பிரித்தானியாவுக்குள் ஆங்கில கால்வாயைக் கடந்து வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களை ஆப்பிரிக்க நாட்டின் ருவாண்டாவிற்கு அனுப்ப ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பில் “இதற்காக அந்நாட்டுடன் பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரீத்தி பட்டேலின் Nationality and Borders bill என்னும் மசோதா நிறுவனத்திற்கான அமைச்சர்கள் புலம்பெயர்வோரை […]
Tag: புலம்பெயர்வோர்
புலம்பெயர்வோரின் வரவினால் தான் ஜெர்மனியின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஜெர்மனியில் புலம்பெயர்தல் கடந்த 50 வருடங்களில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று Mediendienst Integration அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, வெளிநாட்டவர்கள் ஜெர்மனிக்கு புலம்பெயராமல் இருந்திருந்தால் அந்நாட்டின் மக்கள் தொகையானது 1950 மற்றும் 70க்கு இடைப்பட்ட காலங்களில் மட்டுமே அதிகரித்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் குறைவான குழந்தை பிறப்பு விகிதம், முதுமையடைதல் போன்ற காரணங்களால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு […]
பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க காவல்துறையினர் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறை செயலர் முன்வைத்துள்ளார். பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர். இதனை தடுப்பதற்காக பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அதாவது புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகை கொடுத்தும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து நுழைய முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே பிரித்தானிய காவல்துறையினர் பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து […]
சட்டத்திற்கு புறம்பாக புலம்பெயர்வோரை படகில் வைத்து கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெல்ஜியத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி Svanic என்ற மீன்பிடி படகு ஒன்று வடகடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. அதிலும் 60 ஆண்டுகள் பழமையான அந்த படகானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதில் அல்பேனிய நாட்டைச் சேர்ந்த 69 புலம்பெயர்வோர்கள் மற்றும் படகை ஓட்டுபவர் […]
படகுகள் விற்பனை செய்யமாட்டோம் என விளையாட்டு பொருட்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்குள் புலம்பெயர்வோர் பிரான்சில் இருந்து படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து உள்ளே நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் படகுகளை பயன்படுத்துகின்றனர். அந்த படகுகளில் Decathlon என்னும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் படகுகளும் காணப்படுகிறது. இவைகள் படகுப்போட்டிகளுக்காக தயாரிக்கப்படுகின்றன. இவற்றை புலம்பெயர்வோர் வாங்கி அதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்குள் நுழையும் முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்து […]
கனடா அரசு தங்கள் குடிமக்களின் குடும்பத்தினர் என்ற அடிப்படையில் சுமார் ஒரு லட்சம் நபர்களை ஒவ்வொரு வருடமும் நாட்டிற்குள் வரவேற்கிறது. கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி போன்ற குடும்பத்தினர் மட்டுமில்லாமல் சில முக்கிய சூழ்நிலைகளில், உறவினர்களையும் கனடா, தங்கள் நாட்டில் புலம் பெயர அனுமதியளிக்கிறது. கனடாவில் வாழும் குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமையுடையவர்கள் போன்றவர்களில், 18 வயதுக்கு அதிகமானவர்கள் தங்கள் குடும்பத்தினர் குடியுரிமை பெறுவதற்கு ஸ்பான்சர் செய்ய முடியும். […]
பிரிட்டன் அரசிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பின்பும், பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு படையினர் புலம்பெயரும் மக்களை நாட்டிற்குள் விட்டுச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு தங்கள் நாட்டிற்குள் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சட்டவிரோதமாக வருவதை தடுக்க அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினருக்கு 54 பில்லியன் பவுண்டுகள் கொடுத்திருக்கிறது. அதன் பின்பும் பிரான்ஸின் கடற்படையினர் புலம்பெயர்ந்த மக்களை பிரிட்டன் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டுச்செல்வதாக தெரிய வந்துள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனம், இக்காட்சியை வீடியோ எடுத்திருக்கிறது. அதில், ஒரு பத்திரிகையாளர், பிரான்ஸ் […]