சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார். நேற்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென்று கனமழை பெய்ய தொடங்கியது. ஆனால் வானிலை ஆய்வு மையம் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்த நிலையில் அதற்கு நேர்மாறாக மழை வெளுத்து வாங்கியது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் […]
Tag: புவியரசன்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட 80% கூடுதலாக மழை பெய்து உள்ளதாகவும், சென்னையில் வழக்கத்தை விட 83% அதிகம் என்றும், புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது, வரும் நாட்களில் மழையின் அளவு குறையும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை […]
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ளதால் அடுத்த 12 மணி நேரத்தில் […]
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளதாவது: “சென்னை கிழக்கு தென்கிழக்கு 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரி கிழக்கே தென் கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழ்நாட்டின் கடலோர […]
ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் காற்றின் வேகம் கூடும் என்பதால் மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 180 […]