பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் கடந்த 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்ததினத்தை சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டபூர்வ பரிமாற்ற தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில்இன்று (ஆகஸ்ட் 16) அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
Tag: புதுச்சேரி அரசு
தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் அதனை புதுச்சேரி அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கம்பன் விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் “உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் மேடை ஏற ஏற உச்சத்தை பெறுவார். தற்போது உள்ள காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியான போது கூட மூன்று நாட்கள் அரங்குகள் […]
புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆகஸ்ட் 15க்கு பிறகு ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டே பிறகு பள்ளி, கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக ஆளுநர் மற்றும் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்கும் திட்டம் இல்லை. முழுமையாக மக்கள் அனைவருக்கும் […]
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் முழுவதுமாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாள்தோறும் பகல் 12 மணி முதல் மறுநாள் காலை […]
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 17ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை […]
புதுச்சேரி அரசைக் கண்டித்து பாஜகவினர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநில மக்களுக்கு கடந்த 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் கணக்கில் வங்கியில் பணமாக செலுத்த வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் 200 மேற்பட்ட பாஜகவினர் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால் அங்கு பதட்டம் நிலவியது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக இலவச அரிசி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் […]
புதுச்சேரி ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசிக்குப் பதிலாக பணம் செலுத்தப்பட உள்ளது. புதுச்சேரி நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு இலவச அரசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் தர ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கிரண்பேடியின் உத்தரவை செயல்படுத்துமாறு கூறப்பட்டது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கிலோ […]