சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் […]
Tag: புழல் சிறை
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]
தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்குப் பிறகு ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றக்காவலில் பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு ஜெயக்குமார் மாற்றப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் 4 பேரை விடுவிக்க சீமான் வலியுறுத்தியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி ஈழத்தாயகத்தின் முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் மற்றும் முகமது கலில் ஆகிய மீனவர்கள் 4 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்து இரண்டு மாதங்களை தாண்டி சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் […]
சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டெக்னிக்கல் ஆபீசர், வயர் மேன் கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு, ஐடிஐ வயது: 32 க்குள் விண்ணப்ப கட்டணம் இல்லை சம்பளம்: ரூ.18,200 – ரூ .57,900 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 18 கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, புழல், சென்னை 66. தொலைபேசி எண்: 044-26590615 என்ற முகவரிக்கு ஜனவரி 15 விண்ணப்பம் வந்து சேரவேண்டும்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்களை, வரும் 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்பகுதிக்குள், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு என்ஜின் பழுதானதோடு, பலத்த காற்றும் வீசியதால், படகு திசைமாறி இந்திய கடற்பகுதிக்கு அவர்கள் வந்தனர். பாஸ்போர்ட் இல்லாமல், அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் வந்த அந்த 3 பேரையும், […]
தொழிற்சாலைகளில் புகுந்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் புகுந்து அலுமினியம் அச்சுகள் திருடிய ஆவடியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ், அம்பத்தூரைச் சேர்ந்த பாபு, மற்றும் 17 சிறுவன் ஆகிய ஐந்து பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.80000 பணம், 60 அலுமினிய அச்சுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுவன் மட்டும் […]
சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அவரது கள்ளக்காதலி ராணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி மார்க்கெட் சங்கர் அண்மையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் கள்ளக்காதலி ராணி, ராணியின் மகன் திலீப் குமார், சங்கரின் கூட்டாளி தினகரன் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் […]
புழல் சிறையில் அயனாவரம் சிறுமி வழக்கில் தண்டனை பெற்று வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி குற்றவாளிகள் 17 பேரும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் […]