ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்வாமாவின் கடூரா பகுதியில் வெளியூர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையடி குண்டுகளை வீசியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறது என காஷ்மீர் மண்டலம் காவல்துறை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மனோஜ் சின்ஹா கொடூர தாக்குதலுக்கு கண்டனம் […]
Tag: புல்வாமா
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இல்லத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் மனைவி உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி பயாஸ் அகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி ராஜ பேகம் மற்றும் மகள் ராஃபியா. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிறப்பு அதிகாரி இல்லத்தை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். […]
2018 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்போது ராணுவத்தில் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018 இல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் என்பவர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக 2019ஆம் ஆண்டு ஷவுர்யா சக்ரா என்ற விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ வீரரின் மனைவி நிக்கிதா கவுல் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அது என்னவென்றால் அவரும், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்துவிட்டு […]
ஜம்மு- காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை ஒழிக்க, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து கூட்டுப்படைகளாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. சமீபகாலமாக நடந்த தேடுதல் வேட்டையின் போது நிறைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தநிலையில், புல்வாமா மாவட்டம் கூசு என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி […]
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின், சோர்பூர், பூஞ்ச, புல்வாமா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் தீவிரவாத ஊடுருவல் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. கடந்த முறை நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவப்படை வீரர்கள் மரணமடைந்தனர். இந்த நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு […]
ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து ரகசிய தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, திரால் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு […]