ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் மக்கள் பயணிக்கும் வசதி குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டமானது முதல்வர் தலைமையில் காலை சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மோட்டார் இல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை […]
Tag: புறநகர் ரயில்
திமுக அரசின் ஒரு வருட சாதனையை விளக்கும் விதமாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரை வழங்கினார். அப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதில் குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை அமைக்க ஆய்வு செய்யப்படும் அறிவித்துள்ளார். மேலும் […]
வரும் நவம்பர் 4-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவதுதான். காற்று மாசு மற்றும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதே போல இந்த ஆண்டும் சில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க மற்றும் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயிலில் செல்பவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிகள் […]
மகாராஷ்டிராவில் மீண்டும் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை உருவானால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா குறைந்து கொண்டு வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்கள் வரும் 15ம் தேதி முதல் மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 15ஆம் தேதி முதல் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும் பயணிக்கலாம் என்றும், முக்கிய […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
நாளை முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை 401 ஆக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னை – அரக்கோணம் மார்க்கமாக 147 சேவைகள், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கமாக 60 சேவைகள், கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கமாக 136 சேவைகள், கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் 52 சேவைகள் இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் […]