Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும்: புதுச்சேரி முதல்வர்!

தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 வது நாளாக அமலில் உள்ளது. இதை நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதல் படி அனைத்து மாநிலங்களிலும் சில ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் வழக்கம்போல் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன்கடை, பேக்கரி, ஓட்டல்கள், எலக்ட்ரிக்கல், டூவீலர் மெக்கானிக், செல்போன் கடைகள் என […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மேலும் நீடித்தால் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்: புதுச்சேரி முதல்வர் ..!

மே.17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிசாலைகள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. 21 நாட்களை […]

Categories
தேசிய செய்திகள்

வருவாய் ஈட்ட முடியாவிட்டால்… “அரசு ஊழியர்களின் சம்பளம் கட்”: புதுச்சேரி அரசு கொடுத்த ஷாக்..!

புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி..!

புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” வெளிமாநில பொதுமக்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் மே 3ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார். நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி மதுபான விற்பனை… 100 கடைகளின் உரிமம் ரத்து: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அதிரடி!

ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மதுபானம் விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுவரை நடத்திய மொத்தம் மற்றும் சில்லறை மதுவிற்பனையாளர்கள் 2018-19, 2019-20ம் ஆண்டுக்கான விற்பனை கணக்கை உடனே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், பெரம்பலூர், மதுரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும், காற்றுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

‘கல்விக்கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தராதீங்க’: புதுச்சேரி அரசு…!

புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம், பேருந்துக் கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டது. பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு […]

Categories
மாநில செய்திகள்

குடிகார திருட்டு பாய்ஸ்…! மதுபான குடோனை திருடி காலி செய்தனர்…!!

ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளும் மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருக்கும் தனியார் மதுபான கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்த பொழுது 20,000 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், பல […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ……!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் 7447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 643 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 239 உயிரிழப்புகளை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1574 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 110 பேர் மரணமடைந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா… 7 ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் 6,412 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இதில் 199 பேர் பலியாகியுள்ள நிலையில், 504 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்றுவரை 5 […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு நல்ல செய்தி….நாளை முதல் அரசு அறிவித்த பொருட்கள் வழங்கப்படும்…!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்கள் புதுச்சேரியில் நாளை முதல் வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார் புதுச்சேரியில் சமூக நலத்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் கந்தசாமியின் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் “கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி 1 கிலோ பருப்பு என்ற அளவில் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மேற்கண்ட பொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…. பல்வேறு இடங்களில் கனமழை!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி,ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வானம் தெளிவாக […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் காலை 6 – பிற்பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவு!

புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக மூன்று பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதித்த அரியங்குப்பம் பகுதியில் 21 காவலர்கள் தனிமைப்படுத்திகொள்ள உத்தரவு!

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக மூன்று பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வேலைக்கு வராதீங்க, சம்பளம் உண்டு…. புதுவையில் 21 போலீசுக்கு உத்தரவு …!!

புதுசேரியில் 21 காவலர்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 4 பேருக்கு கொரோனா நோயால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதித்த 3 பேர் அரியாங்குப்பம் பகுதியிலும், ஒருவர் திருவட்டார் பகுதியிலும் வாசிக்கக்கூடியவர். இந்நிலையில் அந்தப் பகுதியில் இருக்க கூடிய 2 காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 காவலர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டு இருக்கின்றது. அரியாங்குப்பம், திருவட்டார் பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக இரண்டு பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம்: 3 மாதங்கள் வாடகை வசூலிக்க உரிமையாளர்களுக்கு தடை விதிக்க முடிவு: புதுச்சேரி முதல்வர்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 3 மாதத்திற்கு வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக்கூடாது என உத்தரவிட முடிவெடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் கூறியதாவது, ” டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மதக்கூட்டத்தில் பங்கேற்ற 6 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல, காரைக்காலில் 3 பேரை கண்டறிந்துள்ளதாக கூறினார். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார். அவர்களின் ரத்த மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா…. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல்!

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BIG BREAKING : 9ஆம் வகுப்பு வரை ”ஆல் பாஸ்” புதுவை அரசு அதிரடி …!!

புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. புதுச்சேரியில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பிரதமருடைய வேண்டுகோளுக்கிணங்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் பின்பற்றப்படும். இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம்..!

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்தந்த மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணி […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

போலீஸோட சண்டை போடாதீங்க…. துணை ராணுவம் வரும் – புதுவை முதல்வர் எச்சரிக்கை …!!

வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பல்வேறு மாநில அரசு அதிருப்தி அடைந்திருந்தன. பிரதமர் மோடி கூட வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை – நாராயணசாமி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை தொடக்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதுபானக் கடைகள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் 31ம் தேதி வரைதொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடல் … முதல்வர் உத்தரவு …!!

புதுச்சேரியில் இன்று மாலை முதல் மதுக்கடைகளை மூட முதலவர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் நிலையில் தற்போது முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்தித்தார். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாகக் கடைப் பிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்று இரவு 9 முதல்  […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”புதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு ” முதல்வர் அதிரடி உத்தரவு …!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ….!!

புதுச்சேரியிலும் வருகின்ற 31ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் இதேபோன்று பள்ளி , திரையரங்கு ,  பெரிய மால்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

இங்க 16 நாள் ….. அங்க ”செம ட்ரீட்”….. புதுவை மாணவர்கள் மெர்சல் ….!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார். இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலமான புதுவையிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை […]

Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 31ஆம் தேதி வரை 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் இத்தனை நாள் தான் விடுமுறை என்று சொல்லாமல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரி […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து” நடுங்கும் நாராயணசாமி ….!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உத்தரவை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
சினிமா புதுச்சேரி மாநில செய்திகள்

நடிகர் ஆனந்தராஜ் தம்பி தற்கொலை திடீர் திருப்பம்..! இருவர் கைது.!!

பிரபல நடிகர் ஆனந்தராஜ்யின்  தம்பி கனகசபை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது அண்ணன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் கனகசபை(50) இவருக்கு திருமணம் ஆகவில்லை. நடிகர் ஆனந்தராஜ் அவர்களின் தம்பி கனகசபை ஆவார். தொழிலதிபரான  இவர் ஏல சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த கனகசபை கடந்த 5- தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பலமுறை உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலன்… குடும்பத்தோடு கர்ப்பிணி பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்!

புதுச்சேரியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவுப்பெண்ணை கர்ப்பமாகிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.  புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகருக்கு அருகே உள்ள இரண்டாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவருக்கு  20 வயதில் ஆனந்தி என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆனந்தி நர்சிங் படிப்பை படித்து முடித்துவிட்டு, வேலை ஏதும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மஞ்சினி நகர் பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான கோபி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய +12 பொதுத்தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இது முழுக்க முழுக்க புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. இப்பொதுத்தேர்வை 8.35 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். மாணவர்களிடையே முறைகேடுகளை தவிர்க்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 19,000 க்கு மேற்பட்ட தனித்தேர்வர்களும் இப்பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் புதிய படத்திட்டம் பழய பாடத்திட்டம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”அரிசிக்கு பதில் பணம் – ஆளுநர் உத்தரவு செல்லும்” நீதிமன்றம் அதிரடி …!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரிசிக்குப் பதில் பணம் வழங்க அங்குள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணைநிலை ஆளுநர் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆளுநரின் உத்தரவை எதிர்த்து முதல் அமைச்சர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் , மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு முதல்வருக்கு அடிப்படை உரிமை கிடையாது என்று […]

Categories

Tech |