யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -சூலூர் பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
Tag: புறநகர் ரயில் சேவை
அரக்கோணம் யார்டில் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மூர் மார்கெட் -அரக்கோணம் காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடம்பத்தூர் -அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதனைப்போலவே மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் திருவள்ளூர் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் அகற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தொடர்ந்து சென்னை புறநகர் ரயில்களில் நாளை மறுநாள் முதல் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பு பயணிகள் மற்றும் பொதுமக்கள் எந்த […]
தொடர் கனமழை காரணமாக நாளை சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை புறநகர் ரயில் சேவைகளான சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும் பயணிக்கலாம் என்றும், முக்கிய […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும் பயணிக்கலாம் என்றும், முக்கிய […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. […]
சென்னை புறநகர் ரயிலில் நேரம் கட்டுப்பாடு இன்றி பெண்கள், குழந்தைகள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது கொரனா பரவல் காரணமாக ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை கடந்த அக்டோபர் 5-ம் தேதி சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முதலில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயிலில் நேரம் கட்டுப்பாடின்றி பெண்கள் குழந்தைகள் […]
சென்னை புறநகர் ரயில் வெளியில் நாளை முதல் அனைத்து நேரங்களிலும் பெண்கள் அனைவரும் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த தமிழக அரசு எந்த […]