புதுச்சேரியில் மக்கள் யாரும் அத்தியாவசியம் இன்றி தமிழக பகுதிக்கு சென்று வர வேண்டாம் என எல்லைகளில் போலீசார் கும்பிட்டு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தமிழகம் புதுச்சேரியில் கடந்த 10ஆம் நாள் முதல் நேற்று முன்தினம் காலை வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அத்தியாவசியமின்றி யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதை அடுத்து புதுச்சேரி தமிழக எல்லையான பகுதியான கோரிமேட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு […]
Tag: புதுச்சேரி மாவட்டம்
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில் அவரது குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து எதிரிகளைப் பழி தீர்க்க சொல்லி பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி திப்பு ராயப்பேட்டையை சேர்ந்த தீப்லான் என்பவர் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவித், கௌசிக் பாலசுப்பிரமணி, தணிகை அரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது சிலர் பிணையில் வெளி வந்துள்ளனர். இந்நிலையில் தீப்லானின் பிறந்த நாளன்று […]
புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்ய வந்தவர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிபத்தில் உள்ள மின் மையானம் மற்றும் சுடுகாட்டில் எரியூட்டபடுகிறது. உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியரின் உடலை தகனம் செய்ய கருவடிக்குப்பம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இறுதிச்சடங்கு செய்ய […]
புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் அதில் பயணம் செய்தனர். தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் நேற்று இரவு வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றது. புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் […]
புதுச்சேரியில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், மாமனார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தன் மகளை விழுப்புரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமனார் பத்மநாபன் நடத்தும் நிறுவனத்திற்கு சென்ற ரஞ்சித் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென ஆத்திரமடைந்த ரஞ்சி தனது மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் […]
புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . புதுச்சேரியில் வார்ட் மறு வரையரை பணிகளை முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி அனந்த லட்சுமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரியில் வார்ட் மறுவரையறை பணிகளை விரைந்து முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததைக் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அசோக் […]
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். அவர் இரண்டரை பவுன் தங்க சங்கிலியை அணிந்து கொண்டு அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த கோவில் விழாவில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க சென்ற கமலாவின் கழுத்தில் […]
பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் ரூபிசகாய சாந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார் இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. ஆதலால் இச்சம்பவம் […]
வில்லியனூரில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மணவெளி காசிவிசுவநாதர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வரந்தார். பிரபல ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருந்துள்ளன. இந்நிலையில் இவர் இரவில் வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அரசு சாராய ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று மதனின் மோட்டார் சைக்கிளை […]
நிவர் புயல் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது கடல் சீற்றமாக இருப்பதால் அரசு அறிவுறுத்தலை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்த திரு. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அரசுத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூட்டத்திற்கு […]
புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,698-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் வருவோர் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 559 ஆக உள்ளது. 35,525 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 609- ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அருகே கருங்கோழி வளர்ப்புபில் பட்டதாரி சகோதரர்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். ஒன்றரை கிலோ அளவிலான கருங்கோலி 650 ரூபாய்க்கு விற்கபடுவதாக கூறுகின்றன. புதுச்சேரி குளிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி சகோதரர்கள் அசோக் , வீரப்பன் இரண்டு ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. நாட்டு மாடு, நாட்டு கோழி, நாட்டு ஆடு, ஆகியவற்றை வளர்த்து வரும் இந்த சகோதரர்கள். கடந்த ஆறு மாதங்களாக கருங்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கருங்கோழியின் கறி மற்றும் முட்டைகள் […]
புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்து 5 சிறுமிகளை போதைப்பொருள் கொடுத்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதமங்கலத்தில் கண்ணியப்பன் என்பவர் நடத்தி வரும் வாத்து பண்ணையில் இரண்டு ஆண்டுகளாக கொத்தடிமைகளாக தங்கி வாத்து மேய்க்கும் வேலை செய்து வந்த 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குழந்தைநல மையகுழு மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. 5 சிறுமிகளுடன் மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா விசாரணை நடத்தினர். […]
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் அதிமுக எம்.பி கோகுல கிருஷ்ணன் பேசிய போது தனது முகக்கவசத்தை தலையில் அணிந்துள்ளார். புதுச்சேரியில் ரூ.3.17கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ள லாஸ் பேட்டை காவல் நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா ஈசி.ஆர். சாலையில் நடைபெற்றது.இந்த விழாவில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, எம்.பி.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன் மேடையில் பேசும்போது தனது முகக் கவசத்தை தலையில் அணிந்துள்ளார். இதைக் கண்டவர்கள் எம்.பி. […]
ஊடகத்தில் பணிபுரியும் பெண்களை பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாக பதிவிட்ட எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறையினர் தனது கருத்தைத் திரித்துக் கூறுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
திருமாவளவனின் முழுப் பேச்சையும் பார்த்துவிட்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். ஒருவர் சொல்லும் கருத்தை திசைதிருப்பி பழி சொல்வதை பாஜக சாதுரியமாக செய்யும் என குற்றம் சாட்டிய அவர் அரசியல் தலைவர்கள் மீது பழி சுமத்துவதை பாஜக வாடிக்கையாக வைத்துள்ளதாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 34,336 ஆக உயர்ந்துள்ளது. 29,990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய […]
புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சாலைவரி தொடர்பாக அரசு முடிவு செய்யாததால் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் 2 காலாண்டிற்கான சாலை வரியை தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்று தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. எனினும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கின.
புதுச்சேரி மதகடிப்பட்டு வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகை தந்ததால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மதகடிப்பட்டு சந்தை வாரம்தோறும் செவ்வாய் கிழமை மட்டும் செயல்படும் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட இந்த சந்தை 7 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. சந்தையில் எதிர்பார்த்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தொடர் மழையால் தந்தை முழுவதும் மழைநீர் தேங்கி சுகாதாரமற்ற […]
புதுச்சேரியில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற ஜிம்மர் ஊழியரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் காக்கையின் தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயதாகும் சுப்பிரமணி என்பவர் ஜிப்மரில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் […]
புதுச்சேரியில் சட்டவிரோதமாக முதுநிலைப் படிப்பில் சேர்க்கப்பட்ட 65 பேரின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்த மருத்துவ கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் அவர்கள் பெற்ற முதுநிலை மருத்துவப்பட்டம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பார்க்காமலேயே 65 பேர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. இது பற்றி விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில் 65 பேரின் மாணவர் […]
புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் துப்பு ராயப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் நரசிங்கன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திப்பு ராயப்பேட்டையைச் சேர்ந்த திப்ளான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த திப்ளான் பெயிண்டராக வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதிக்கு திப்ளான் […]