Categories
மாநில செய்திகள்

BREAKING: வேலை இழந்தவர்களுக்கு ரூ.5000 வழங்க உத்தரவு…!!

வேலை இழந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை இழந்த பணியாளர்களுக்கு ரூபாய் 5000 தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை கணக்கில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

5 சிறுமிகளை… 2ஆண்டுகளாக… சீரழித்த கும்பல்…. தமிழகத்தை உலுக்கும் பரபரப்பு …!!

புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்த 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஒரு வீட்டில் சிறுமிகள் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக குழந்தைகள் நல மையத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு – வெளியான அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்றால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்தது. அன்றாட வாழ்வாதாரத்தை தேடி இருந்த பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் அதனை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடன்தொகை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் ஊரடங்கின் போது இயங்காத சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி ரத்து செய்யப்படும் என அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

கரை ஒதுங்கிய மாணவியின் உடல்…. தற்கொலையா? வேறு ஏதும் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

12ம் வகுப்பு மாணவி ஒருவரின் சடலம் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்திலுள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தின் கடற்கரை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கியுள்ளது. இதைப்பார்த்த  அப்பகுதியினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்கால் நகர காவல்துறையினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் நிவேதாவின் சடலத்தை கைபற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒட்டக பால்ல டீ போடு…. வடிவேலுவை மிஞ்சிய இளைஞர்களின் அட்டூழியம்…. 3 பேர் கைது…!!

மதுபோதையில் ஒட்டகப் பாலில் டீ கேட்டு தகராறு செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் கடலூர்-புதுச்சேரி பிரதான சாலையில்  டீ  கடை வைத்துள்ளார். நேற்று இரவு மூன்று இளைஞர்கள் இவரது கடைக்கு வந்து ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த ஊழியர்கள் ஒட்டக பால் இல்லை என கூறியதால் இளைஞர்கள் மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு குடிபோதையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

சட்டை போட்டா தான்…. உங்க கூட வாக்கிங் வருவேன்…. அடம் பிடிக்கும் நாய்…!!

தனது எஜமானுடன் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து வாக்கிங் செல்லும் நாய் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் குமரகுருபள்ளத்தில் வசிப்பவர் அசோக். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று வளர்த்துள்ளார். அதற்கு டாமி என்று பெயர் சூட்டி இருக்கிறார். பொதுவாக நமது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை பாசமாக வளர்ப்பதால் அவை நம் வீட்டின் குழந்தை போல மாறிவிடுகிறது. இவர் ஒரு முறை டாமிக்கு எதார்த்தமாக பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து அழகு […]

Categories
மாநில செய்திகள்

காவல்நிலையம் முன் நடந்த கொடூரம்… மக்களுக்கு பாதுகாப்பு இல்லை… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் காவல் நிலையத்திற்கு முன் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கோரிமேடு பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அவன் எதிராக இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலையத்திற்கு முன்பாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஹேர்டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட பெண்… தாய் இன்றி தவிக்கும் 2 குழந்தைகள்…!!!

புதுச்சேரியில் வாழ்க்கையை வெறுத்த இரண்டு குழந்தைகளின் தாய் தலையில் தடவும் ஹேர்டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை முருகம்பக்கம் நாடார் வீதியில் பாலமுருகன் மற்றும் சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அரியாங்குப்பத்தில் இருக்கின்ற மிட்டாய் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் கடையில் பணியாற்றும் மற்றொரு ஊழியருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் பத்தாம் தேதி திடீரென சுதா மாயமானார். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

2021 ல் பாஜக ஆட்சி அமைக்கும்…. எல்லோருக்கும் வீடு…. கடன் தள்ளுபடி…. எம்.எல்.ஏ வாக்குறுதி…!!!

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைத்தால் பல கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என புதுவை பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜாக மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர், அட்சயா அறக்கட்டளையின் தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக அணியில் சேர்ந்தனர். அப்போது பேசிய சாமிநாதன், பாஜக புதுவையில் 2021ம் வருடம் ஆட்சி அமைத்தால் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு, ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக  […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

‘தொடங்கியது வடகிழக்கு பருவமழை’ – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும். ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

நேற்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் 10 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்த இருப்பதாக தெரிவித்த அவர், அமைச்சரவை கூட்டத்தின் முடிவை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். இதனால் தமிழகத்தைப் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு – அசத்திய அமைச்சரவை …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுகுறித்து இன்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டே இதனை செயல்படுத்த முடிவு செய்யப்படும் தெரிவித்திருக்கின்றார். நீட் தேர்வை பொருத்தவரை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வி.சி.க ஆர்ப்பாட்டம் – மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி…!!

மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி வி.சி.க ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் நூலை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு தொல் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் கொரோனா தடுப்பு ஊசி இலவசம்…!!

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில்  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் திரு நாராயண சாமி குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பட்டினச்சேரி, காரைக்கால் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட 10  கிராமங்களில் மீனவர்களுக்காக கட்டப்பட்ட பணிமனையை முதலமைச்சர் திரு நாராயண சாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை முதல் மீண்டும் – அரசு அதிரடி உத்தரவு …!!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. பொருளாதார நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசும் மாநிலத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தற்போது நாளை முதல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்து அரசு செயலாளர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் விதித்து இருந்த […]

Categories
சென்னை புதுச்சேரி வானிலை

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: வடிகால் வசதி இல்லாத அவலம்…!!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்…!!

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தனியார் பேருந்துகளின் சங்கத்தின் தலைவர் கண்ணன் தெரிவித்து உள்ளார். பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ளூர் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேசமயம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருவாய் குறைந்து உள்ளதால் சாலை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம்…!!

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறி உள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்க, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 38 லட்சம் ரூபாயை இழந்து முடிவில் தற்கொலை செய்து கொண்டார். இது ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக தமிழகத்தில் நடைபெறும் நான்காவது தற்கொலையாகும். ஊரு ஒதுக்குப்புறத்தில்  அல்லது மதுபான […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடரும் தற்கொலை…!!

புதுச்சேரியில்  ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடனாளியான இளைஞர் ஒருவர் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு  தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி கோர்கோடு  பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் சிம்கார்டு விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால்  போதிய வருமானம் இல்லாததால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்து உள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையானவர் பலரிடம் கடனாகப் பணம் பெற்று ரம்மியில் விளையாடி தோல்வியடைந்துள்ளார். கடன் தொல்லையால் குடும்பத்தில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

லஞ்சம் பெற்ற நகராட்சி பொறியாளர்…!!

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த தேங்காய் தட்டு பகுதியை சேர்ந்தவர் இளந்திரையன். இவர் தேங்காய் தட்டு பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல், ஜல்லி, கற்களை வீட்டிற்கு முன் கொட்டி இருந்தார். வீதியில் கொட்டியதற்கு   நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை இளந்திரையினர்  அணுகியபோது  அவர் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
கொரோனா புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாது கடைப் பிடிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  570 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் – சுற்றுலா பயணிகள் பங்கேற்பு…!!

புதுச்சேரியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமில் சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். புதுச்சேரியில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 550 கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கடற்கரை சாலையில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை […]

Categories
நாகப்பட்டினம் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாகை, பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு…!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மூன்றே மாதங்களில் சேதமடைந்த படுகை அணை…!!

இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் அணையின் பக்கவாட்டில் சரிந்தது என கிராம மக்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கெட்டிப்பட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 6.30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட படுகை அணை மூன்றே மாதங்களில் சேதமடைந்துள்ளது. இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் அணையின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

Categories
கொரோனா

புதுச்சேரியில் 31,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 559 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் திங்கட்கிழமை கூடும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு….!

புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அக்டோபர் 8  முதல் மீண்டும் வகுப்புகள் துவங்கின. கடந்த 5 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான இருக்கைகள் தயார் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிலையில் வியாழக்கிழமை முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 3 நாட்கள், 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 3 நாட்கள் என வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் 1 […]

Categories
அரசியல்

பண்டிகை காலங்களில்… இனி துணிகள் கிடையாது… அதற்கு பதில் வேறொன்று… கவர்னர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் பண்டிகை காலங்களில் மக்களுக்கு இலவச துளிகள் வழங்குவதற்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று கவர்னர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச துணிகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் வரை இருப்பதால் அவர்களுக்கு இலவச துணிகள் வழங்குவது குறித்து புதுச்சேரி அரசு சார்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை அவர் மத்திய […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பல மாநிலங்கள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்க முடியாத நிலை…!!

ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி விட்டதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருக்கிறார். நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியிருப்பது பலனளிக்காது என்று அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியிடமிருந்து மாநிலங்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே கடன் வாங்க முடியும் என்பதை சுட்டி காட்டியிருக்கும் நாராயணசாமி பல மாநிலங்கள் ஏற்கனவே இந்த அளவை எட்டி விட்டதாக கூறியிருக்கிறார். எனவே […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்…!!

புதுச்சேரியில் சக்கரபாணி ஆற்றில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த கிளீனரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வில்லியனூர்  சக்கரபாணி ஆற்றில் கிளீனர் வெட்டப்பட்டு  உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது ஐய்யங்குட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பதும், காரைக்காலில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி என்பது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் உ.பி. பாலியல் சம்பவத்தை கண்டித்து பேரணி…!!

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் மஹிலா காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து  புறப்பட்ட பேரணியில் முதலமைச்சர் திரு நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய  முதலமைச்சர்  நாராயணசாமி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பணியிலிருந்த செவிலியரை தாக்கிய காவலரை கைது செய்க – மருத்துவர்கள் போராட்டம்…!!

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் போராட்டம். புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை தாக்கிய காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரத்தை கைது செய்யக்கோரி மூன்றாவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்  புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பழமையான பஞ்சு ஆலைகளை திறக்க வலியுறுத்தல்…!!

புதுச்சேரியில் மூடப்பட்ட பழமையான சுதேசி பாரதி ஏ.எஃப்.டி பஞ்சு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிஐடியு  தொழிற்சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். புதுச்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க பஞ்சாலைகளான சுதேசி, பாரதி மற்றும்  ஏ.எஃப்.டி பஞ்சாலைகள் சமீபத்தில் மூடப்பட்டன. இதற்கான அறிவிப்பை பஞ்சு ஆலையின் மேலாண் இயக்குனர் வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில்  மூடப்பட்ட பஞ்சாலைகள் திறக்க வலியுறுத்தி  பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பஞ்சாலைகள் மூடும் அறிவிப்பை திரும்ப பெறுக – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்…!!

புதுச்சேரியில் பஞ்சு ஆலைகளை  மூடும் அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஏ.எஃப்.டி சுதேசி மற்றும் பாரதி பஞ்சு ஆலைகள் இயங்கி வந்தன. கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் பஞ்சு ஆலைகளை இயக்க சிரமம் ஏற்பட்டதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.எஃப்.டி பஞ்சு ஆலையை முற்றிலும் மூட அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் […]

Categories
மாநில செய்திகள்

புதுவைக்கு மது பிரியர்கள் வருவார்களா?… இன்று முதல் திறக்கப்பட்ட மது பார்கள்…!!!

புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று மது பார்களை திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மாலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து, மதுக்கடைகள், மது பார்கள், உணவகங்கள், விடுதிகள், வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு மத்திய அரசு கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை […]

Categories
புதுச்சேரி பேட்டி மாவட்ட செய்திகள்

பாரத ரத்னா விருது கொடுங்க…. வேண்டுகோள் வைத்த புதுச்சேரி முதல்வர்….!!

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்த்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களைப் பாடி உலகப்புகழ் பெற்றவர் எஸ்.பி.பி.கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்ட அவர் அதற்குப் பின் உடல்நலக்குறைவால் காலமானார். திரை உலகத்தினர் மட்டுமின்றி அவர் இறப்பிற்கு இந்த நாடே கண்ணீர் விட்டது . அவர் ஆத்மா ஆத்மா சாந்தி அடைய […]

Categories
Uncategorized புதுச்சேரி மாநில செய்திகள்

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளி திறப்பு முதலமைச்சர் அறிவிப்பு…!!

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்து முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கருத்தாய்வு கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதன் கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

74 சிலைகள் பறிமுதல் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை..!!

புதுச்சேரியில் தனியார் கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 கடத்தல் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில்  உள்ள தனியார் கட்டடத்தில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டது. எழுபத்து நான்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

விலை பேசுவதில் தகராறு டாட்டூ கடைக்காரர் மீது தாக்குதல்..!!

புதுச்சேரியில் டாட்டூ நிலையத்தில் விலை பேசுவதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. புதுச்சேரி  சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் சரவணன் காமராஜ் நகர் சாலையில் டாட்டூ மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரவணன் மற்றும் ஊழியர்கள் 4 பேர் நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் டாட்டூஸ் போடுவதில் விலை நிர்ணயம் தொடர்பாக பிரச்சினை செய்தன. இதனால் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி ஓட்டுநர்கள் போராட்டம்..!!

ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு   சுற்றுலா வாகனங்களுக்கான போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி போராட்டம். கொரோனா ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்கள் ஓட்ட படாததால் போக்குவரத்து வரியை ரத்து செய்ய கோரி புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாயில் கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

போலீசாருக்கு தண்ணிர் காட்டிவிட்டு… 26 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய குற்றவாளி…!!

27 வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்கால் அருகே வைத்து சிதம்பரத்தை சேர்ந்த 17 பேர் 1989 ஆம் வருடம் பெண்ணொருவரை கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர். அச்சமயம் திருநள்ளாறு காவல்துறையினர் அவர்களை தடுத்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 17 பேரில் ஒருவரான சந்திரசேகர் என்பவர் 1993-ஆம் வருடம் காவல்துறையினருக்கு தெரியாமல் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் தேடப்படும் குற்றவாளி என […]

Categories
தேசிய செய்திகள்

29 ஆம் தேதி… வருகிறது தேர்வு முடிவுகள்… ஜிப்மர் கல்லூரி அறிவிப்பு..!!

ஜிப்மர் மருத்துவமனையில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வருகின்ற 29ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  இயங்கி வரும் இக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான நுழைவுத்தேர்வு சென்ற 22ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நுழைவுத் தேர்வினை சுமார் 4 ஆயிரம் பேர் எழுதியுள்ள […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..!!

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாடங்கள் நடத்தப்படாத நிலையில் பயிற்சி பள்ளி நிர்வாகத்தில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பு..!!

புதுச்சேரியில் நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் கங்காதரர். இவர் வீடு முன்பு கார்  நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கார் திடீரென நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பாக பெரியகடை காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பார்த்த போது கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பெரியகடை காவல்துறையினர் வழக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தவறிவிட்டது..!!

கொரோனா நெருக்கடியில் இருந்து மத்திய அரசு மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மத்திய அரசின் தவறான பொருளாதார அணுகுமுறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக திருமாவளவன், மோடி அரசு கொரோனா  நெருக்கடியில் இருந்து மக்களை காப்பதற்கு தவறிவிட்டது. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 பணம் வழங்கப்பட்டது..!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு படி நேற்று வழங்கப்பட்டது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப் பட்டதால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியும், […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

சண்டே மார்க்கெட் திறக்க வியாபாரிகள் கோரிக்கை…!!

புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி காந்தி வீதி சாலையில் கடைகளை அமைத்து வியாபாரிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் காந்தி வீதியில் பல ஆண்டுகளாக சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகளும் கடைகளை போட்டு விற்பனை செய்கின்றனர். கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில். சண்டை மார்க்கெட்டையும் […]

Categories
கல்வி புதுச்சேரி மாநில செய்திகள்

கல்லூரி இறுதித் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்…!!

புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை  நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளர் கொரோனாவால் மரணம்..!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியம் (வயது 70) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.. இவர் 1985-1990 வரை உருளையன் பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.. பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆடல் பாடல் இல்லாமல் எளிமையாக ஓணம் கொண்டாடிய மலையாள மக்கள்…!!

புதுச்சேரியில் மலையாள மக்கள் வீட்டிலேயே எளிமையாக ஓணம் பண்டிகையை கொண்டாடினர். புதுச்சேரியில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் கூடி ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடினார். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைக்காமல் ஆடல்பாடல் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் இன்றி அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை அவர்கள் கொண்டாடினர்.

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு 4.O”… புதுச்சேரியில் என்னென்ன தளர்வு…!!

நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. தற்பொழுது வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டு நாளையோடு முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மத்திய, மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மை தலைவர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு ஏற்கனவே […]

Categories

Tech |