Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணம் முடித்து 6 நாள்….. புதுமண தம்பதி தற்கொலை….. விருந்துக்குச் சென்ற இடத்தில் விபரீதம்….!!!!

திருமணம் முடிந்த ஆறு நாட்களில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (30). கட்டட மேஸ்திரியான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் கடந்த செப். 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமாகி இருவரும் கடந்த 12ம் விருந்திற்காக சந்தியாவின் அம்மா வீட்டிற்கு சென்றனர். அங்கேயே சில நாட்கள் புதுமண தம்பதியினர் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று நடைபெற்ற விருந்திற்கு மணமகனின் பெற்றோரும் […]

Categories
உலக செய்திகள்

புதுமண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா?…. வைரல் புகைப்படம்….!!!

குரோஷியாவை சேர்ந்த Kristijan Ilicic மற்றும் அவர் மனைவி Andrea Trgovcevic ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதி Northwest Africa வில் உள்ள Mauritania ஹனிமூனுக்காக சென்றனர். தங்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 70 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடிய ரயிலில் போட்டோஷூட் நடத்தினர். இந்த ரயிலில் 200 பெட்டிகள் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது தூதுகள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும். […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை?…. திருமணம் ஆன 3 நாட்களுக்கு… ‘அது’ போகக்கூடாது….!!!!

இந்தோனேசியாவில் திருமணமான முதல் மூன்று நாட்கள் புதுமண தம்பதி கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது யாராலயும் நம்ப முடியாத ஒன்றுதான். ஆனால் இதுதான் உண்மை. திடாங் பழங்குடியின மக்கள்தான் இந்த வினோத நடை முறையை பின்பற்றுகின்றனர். இந்த மூன்று நாட்களில் கழிவறையைப் பயன் படுத்தினால் தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்படும்,ஒருவருக்கொருவர் துரோகம் செய்தல் மற்றும் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்படும் என்றும் நம்புகின்றனர். அதனால் திருமணம் ஆன முதல் 3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல கூடாது. […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க இருந்துடா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க”…. திருமணமான கையோடு ஆம்புலன்ஸில் ஊர்வலம்…. நடந்தது என்ன?….!!!!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள கட்டணம் பகுதியில் புதிதாக திருமணமான ஜோடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் உரிமையாளருக்கு மோட்டார் வாகனத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகன சட்டப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன்னுடைய உரிமத்தை இழக்கும் அளவுக்கு சென்றுள்ளார். இந்த விவகாரம் கேரளாவின் சுகாதாரத் துறை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலை தீபாவளிக்கு சென்ற புதுமண தம்பதி… ஊருக்கு திரும்பும் போது நடந்த கொடூரம்… 2 மாதத்தில் முடிந்த வாழ்க்கை…!!!

தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதால் புதுமண தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு செல்லூர் என்ற கிராமத்தில் 25 வயதுடைய ராமர் என்பவர் வசித்துவருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவி நதியா என்பவருடன் தாம்பரத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ராமர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊருக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசளித்த தோழிகள்…!!

திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயத்தை பரிசாக அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. வெங்காயத்தை உழைக்காமலேயே  கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல் அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக வழங்கினார். விலை உயர்வை உணர்த்தும் வகையில்  வெங்காயத்தை பரிசாக வழங்கப்பட்ட இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக […]

Categories

Tech |