்த சுவாமி சிற்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலின் போது மூடப்பட்ட தலைவர்களது சிலைகளை திறக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திலுள்ள தலைவர்களது சிலைகள் துணியால் மூடப்பட்டன. ஆனால் தற்போது தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையிலும் பல இடங்களில் சிலைகள் மறைத்து மூடப்பட்டு இருந்த துணிகள் அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மற்றும் மாங்காடு பகுதிகளிலுள்ள தலைவர்களின் சிலைகளில் வைத்து மூடப்பட்ட துணி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கால் வாழைத்தார்கள் விற்பனை சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு மாங்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் வந்து வாங்கி செல்வார்கள். தற்போது கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழை விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் வாழைத்தார்கள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் பொது மக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் காய்கறிகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள், உழவர் சந்தைகள் பகல் 12 மணி வரை மட்டும் இயங்கியுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அனைத்து அரசு பேருந்துகளும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது விநியோகத் திட்ட அரிசி பெரும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 கொரோனா நிவாரண தொகை முதல் தவணையை வருகிற 15 ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் ரகசியமாக விற்பனை செய்த தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அழகாபுரியில் வீட்டில் வைத்து மது பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அழகாபுரி கிராமத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் ஏராளமாக பதுக்கி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர் காலனியில் குடைக்கண்ணு என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த நடராஜன் உடன் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மோட்டார் சைக்கிளில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த கடனை கேட்டு வீட்டு வாசலில் அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் பகுதியிலுள்ள பாரதியார் நகரில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் 2 மகளிர் சுய உதவி குழுக்களில் தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று வாரந்தோறும் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளனர். அந்த நிதி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வரவு- செலவு வைத்துள்ளதால் கடந்த ஆண்டு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை கோவிலில் மலைப்பாதையிலிருந்த முருகன், சிவன், பார்வதி சிலைகளை மர்ம நபரகள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் மலைமேல் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அங்கு மலைமேல் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று சாமியை வழிபட்டுவதற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது .அந்த மலைப் பாதையில் ஒரு புறத்தில் முருகன், சிவன், பார்வதி, புலி மற்றும் மான் உள்ளிட்ட பல்வேறு […]
புதுக்கோட்டையில் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாமல் மூதாட்டி தவித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் வடகாடு பெண்கள் தங்கும் விடுதி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். பொது மக்கள் விசாரணை செய்த போது திருச்சியிலுள்ள உணவகத்தில் வேலை பார்ப்பதாகவும் சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூருக்கு செல்ல புதுக்கோட்டை வரை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை பகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கின் போது மதுபிரியர்கள் மது அருந்துவதற்காக மது பாட்டில்களை வாங்க கடையில் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் குடிப்பதற்காக மதுபாட்டில்களை வாங்க பல்வேறு இடங்களிலிருந்து திரண்டு வந்துள்ளனர். இந்நில்லையில் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள அயல்நாட்டு மதுக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்ததுள்ளது. இதனையடுத்து மது வாங்க வந்தவர்களை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்ப சலனத்தால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் அடை மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் வெப்பம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஊரடங்கின் போது மது அருந்துவதற்க்காக மது பிரியர்கள் மது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேன் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை பகுதியில் தனியார் மதுபான ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள முல்லைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கர் பணி முடிந்ததும் ஊழியர்களை வேனில் ஏற்றிக் கொண்டு கோமாபுரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடு ரோட்டில் சரத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மாமனார் மற்றும் மைத்துனரை மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெருஞ்சிக்குடி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சரண்யாவிற்கும் கானத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரண்யாவுக்கு பிரபாகரனுக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சரண்யா கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி தீடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருமயம் அருகேயுள்ள மேலூர் கிராமத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லாரி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது வரி கட்டாமல் மற்றும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தேவராஜ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து நாகர்கோவில், மதுரை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சென்ற 3 ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனர். அதில் புதுச்சேரியில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை பார்க்கும் போது கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மட்டங்கால் கிராமத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாயப் பணியை செய்து வரும் நிலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சசிகலா தலைமையில் ஒன்றிணைய அ.தி.மு.க தொண்டர்கள் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை தழுவி தி.மு.க அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க வை தலைமை ஏற்க சசிகலா வரவேண்டுமென அ.தி.மு.க தொண்டர்கள் பெயரில் புதுக்கோட்டை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடாங்கால் பூக்கள் விற்பனை சரிவடைந்துள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், அணவயல் மாங்காடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் விளையும் பூக்களை கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வெளியூரிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் திருமண நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவில்களில் பக்தர்கள் செல்ல தடை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் விஷம் குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி துர்கா என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் திடீரென வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது மணல் கடத்தி வந்த மாட்டுவண்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை, பரம்பூர், கோணாங்குறிச்சிப்பட்டி, கிளிக்குடி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருக்கும் போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை விசாரணை செய்த பின்பு அவர்களிடமிருந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்தார். இவர் கீரனூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் குளத்தூர் புறவழிச் சாலையையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து அறந்தாங்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஷாஜகான் தூக்கி விசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 751 ஆக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஆசிட் குடித்த பிளஸ் 1 மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கூத்தங்குடி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரீத்தி என்ற மகள் இருந்தார். இவர் அறந்தாங்கி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரீத்தி வலி தாங்க முடியாமல் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற வாசகம் இரவோடு இரவாக பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றதும் ஐந்து முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதில் பெரும் முத்தாய்ப்பான அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அரசாணையை பிறப்பித்தது கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவிகள் அனைவரும் அரசு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கேட்டறிந்துள்ளார். அவர் மாவட்டத்திலுள்ள […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுத் தனமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுர், வங்காரம்பட்டி முள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மதியம் 12 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அருகே மது விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேராம்பூர், ஆவூர் ஆகிய பகுதிகளில் 12 மணிக்கு பிறகும் டாஸ்மாக் கடைகள் அருகே மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ஆலங்குடி பகுதியில் தாசில்தார் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைதான வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேராம்பூர் பகுதியில் ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள ஜவுளி கடைகளுக்கு துணி தைக்கக்கூடிய கார்மெண்ட்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடையில் அப்பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பயிற்சி பெற சேர்ந்துள்ளார். அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி ராஜீவ்காந்தி மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுமியை கடத்திச் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி திரட்டி வரும் டீக்கடை உரிமையாளரை பொது மக்கள் பாராட்டியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வம்பன் நால்ரோடு கடைவீதியில் பகவான் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர். இதனால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கால் மக்கள் வேலையின்றி அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் டீ கடையில் கடன் வைத்திருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் கடைக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறையை கடைபிடிக்க வேண்டிய வழிகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் வியாழக்கிழமை முதல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து வசதி செய்து கொடுத்த அதிகாரிக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் பொது மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் குளமங்கலம் வடக்கு கிராமத்திலிருந்து கொத்தமங்கலம் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது அதிகாரிகள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிராம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கவிதா அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 392 ஆக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக வேளாண்மை உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி பகுதியில் ராம் என்பவர் வசித்து வந்தார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலிலுள்ள விராலிமலை பகுதியிலிருக்கு வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்ததால் சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்த போது சோதனையின் முடிவில் தொற்று இருப்பது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 232 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடர்பாக குற்றவாளியை வருகிற 28 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற வழக்கு தொடர்பாக கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுவரை அவர் ஆஜராகாமல் தலை மறைவாக இருந்து வருகின்றார். இந்நிலையில் செல்வராஜை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பூக்கள் விலை சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், செரியலூர், நகரம், கொத்தமங்கலம், அணவயல் மற்றும் வடகாடு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூந்தோட்டம் அமைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் விளையும் பூக்களை கீரமங்கலத்திலுள்ள கமிஷன் கடைகளில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். அந்த பூக்களை வெளியூர்களிலிருந்து மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் வியாபாரிகள் வாங்கி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை தலைமை செயலாளர் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை குறித்து சென்னை தலைமை செயலகத்திலிருந்து தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மற்றும் சுகாதார செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆய்வு […]