புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். கிராம்பு அதனுடைய தனித்துவமான வாசத்துக்கும், காரத்திற்கும் சிறப்பு பெற்றது ஆகும். தஞ்சாவூர் நெட்டிவேலை: ராஜராஜசோழனின் அரண்மனையை அலங்கரித்த ஒரு பெருமையை கொண்டிருக்கும் நெட்டி தாவரத்திலிருந்து உருவானதுதான் நெட்டி சிற்பக்கலை. நரசிங்கப் பேட்டை நாதஸ்வரம்: நாதஸ்வரம் “ஆச்சமரத்தால்” ஆனது. முன்பகுதியான அனுசு, வாகை மரத்தால் ஆனது. அதன்பின் காவிரி, கொள்ளிடம் […]
Tag: புவிசார் குறியீடு
புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொருட்களின் விற்பனை கண்காட்சி சென்னையில் மூன்று நாட்கள் நடக்கிறது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பெருமைப்பட வேண்டும். நாம் தயாரிக்கும் பொருள்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் விதமாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு தலைமை அலுவலகம் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் புவிசார் குறியீடு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் அந்த பொருளை வேறு எந்த இடத்திலும் தயாரிக்கக்கூடாது. அதோடு புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான ஏற்றுமதியும் அதிகரிக்கும். இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முதன்முதலாக காஷ்மீரில் விளைவிக்கப்படும் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் வீணை, கோவை வெட் கிரைண்டர், […]
பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உளவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அமைச்சர் பேசிய போது பாரம்பரிய நெல் ரகங்களை அரசின் சிறப்பு அங்காடிகளில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கின்றார். மேலும் தமிழகத்தில் உள்ள 286 சேமிப்பு கிடங்குகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாரம்பரிய நெல் ரகங்களை அரசின் சிறப்பு அங்காடிகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழகத்தில் 286 சேமிப்புக் கிடங்குகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் உலகப் பிரசித்தி பெற்றது. அதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சாக்லேட்டுகள் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்-க்கு புவிசார் குறியீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இந்த பாரம்பரிய ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. சுற்றுலா தலமான ஊட்டியில் சீசன் நேரத்தில் சுமார் 5 லட்சம் […]
வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடினை வழங்கி இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் என்ற பகுதியில் வெள்ளை வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெங்காயம் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது. மேலும் மருத்துவத் தன்மை கொண்ட இந்த வெங்காயமானது இன்சுலினை சுரக்கின்ற தன்மை கொண்டது ஆகும். இந்நிலையில் வேளாண்மைதுறை மற்றும் கொங்கன் எனும் பல்கலைக்கழகம் சேர்ந்து இந்த வெங்காயத்திற்கு புவிசார் குறியீடினை வழங்ககோரி கடந்த 2019-ஆம் […]
புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம், ஈத்தாமொழி நெட்டை தென்னை, தோடா மக்களின் கைவண்ண வேலைப்பாடு மற்றும் பத்தமடை பாய் ஆகிய பாரம்பரிய பொருட்களுக்கு அஞ்சல் உறை வழங்கி அஞ்சல் துறை கௌரவித்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா@75 திட்டத்தை நினைவு கூறும் வகையில் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் அங்கீகாரத்தின் அடையாளமாகவும், தமிழ்நாடு புவிசார் குறியீடு தயாரிப்புகளின் 3 சிறப்பு அஞ்சல் உறைகளான பவானி ஜமுக்காளம், தோடா எம்பிராய்டரி, ஆரணி பட்டு போன்றவைகளுக்கு அஞ்சல் […]
முள்ளு கத்தரி காய்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்க தோட்டக்கலையின் சார்பில் திட்டம் தீட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யக்கூடிய முள்ளு கத்தரிக்காய்க்கு அதிக விலை இருக்கின்றது. இதனையடுத்து இலவம்பாடி கத்திரிக்காய் எனப்படும் இந்த காய் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தார்வழி, குடிசை, மருதவல்லி பாளையம், நாட்டார்மங்கலம், நரசிங்கபுரம், ஈச்சங்காடு, பொய்கை, புதூர், சத்தியமங்கலம், ராமாபுரம் போன்ற பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே மிகவும் ருசியாக உள்ள […]
மதுரையில் மரிக்கொழுந்துக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மரிக்கொழுந்து அதிகம் விளைகிறது. ஒரு காலகட்டத்தில் மதுரையில அதிகம் விளைவது. இந்த மரிக்கொழுந்து அழிவின் விளிம்பில் இருப்பதால் இதற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலர் மொத்த வியாபாரிகள் நல சங்கம் முயற்சி எடுத்து வருகின்றனர். இது குறித்து நபார்டு வங்கியின் மாபிப் பிரிவின் சிஇஓ சிவகுமார் கூறியதாவது: நூற்றாண்டுகளாக நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தில் […]
புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கடலை மிட்டாய் உண்பது வெறும் சுவைக்காக மட்டும் அல்ல அந்த உண்டால் நம் உடலுக்கு பலம், ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பிறக்கும். இந்த உலகத்தில் பல வகையான கடலை மிட்டாய்களை நீங்கள் சுவைத்திருக்கலாம், அனால் நல்ல தரமும், சுவையும் இருப்பது இந்த கோவில்பட்டி கடலை மிட்டாயில் மட்டும் தான் தரமான கடலைகளை தேர்ந்தெடுத்து சுத்தமான முறையில் இந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் தயார் செய்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இங்கு […]