கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் வளையப்பட்டியில் வசித்து வந்தவர் தொழிலாளி ராஜா (30). இவர் குன்றாண்டார் கோவில் திருவிழாவிற்காக கோபுரத்தில் ஏறி மின் விளக்குகளை பொருத்தினார். அதன்பின் கீழே இறங்கும் போது எதிர்பாராவிதமாக தவறி விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். […]
Tag: புதுக்கோட்டை
அரசு விதிமுறையின்படி இயங்காத எடை மேடைக்கு ஆர்.டி.ஓ உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி – புதுக்கோட்டை ரோட்டில் ஒத்தக்கடையில் தனியாருக்கு சொந்தமான கனரக வாகன எடைமேடை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து, வாகன நெரிசல் ஏற்படுவதாக அறந்தாங்கி வருவாய் துறையினருக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் எடைமேடை உரிமையாளரிடம் அரசு விதிமுறைப்படி எடைமேடை இயங்க வேண்டும். மேலும் எடை மேடை பகுதியில் வாகன நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு பணியாளர் ஒருவரை நியமிக்க […]
நிலப் பிரச்சனை காரணமாக திருச்சி வாலிபரை அரிவாளால் வெட்டிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகில் ராப்பூசலையில் வசித்து வருபவர் முருகேசன் (37). இவருக்கும் அதே பகுதியில் உள்ள கோவிந்தராஜன்(55) என்பவருக்கும், நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜன் உட்பட 8 பேர் சேர்ந்து முருகேசனிடம் வாக்குவாதம் பண்ணினார்கள். அப்போது முருகேசனின் மைத்துனரான திருச்சி ஏர்போர்ட்டில் வசித்துவந்த செந்தமிழ்(35) என்பவர் தடுக்க முயன்ற போது அவரை […]
குறவன், குறத்தி என்று நினைத்து பராமரிக்காமல் இருந்த அய்யனார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் சித்துப்பட்டியில் பல்லவர்கால அய்யனார் சிற்பம், பொற்கலை தேவியின் சிற்பம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சிற்பங்களை அப்பகுதி மக்கள் குறவன், குறத்தி சிலை என்று நினைத்து பல தலைமுறைகளாக வழிபடாமல், பராமரிக்காமல் ஒதுக்கி வைத்தனர். கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய கள ஆய்வின்போது இந்த சிற்பங்கள் கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. […]
ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ரெங்கா ரெட்டி மிரிசகூடம் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 25 வயதுடைய சாய்குமார் என்ற தொழிலாளி. இவர் சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இலுப்பூரில் உள்ள கோவில் திருவிழாவிற்காக பாப்பான் குடியிலிருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து இருக்கின்றார். நேற்று அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு […]
ஆன்லைன் மூலம் பெண்ணிடம் 2 3/4 லட்சத்தை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி பகுதியில் வாழ்ந்து வரும் 28 வயதுடைய பெண்ணிடம் ஆன்லைன் வழியாக அறிமுகமான ஆசாமி ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் என அடிக்கடி பேசி அந்த பெண்ணிடமிருந்து 2 3/4 லட்சத்தை வெவ்வேறு தவணைகளாக பெற்றுக்கொண்டு பெண்ணை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுபற்றி ஏமாந்த […]
இளையாவயல் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கீரனூரில் இருக்கும் திருச்சி-காரைக்குடி இடையிலான ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகளானது இளையாவயல் கேட் பகுதியில் காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் எனவும் போக்குவரத்து வசதிக்காக நார்த்தாமலை இரயில்வே கேட் பகுதியில் ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலத்தில் கனமழை பெய்ததால் ஓட்டு வீடு இடிந்து விழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் சென்ற சில நாட்களாகவே கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கீரமங்கலத்தில் கனமழை பெய்தது. கீரமங்கலம் மேற்குப் பகுதியை சேர்ந்த முருகையன் என்பவருடைய ஓட்டு வீடு கனமழை காரணமாக ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இல்லை. ஆனால் வீட்டிலிருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. இச்சம்பவம் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகத்தில் மீன்பிடி தடைகாலம் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வருடந்தோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களும் மீன்களின் இனப்பெருக்க மாதங்களாக கருதி இந்த மூன்று மாதங்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வருடம் 15 ஆம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் விசைப்படகு எடுத்துக்கொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை […]
சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புல்பண்ணை பகுதியில் சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக போதை ஊசியை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போதை ஊசியை விற்பனை செய்த கிரிஸ்டோபர், ஹரிஹரசுதன், பாண்டியன், விக்னேஷ்வர் ஆகிய 4 […]
பஸ்ஸில் அமர்ந்து கொண்டிருந்த சிறுவனிடம் 2 1/4 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறிவேப்பிலான் கேட் பகுதியில் வாழ்ந்து வருபவர் 61 வயதுடைய சோலையம்மாள். இவர் தனது பேரனான சாய்சேஷனுடன் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தபோது பேரனின் கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நகர போலீஸ் நிலையத்தில் சோலையம்மாள் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு […]
மேலைச்சிவபுரி, காரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் அருகே இருக்கும் வையாபுரி நவடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, கச்சா, தூரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மீன்களைப் பிடித்தார்கள். அதில் கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட பலவகை மீன்கள் கிடைத்தது.பொதுமக்கள் இதை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டார்கள். இதைப்போலவே […]
கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையிலான போலீசார் திருமையம் தாலுகா கல்லூர் பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் பொழுது அப்போது அங்கு ஒரு லாரி ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்காக ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதனை போலீசார் பார்த்ததையடுத்து லாரியுடன் மூன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். கடத்த முயன்றவர்கள் தெக்கூர் மேல தெருவைச் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத் திருநாள் அமுத பெரு விழா கொண்டாடப்பட்டு வருகின்றதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக “பிளாஸ்டிக் மாசில்லா புதுக்கோட்டை மாவட்டம்” மற்றும் மஞ்சப்பை அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமானது நேற்று நடைபெற்றிருக்கின்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி கொடியசைத்து தொடங்கி […]
புதுக்கோட்டையில் போதை ஊசியை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புல்பண்ணை பகுதியில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அங்கு ஒரு கும்பல் போதை ஊசியை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புதுக்கோட்டை வடக்கு நான்காம் வீதியைச் சேர்ந்த ஷியாம் கிரிஸ்டோபர், மச்சுவாடி சேர்ந்த ஹரிஹரசுதன், கோவில்பட்டியை சேர்ந்த பாண்டியன், அன்னசத்திரத்தை சேர்ந்த விக்னேஷ்வர் உள்ளிட்ட 4 […]
வேப்பங்குடி திருச்சி-மீமிசல் சாலை பணியை தொடங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குடி திருச்சி-மீமிசல் சாலை பணியானது ஓராண்டுக்கு முன்பாக ரூபாய் 1 கோடியே 65 லட்சம் செலவில் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அது நின்று விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். இதனால் சாலைப் பணியை மீண்டும் உடனடியாக தொடங்கும் மாறும், விரைந்து சாலையை அமைத்து […]
மறவா மதுரையில் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றததில் ஏராளமான வீரர்களும் காளைகளும் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் இருக்கும் மறவாமதரை ஒலியநாயகி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றன. மாவட்ட உதவி ஆணையர் மாரி பொன்னமராவதி, தாசில்தார் ஜெயபாரதி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார்கள். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, காரையூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 737 காளைகளும் 195 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றார்கள். காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்று […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசலில் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் அருகே ராப்பூசல் முனி ஆண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 940 […]
நாகநாதசுவாமி கோவிலில் சிறப்பாக தேரோட்டம் நடைபெற்று உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே இருக்கும் பேரையூரில் நாகநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடை பெற்றுள்ளது. அதன்பிறகு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். மற்றொரு தேரில் பெரியநாயகி அம்பாள் எழுந்தருளி னார். அதன்பிறகு மேளதாளம் முழங்க கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கண்டு களித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். […]
கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடுக்காகாட்டில் உள்ள ஏ.டி. காலனியில் வசித்து வந்தவர் 77 வயதுடைய ராமையா. ராமையாவும் அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வெட்டன் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்ட ராமையா பின் அமர்ந்திருந்தார். அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராமையா சம்பவ இடத்திலேயே […]
விவசாய கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து பரிதாபமாக இறந்து விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தாலுகா உட்பட்ட சித்தர்குடிபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு 50 அடி ஆழ விவசாய கிணறு ஒன்று சொந்தமாக உள்ளது. இதில் இரண்டு வயது மதிப்புமிக்க புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அதனைக் கண்ட பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். இதனால் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த மானை மீட்டு கால்நடை மருத்துவமனையில் […]
தனியார் தொழிற்சாலையின் கழிவுநீரால் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்துக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் வேலூர் சின்ன குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் உள்ள நீரை அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் நிலங்களுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த குளத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தின் அருகே சென்று பார்த்தபோது, அந்த குளத்தில் கெண்டை, விரால், […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற இரண்டு நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பகலில் நேற்று சாரல் மழை பெய்துள்ளது. நார்த்தமலை பகுதியில் லேசாக தூரல் மழை பெய்துள்ளது. அங்கே பெரிய அளவு மழை பெய்யாததால் மக்கள் கவலை அடைந்தனர். மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது.
மத்திய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் மத்திய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்க செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கல். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக வழங்கப்படும் மூன்றாயிரம் ரூபாயை உயர்த்தி வழங்க வேண்டும் […]
புதுக்கோட்டை அருகே சிறுவன் ஒருவன் கஞ்சா வைத்திருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் போலீசார் திருக்கோகர்ணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அதிபட்டினம் லைட் ஹவுஸ் அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கஞ்சாவை விற்பனைக்காக வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவனை […]
இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு மூன்றாம் வீதியில் வீர பாண்டியன் (32) என்பவர் வசித்து வந்தார். இவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். வீரபாண்டியனின் தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நூதன முறையில் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி அருகே பழமை வாய்ந்த கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கி சிறப்பான முறையில் நடந்து வருகின்றது. மக்கள் இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள். இன்று நாடு செலுத்துதல் மற்றும் பொங்கல் விழா நடைபெற்ற நிலையில் பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஈட்டி, வைத்தான குச்சி, […]
குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் இருக்கும் காமராஜர் தெருவை சேர்ந்த மாரிமுத்து(75) என்பவர் சீமானூர் சாலையில் இருக்கும் மலையடி குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அவர் குளித்து கொண்டிருக்கும் போது சற்று கால் தடுமாறி குளத்தில் விழுந்து விட்டார். அதன்பிறகு நீர்மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மாரிமுத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கம்பர் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் பழங்கால குளம் ஒன்று உள்ள நிலையில் அந்த குளத்தில் உள்ள நீரை தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தார்களாம். இந்நிலையில் குளத்தின் அருகே உள்ள இடங்களை தற்போது ஆக்கிரமித்து வருகின்றன. மற்றொருபுறம் அங்கு வாழும் மக்கள் பயன்படுத்தி வெளியிடும் சாக்கடை கழிவுநீர் செல்ல கால்வாய் வழித்தடம் இல்லாத காரணத்தினால் கழிவு […]
டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை காவல் நிலையங்கள், போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆகிய அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க தூய்மை தினத்தை கடைபிடிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் தூய்மை தினத்தை கடை பிடித்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் குடியிருப்புகளில் சுத்தம் செய்யும் பணியை காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த தூய்மை பணி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ள நிலையில் நேற்று மாலை திடீரென்று அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, இலுப்பூர், வயலோகம், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, ஆரியூர், மாங்குடி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை பெய்யும் போது காலாடிப்பட்டியில் வசித்துவந்த பெருமாள் என்பவருடைய சினை பசுமாடு, சித்திக் என்பவருடைய பசுமாடு மற்றும் இலுப்பூர் கரடி காடு பகுதியில் வசித்து […]
மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் வசித்து வருபவர் பெரியகருப்பன். இவருடைய மனைவி 65 வயதுடைய முத்தம்மாள். சம்பவத்தன்று முத்தம்மாள் அரிமளத்திலிருந்து புதுக்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் ராம் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் வரும்போது அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முத்தம்மாள் புதுக்கோட்டை டவுன் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டம், அண்ணாசிலை அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கிய இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சியினர் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் மற்றும் பைக்கிற்கு மாலை அணிவித்து ஒப்பாரி […]
செட்டி குளக்கரையில் கீழே விழுந்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகில் ஆசூர் கிராமத்தில் வசித்து வந்தவர் 40 வயதுடைய ராகவன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே டிராக்டர் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆலங்குடி சந்தப்பேட்டை அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் குளக்கரையில் குளிக்க போனார். அப்போது குளக்கரை படியில் கால் வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலமாக […]
மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பியுள்ளது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கண்மாயில் வைத்து நேற்று நடைபெற்ற திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொதுமக்கள் சேலை, வேட்டி, வளை போன்றவற்றை பயன்படுத்தி கட்லா, விரால், கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் […]
பிரசித்தி பெற்ற ஆலயத்தில் தவக்கால பெருவிழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசடிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித வியாகுல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தவக்கால பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று 16-வது ஆண்டு தவக்கால பெருவிழா நடைபெற்றது. இந்நிலையில் பங்குச்சந்தை ஜேசுராஜ், ஆலங்குடி அருட்தந்தையார் ஆர்.கே. குழந்தைசாமி, கித்தேரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருப்பலி நிகழ்ச்சி நடத்தினர். அதன் பின்னர் விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு […]
காவல் நிலையகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் , மார்தாண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள காவல் நிலையம் மற்றும் காவல்நிலைய குடியிருப்புகளில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி நேற்று தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டடு தூய்மை பனி நடைபெற்றது . இந்த தூய்மை பணியானது காவல் நிலையங்கள், வளாகம், அருகில் அமைந்துள்ள காவல்நிலைய குடியிருப்பு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து சுத்தம் […]
குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணுதோப்பு கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுராணி என்ற மனைவி இருந்துள்ளார்.இந்நிலையில் சந்திரசேகருக்கும் அவரது மனைவி அழகுராணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அழகுராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகுராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா சிலை அருகே வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கேஸ், சிலிண்டர், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தி மோட்டார் சைக்கிளுக்கு மாலை போட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள், உறுப்பினர்கள் […]
முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், மயில் காவடி, பறவை காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதன் […]
பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் கிராமத்தில் பெரியகருப்பன்-முத்தம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தம்மாள் அரிமளம் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்தில் இருந்து இறங்கும் போது தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போனதை கண்டு முத்தம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த முத்தம்மாள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
தம்பி அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓடுக்கூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் சிவகாமி அடிக்கடி சொத்தை பிரித்து தருமாறு அண்ணன் பழனிச்சாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று வயலில் நின்றுகொண்டிருந்த பழனிச்சாமியிடம் சொத்தை பிரித்து தரும்படி சிவகாமி தகராறு செய்துள்ளார். ஆனால் பழனிச்சாமி சிறிது நாட்கள் கழித்து பிரித்து தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகாமி பழனிச்சாமியை […]
தைல மரக்காட்டில் நேற்று திடீரென தீப்பற்றியுள்ளது . புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக தைல மரக்காடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென தைல மரக்காட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். […]
கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராசு, தர்மராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரதாப்சிங், […]
மது அருந்திவிட்டு மகன் ஊர் சுற்றியதால் மனவேதனை அடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் உள்ள லெட்சுமணன்பட்டியில் வசித்து வருபவர் விவசாயி பாலுகண்ணு. இவருடைய மனைவி 47 வயதுடைய அமுதா. இந்த தம்பதியரின் மகன் 25 வயதுடைய தினேஷ்குமார். இந்தநிலையில் தினேஷ்குமார் சரிவர வேலைக்கு போகாமல் மது அருந்தி கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த தாய் அமுதா கடந்த 5ம் தேதி மருந்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் திருவிழா காரணமாக ஏப்ரல்11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பண்டிகைகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்ததன் காரணமாக பண்டிகைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மண்டகப்படி தாரர்கள் சார்பில் தினந்தோறும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற இருக்கிறது. திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தையும் பக்தர்கள் இந்து […]
அறந்தாங்கி அருகே ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றவிடாமல் தடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எல்.என்.புறத்தில் இருக்கும் செல்வவிநாயகர் கோயில் இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கோவிலின் அறங்காவலர்கள் அம்மையப்பன், கண்ணன் உள்ளிட்டோர் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் அருகில் ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களில் அப்புறப்படுத்த அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்துக்கு இந்து அறநிலையத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதன்பேரில் பொக்லைன் இயந்திரத்துடன் […]
கடன் தொல்லையால் பொன்னமராவதி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமரவாதி அருகே உள்ள கோவில் வீதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்ற நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் திவ்யா கடன் தொல்லையால் மன கவலையில் இருந்துவந்த நிலையில் தனது அறையில் மின் விசிறியில் சேலையை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பொன்னமராவதி […]
புதுக்கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டும் அந்தந்த காவல் நிலைய பகுதிகளில் கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் கணேஷ் நகர் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஜீவா நகர் பஸ் நிறுத்த பகுதியில் மூன்று பேர் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் விசாரித்தனர். இவர்கள் மச்சுவாடியைச் சேர்ந்த 24 […]
இலவச சலவை பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் இலவச சலவை பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் முருகேசன், தாசில்தார் விஸ்வநாதன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், பேரூராட்சி துணை தலைவர்,கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தாசில்தார் விஸ்வநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 23 சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளை வழங்கி வாழ்த்து […]