Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… “புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை”… தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்..!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பண்டிகைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரிக்கு வருகின்றனர். புத்தாண்டு பண்டிகை காரணமாக புதுச்சேரியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வருவார்கள் என்ற காரணத்தினால் கடற்கரை சாலை முழுவதும் கடலில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட ஒரு மணிநேரம் நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு…. மக்கள் மகிழ்ச்சி…!!!

குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று வெளிநாடுகளில் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் இருக்குமா? இருக்காதா என்று மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில்  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரு மணிநேரம் […]

Categories
தேசிய செய்திகள்

பொங்கலுக்குள் குடும்ப தலைவிக்கு ரூ.1,000….. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்குள் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்ததை கொடுக்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். அதன்படி பொங்கல் பண்டிகைக்குள் அரசின் எந்த உதவி தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 34 ரூபாயிலிருந்து 37 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அரிசிக்கான நான்கு மாத பணம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் – முதல்வர் ரங்கசாமி..!!

பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதேபோல மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

4 மாதம் இலவச அரிசிக்கு பணம்..! சிவப்பு அட்டைதாரருக்கு 2,400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1,200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

சிவப்பு அட்டைதாரருக்கு 4 மாத அரிசிக்காக 2400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையில் பெரும் பரபரப்பு…! அதிமுக EX MLA, மாநில செயலாளர் உட்பட 17 பேர் கைது: போலீஸ் அதிரடி !!

புதுச்சேரியில் பந்த் அறிவித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 15 அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இன்று அதிமுக சார்பில் பந்து அறிவிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: போராட்டம்…. பேருந்து ஓடவில்லை…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முடி அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுகவின் முழு அடைப்பு போராட்டத்தால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்….. “இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை”…. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. BF 7 எனப்படும் புதியவகை உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட -19 ஒமிக்கிரான் BF. 7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் சிறப்பு தொகுப்பு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழர் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் மதிப்புள்ள பச்சரிசி, வெள்ளம், முந்திரி மற்றும் திராட்சை அடங்கிய தொகுப்பினை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் புதுச்சேரி அரசு வழங்க உள்ளது. இதற்காக 1.7 […]

Categories
மாநில செய்திகள்

வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள்…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது அதிகரித்து விட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியில் தனியாக விடுவதற்கு பயப்படுகிறார்கள்.  அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி திராவிட மாடல் ஆட்சியின் தலைநகரம்”…. விரைவில் ஆட்சி மாறும்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. ஏனெனில் கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. எனவே புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது. புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். அதன் பிறகு புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்ட வீடுகள்…. பரிதவிக்கும் மக்கள்…!!!!

மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சென்ற 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 10-க்கும் அதிகமான வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசானது சரியாக மேற்கொள்ளாததால், வீடு இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! சென்னைக்கு பேருந்து சேவை ரத்து…. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரியில் இருந்து சென்னை காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த புதுச்சேரி அரசு பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரி, காரைக்காலில் (9,10 ஆம் தேதி ) 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் (9, 10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்அப் டிபியில் ஆளுநர் தமிழிசை”…. அமேசான் கூப்பன் ரீசார்ஜ்…. திடீர் மெசேஜால் பதறிப்போன அமைச்சர்….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா என்பவர் இருக்கிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதன் பிறகு மெசேஜ் அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் டிபியில் ஆளுநர் தமிழிசையின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அமைச்சர் சந்திர பிரியங்கா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி வேலைக்காக மெசேஜ் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகள் முன் சீன்….. நடு ரோட்டில் அலப்பறை செய்த 2k ப்ளூ சட்டை…. தொல்ல தாங்க முடியலப்பா….!!!!!

புதுச்சேரி அடுத்த காலப்பட்டு பகுதியில் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளின் முன் சாலையில் தண்டால் எடுத்து சாகசம் செய்யும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரி காலப்பட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடும் நேரத்தில் சாலையில் சாகசம் செய்யும் வாலிபர்களின் ரகளை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு எதிரே இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக தண்டால் எடுப்பது போன்ற பல்வேறு சாகசங்களை காட்டியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இது கட்டாயம்…. காவல்துறையினருக்கு புதிய உத்தரவு….!!!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார். இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் அமலுக்கு வந்தது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரிக்கு இடம் தர மறுக்கிறார்கள்”…. தமிழக அரசை குற்றம்சாட்டிய கவர்னர் தமிழசை….!!!

புதுச்சேரி அரசு மருத்துவமனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது‌. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து துறை தலைவர்களும், தங்கள் துறைகளுக்கு தேவையான கருவிகள், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது, சிறப்பு மருத்துவர்கள் எத்தனை பேர் வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 11 சிகிச்சை அரங்கங்கள் தயாராக இருந்தும் பயன்படுத்தாமல் உள்ளது. இன்னும் 6 மாதத்தில் அறுவை சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மேலும் 2 மாவட்டங்களில்… இன்றும், நாளையும் விடுமுறை…!!!!

கனமழை எதிரொலியாக கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி & கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. மத்திய அரசு அதிரடி முடிவு…. அமைச்சர் முருகன் வெளியிட்ட மாஸ் தகவல்….!!!

மத்திய அமைச்சர் எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரி வருகை புரிந்துள்ளார். நேற்று மதியம் 12 மணிக்கு அரியூர் வெங்கடாசலம் மருத்துவம் கல்லூரியில் பிரதமர் கனவு திட்டம் குறித்து கலந்த ஆலோசனை செய்தார். அப்போது Modi @ 20 Dreams Meet Delivery என்ற புத்தக கருத்துரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி….. இன்று (04.11.22) சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை..!!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை….. புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் (04, 05) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சற்றுமுன்…! புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் முக்கிய வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நாளை (04.11.2022) […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கனமழை எதிரொலி..! இன்று (03.11.2022) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

மிரட்டும் மழை: இன்று(3.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. எங்கு தெரியுமா..? வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கு இனி அபராதம் கிடையாது…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு…..!!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் பின் அமர்ந்து செல்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி போக்குவரத்து எஸ்பி மாறன் அறிவித்திருந்தார்.இந்நிலையில் அவ்வாறு பயணிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் மூன்று மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்தம் செய்யப்படும் என எச்சரிக்கை தற்போது விடுத்துள்ளார்.இந்த எச்சரிக்கை அறிவிப்பு புதுச்சேரி முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அபராதம் விதைக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மனு அளித்த […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மரில் வேலை… விண்ணப்பங்கள் வரவேற்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட இருக்கின்ற முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பு எண்:JIP/MGE/10/2022/03 பணி: senior manager -1 சம்பளம்; மாதம் 50,000 வயதுவரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும். தகுதி: லைஃப் சயின்ஸ் பாடப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் ஐந்து வருடங்கள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி…. புதுச்சேரி அரசு அதிரடி….!!!!

புதுச்சேரியில் பல்வேறு நிபதனைகளுடன் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.இது பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பணிபுரியும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 2023ம் ஆண்டில் 16 நாட்கள் பொதுவிடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் புதுச்சேரியில் 2023 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பதினாறு நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொங்கல், திருவள்ளூர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு உட்பட 16 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி…. இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் 13 முக்கிய துறைகள் இயங்கி வரும் நிலையில் பல அரசு ஊழியர்களும் அதில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு போனஸ் வழங்கியது.அதேசமயம் மத்திய அரசின் ஒப்புதலின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 34 சதவீத அகலவிலைப்படி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 38 சதவீதமாக DA உயர்த்தி வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி… சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்… காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

புதுச்சேரியில் ஆதார், ரேஷன் அட்டைகளை நடுரோட்டில் கொட்டி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் பிள்ளை சாவடி மீனவ கிராமங்களை கடல் அரிப்பிலிருந்து காப்பதற்காக தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் தமிழக மீனவ பகுதியில் கடல் நீர் உட்பகுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியிலும் கற்கள் கொட்டப்பட வேண்டும் என தமிழக மீனவர்கள் பலமுறை கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 50 புதியவகை மதுபானம் அறிமுகம்….. வெளியான தகவல்….!!!

தீபாவளி பண்டிகை நாளைக்கு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அனைவரும் புத்தாடை, வெடி, ஸ்வீட் வாங்கி வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட், பட்டாசை தாண்டி குறிப்பாக குடிமகன்களின் கொண்டாடமாக இருப்பது சரக்குதான். அந்த அளவுக்கு நாளை டாஸ்மாக் கடைகளில் கூட்டத்துடன் கல்லாவும் கலைக்கட்டும். மதுபிரியர்கள் இன்றிலிருந்தை  மதுவை வாங்க தொடங்கியதால் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் புதுச்சேரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு 50 வகையான […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி தமிழிலேயே மருத்துவ படிப்பு படிக்கலாம்…. அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும் போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால் பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதன் முறையாக மருத்துவ கல்வியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது .இருந்தாலும் அங்கு ஆங்கிலத்தில் தொடர்ந்து படிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்திலும் இந்தியில் தொடர்ந்து படிப்பவர்கள் இந்தியிலும் படிக்கலாம் என அரசு […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டையில் பெயர் உள்ள…. 18 வயது ஆனவர்களுக்கு 500 பணம்… அரசு செம அறிவிப்பு..!!!!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் 4500 வழங்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகள் தீபாவளி பரிசாக ஒரு சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை குட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேஷ்டி செயல்களுக்கு பதிலாக ரூபாய் 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. சிறப்பங்காடி…. “அனைவரது வங்கிக்கணக்கிலும் பணம்”….. முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!

தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதால், அவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். இந்த கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. தற்போது தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நிலை மெல்ல மெல்ல […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கு …. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான விலைப்படி உயர்வு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்… புதுச்சேரி அரசு அறிவிப்பு.!!

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் வழங்கி உள்ளது புதுச்சேரி அரசு. தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா ?….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாசம் 31 ஆம் தேதி பணியில் இருந்தவர்கள், கடந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 76,908 வழங்கப்படும். அதேபோல் முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு1,184 வழங்கப்படும் ஊ என்ற அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

இனி ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1000 அபராதம்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவார் மற்றும் பயணிப்பொறுக்கும் முதன்முறையாக ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டுமல்லாமல் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் வாகனம் ஓட்டும்போது சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு இது […]

Categories
மாநில செய்திகள்

இனி ஹெல்மெட் கட்டாயம்…. “மீறினால் ரூ.1,000 அபராதம்”….. 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து…. அரசு அதிரடி.!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் கட்டாயம், மீறினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் விபத்தினை தவிர்க்கும் :  முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் அனுதினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை படியானது அதிகரிக்கப்படும். இந்த அகவிலைப்படியானது பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இவர்களுக்கு 4% அகலவிலைப்படி உயர்வு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அகல விலைப்படி உயர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜூலை 1ஆம் தேதி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மின்சாரத்துறை தனியார் வசம் போகாது” அரசின் உறுதியால் போராட்டம் வாபஸ்….!!!!

புதுச்சேரியில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் கட்டண வசூல், மின் கணக்கிடும் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது. அதோடு பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் வெட்டும் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின்சார துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு…”மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ்”.. வெளியான தகவல்…!!!!

மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை அரசின் மின் துறையை தனியார் மையமாகும் நடவடிக்கையின் தொடக்கமாக மின்விநியோகம் தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் செப்டம்பர் 28-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மின்துறை  ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் மின்தடையால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருமாம்பாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் எஸ்மா சட்டம் அமல்படுத்த… மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்களை அனுப்பி வைத்த மாநில அரசு…!!!!!

தனியார்மயமாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு செயற்கையாக மின்தடை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையாக பின்விளவை சந்திக்க நேரிடும். மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற மின்துறை ஊழியர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் அரசியல் பரபரப்பு…! முற்றும் பாஜக – என்.ஆர் காங்கிரஸ் மோதல்… சபாநாயகருடன் MLAக்கள் திடீர் சந்திப்பு …!!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ”என்ஆர்” காங்கிரஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு எந்த வித உதவியும் முதலமைச்சர் செய்து தரவில்லை என தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கிருந்தார்கள. கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த போராட்டம் என்பது வலுத்து வருகின்றது. முதலமைச்சருக்கு எதிராகவும் பாஜகவினர் […]

Categories

Tech |