இந்தியாவில் பிறந்த மருத்துவரான கிடிகுமார் பாட்டீல் என்பவர் கடந்த 2016ம் வருடம் உக்ரைன் குடியுரிமை பெற்றுள்ளார். ரஷ்யா உக்ரைன் போரில் அவர் பணிபுரிந்த மருத்துவமனை குண்டு வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து தனது செல்லப் பிராணிகளை விட்டு அண்டை நாடான போலந்துக்கு சென்று வாழ வேண்டி இருந்தது. பாட்டீல் 2020 ஆம் வருடம் தலைநகர் கீவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு விலங்குகளை வாங்கியுள்ளார் அவற்றில் ஒன்று 24 மாதம் ஆண் லெப்ஜாக் அதாவது ஆண் […]
Tag: பூனை
புதுச்சேரி காந்திநகர் பகுதியில் பூனை காணவில்லை என ஒட்டப்பட்டு இருக்கின்ற நோட்டீஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றது. இது பற்றிய விசாரணை மேற்கொண்ட போது காந்திநகர் வேளாண் தோட்டத்தை சேர்ந்த ராமன் என்னும் டீ வியாபாரி ஒட்டி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது அந்த நோட்டீஸில் குட்டூ என அழைக்கப்படும் தனது பூனை கடந்த மூன்றாம் தேதி முதல் காணவில்லை என்றும் இது பற்றி தகவல் தெரிவித்தால் பணம் சன்மானமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு தனது தொலைபேசி […]
குழந்தைகள் அதன் பெற்றோரிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்குமோ அதே அளவிற்கு அந்த வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் இடமும் பாசமாக இருக்கும். பெரும்பாலும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள்தான் வளர்ப்பு பிராணிகளிடம் ஒட்டிக்கொள்ளும். அதே போல விலங்குகளும் குழந்தைகளிடம் பாசமாக தான் இருக்கின்றது. விலங்குகள் மற்றும் குழந்தைகளிடையே இதுபோன்ற பாசப்பிணைப்பு காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நம் அன்றாட இணையதளங்களில் காணும் பல கண்கவர் காட்சிகள் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது. அதிலும் […]
செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று காட்டிய முக பாவனைகள், இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி ஒருவர் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது திடீரென பூனை ஒன்றை வீட்டில் கொண்டு வந்து கொஞ்ச தொடங்கியதால், அந்த நாய் ஏமாற்றமடைந்தது. இதனால் முதலில் அந்த நாய் பொறாமையுடன் அந்த பூனையை பார்த்துள்ளது. அதன் பின்னர், அந்த வீட்டின் உரிமையாளரின் கவனத்தையும் கவரும் வகையில், அவரை நெருங்கி வந்து உற்றுப் பார்க்கிறது. […]
பொழுது போக்காகவே வீட்டு விலங்காக இருந்தாலும் சரி காடுகளில் வாழும் விலங்காக இருந்தாலும் சரி அவற்றிற்கு ஒரே இடத்தில் அடைத்து வைப்பது பிடிக்காத ஒன்று ஆகும். அதில் விலங்குகள் மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் ஒரு இடத்திலேயே அடைத்துக் கொண்டிருப்பது பிடிக்காத ஒன்று. இங்கு ஒரு வீடியோவில் வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் பூனை ஒன்று மெதுவாக ஜன்னல் கதவை திறந்து கொண்டு வெளியேறும் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றார்கள். மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட […]
நட்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். மனித நட்பு, விலங்கு நட்பு, மனித-விலங்கு நட்பு என அனைத்தும் வேறுபட்டவை, விசித்திரம் வாய்ந்தவை. ஆனால் அவர்களின் நட்பு அனைவருக்கும் மிகவும் மதிப்புமிக்கது. விலங்குகளின் நட்பைக் காட்டும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கு சேவல் மற்றும் பூனையின் வீடியோ ஒன்று இணையவாசிகளை குஷி படுத்தியுள்ளது. சேவலின் மீது சவாரி செய்யும் பூனை அதிலிருந்து குதிக்கும் வீடியோவை நீங்கள் பார்க்கலாம். முதல் காணொளியில் […]
ஜப்பான் நாட்டில் Onomichi city Museum of Art என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வேலை பார்க்கும் காவலாளிக்கு ஒரு பூனைக்கும் இடையில் 2 வருடங்களாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதாவது அந்தப் பூனை அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கு 2 வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் காவலாளி பூனையை அருங்காட்சியகத்திற்கு செல்லவிடாமல் தடுக்கிறார். இந்நிலையில் அந்தப் பூனைக்கு துணையாக மற்றொரு பூனையும் அருங்காட்சியகத்திற்கு வரத் தொடங்கியது. இந்த 2 பூனைகளும் 2 வருடங்களாக அருங்காட்சியகத்தில் செல்வதற்கு […]
காரில் கீறல் போட்டதாக பக்கத்துவீட்டு பூனை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த நீந்தூரைச் சேர்ந்த தாமஸ், மோனிகா தம்பதியினர் வளர்த்துவந்த பூனை துப்பாக்கியால் சுடப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் காரில் பூனை கீறல் போட்டதாக கூறி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பூனையின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என ஏட்டுமானூர் போலீசார் தெரிவித்தனர். பல மணி நேர […]
அமெரிக்காவிலுள்ள சிறிய நகரத்தின் மேயராக பெரிய கண்களையுடைய பூனை ஒன்று பதவி ஏறியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் ஹெல் என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நிர்வாகம் 100 டாலர் பணம் செலுத்தி விட்டு அதன் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பெரிய கண்களுடனும், உடல் குறைபாடுகளுடனும் பிறந்த பூனை ஜிங்ஸ்ஸின் உரிமையாளர் ஹெல் நகர நிர்வாகத்திற்கு 100 டாலர் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குடும்பத்தினர் வில்லோ என்ற பூனையை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்தப் பூனைக்கு இரண்டு வயது ஆகிறது. ஜில் பைடன் வளர்த்து வரும் பூனையின் பெயர் வில்லோ. இந்தப்பெயரை ஜில் பைடனின் சொந்த ஊரை நினைவு கூறும் வகையில் வைத்துள்ளனர். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜில் பைடன் தேர்தல் பரப்புரைகள் ஆற்றிக் கொண்டிருந்த போது […]
ஹெலிகாப்டரில் பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா, உடற்பயிற்சி கூடத்தில் ஒர்க் அவுட் செய்த பூனை உள்ளிட்ட வினோத வீடியோக்கள் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் கிறிஸ்துமஸ் தாத்தா ஹெலிகாப்டரில் பறந்து வந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்வித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அதேபோல் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பூனை வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றும் பயங்கர வைரலாகி வருகின்றது. மேலும் பிறர் உதவியுடன் உயிரை மாய்த்துக் […]
கோவையில் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5000 ரூபாய் பணம் வழங்குவதாக வித்தியாசமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி இந்த பூனை காணாமல் போனது. இதனை தொடர்ந்து பல இடங்களில் தேடியும் பூனையை கண்டுபிடிக்க முடியாததால் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். […]
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் செய்த செயலால் பயணிகள் அலறியுள்ளனர். நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரிலிருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் திடீரென தனது செல்லப்பிராணி பூனைக்கு தாய்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பூனையோ அந்த பெண்ணின் செயலால் ஆக்ரோஷமாக கத்தியுள்ளது. அதனை கண்டு அலறிய சகபயணிகள் அந்தப் பெண்ணிடம் தாய்பால் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காத அந்த […]
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் பூனை ஒன்று தன் உரிமையாளரை காப்பாற்றியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள dartmoor என்ற பகுதியில் வசிக்கும், ரிக்கி ஓவன்ஸ் என்ற நபர், 2 நாட்களுக்கு முன்பு, தன் குடியிருப்பின் கதவுக்குள் ஏதோ புகுந்து செல்வதை பார்த்திருக்கிறார். ஆனால், அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் மது விடுதிக்கு சென்று விட்டார். அதன்பின்பு அவர் குடியிருப்பிற்கு திரும்பியபோது, தன் பூனை வித்தியாசமாக செயல்படுவதைப் பார்த்து குழம்பியிருக்கிறார். அவரின் பூனை குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்த பைகளை […]
“கயிறு என நினைத்து பாம்பை பிடித்தார்” என்ற கதை போல் பூனை என நினைத்து புலியை பிடித்துள்ளார் ஒரு அரசியல் பிரபலம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கொண்டா ராகவரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டம் நஹ்கலப்பள்ளி கிராமம் வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே தலையில் பானை சிக்கிக் கொண்ட நிலையில் பூனை ஒன்றை கண்டுள்ளார். இதையடுத்து பூனையின் தலையில் சிக்கி இருந்த பானையை விடுவிக்க எண்ணி ஓடிச் சென்று […]
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சிறுத்தையும் பூனையும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இருந்த ஒரு பூனையை சிறுத்தை ஒன்று பிடிப்பதற்காக வேகமாக தூரத்தியுள்ளது.. அதன் பிடியில் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று பூனையும் வேகமாக ஓட, இறுதியில் இரண்டுமே அந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது.. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் இரண்டையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. அப்போது கிணற்றின் ஒரு […]
கிரீஸ் நாட்டில் பெர்சியஸ் என்ற பூனை 3 கால்களை இழந்ததால் செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில் பலரும் அதனை தத்தெடுக்க முன்வந்துள்ளனர். கிரீஸ் நாட்டில் கடந்த வருடம் நடக்க முடியாமல் கால்நடை மருத்துவமனைக்கு ஒரு பூனை அழைத்து வரப்பட்டது. எனவே பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து அந்த பூனைக்கு 3 கால்கள் பொருத்தினார்கள். டைட்டானியத்தை வைத்து கால்களின் உள் பாகங்கள் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெகிழியால் பாதங்களும் தயாரிக்கப்பட்டது. அதன் பின்பு பூனைக்கு வெற்றிகரமாக […]
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து செருப்புகள் காணாமல் போவது தொடர்கதை ஆகி வந்தது. அதன் பிறகு அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு வேலையில் ஈடுபட்டது பூனை என தெரியவந்துள்ளது. அதனைப்போலவே திருடப்பட்ட அனைத்து செருப்புகளும் பிரபல நிறுவனங்களின் செருப்பு என்று கூறப்படுகிறது. தற்போது பூனை செருப்பை கவ்விக் கொண்டு செல்லும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழையும் பூனை, யாராவது இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு செருப்பை […]
வீட்டு கதவின் ரகசிய எண்ணை போட்டு உள்ளே நுழையும் பூனையை இல்லத்தின் உரிமையாளர் சட்டப்படி தத்தெடுத்துள்ளார். தென்கொரியாவில் சாலையில் சுற்றித்திரியும் பூனை உணவு கிடைக்காத சமயத்தில் அங்குள்ள வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு ரகசிய எண்கள் கொண்ட டோர் லாக் கருவியை கதவில் பொருத்தியுள்ளார். இருப்பினும் இந்த பூனை வீட்டின் உரிமையாளர் கதவில் போட்டு வைத்திருக்கும் டோர் லாக்கின் ரகசிய எண்களை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறது. இதனையடுத்து அந்த பூனை தனது […]
சூடானிலிருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தின் விமானியை பூனை தாக்கியதால் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. கடந்த வாரத்தின் புதன் கிழமை சூடானின் தலைநகரமான கார்ட்டூமில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டாரில் இருக்கும் தோஹாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது . அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானியின் அறைக்குள் பூனை ஒன்று பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த பூனை விமானிகளின் மீது பாய்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியது. […]
சென்னையில் ஆசையாக வளர்த்த பூனை ஒன்று கர்ப்பம் அடைந்த நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்தி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை, பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதிகுமார். இவர் தனது நாய் மற்றும் பூனைகளை பாசத்துடன் வளர்த்து வருகிறார். தற்போது அவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலைமையில் இருக்கிறது. இதனால் அப்பூனைக்கு வளைகாப்பு நடத்த ஜோதி முடிவு செய்துள்ளார். பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல பூனைக்கும் வளைகாப்பு நடத்த அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்பின் பூனையை பெண் […]
இந்த ஆண்டு தி நியூஸிலாண்டர் பட்டத்திற்காக பத்து வயது நிரம்பிய பூனை ஒன்று போட்டியிடுகிறது. ‘தி நியூஸிலாண்டர் பட்டம்’ இந்த ஆண்டு ஒரு அற்புதமான போட்டியாக இருக்கப்போகிறது. இதன் காரணம் பல பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு ஹீரோவும் போட்டியிடப் போகிறார் என்று மிரியாமா காமோ கூறியுள்ளார். இந்த ஆண்டு நியூஸிலாண்டர் பட்டதிற்காக பிரதமர் ஜெசிந்தா ஆர்டேர்ன் மற்றும் நாட்டின் சுகாதார இயக்குனர் ஜெனரல் டாக்டர் ப்ளும்ஃபில்ட் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களுடன் மிட்டேன்ஸ் என்ற பூனையும் போட்டியில் கலந்து […]
இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றி வந்த பூனையின் ஓய்வு அலுவலக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பால்மர்ஸ்டன் என்ற பூனை பணியாற்றி வந்தது. எலிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அந்த பூனை தற்போது ஓய்வு பெறுவது அலுவலக பணியாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்மர்ஸ்டன் பிரத்யேக டுவிட்டர் பக்கத்தில் பூனையின் சார்பாக பதவி விலகல் கடிதம் பதிவிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், நான்கு ஆண்டுகள் பணியை சிறப்பாக செய்து […]
வீட்டில் வளர்த்து வந்த பூனையை கல்லால் அடித்துக் கொன்றவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை நாச்சியார்கோவில் மெயின் ரோட்டில் குத்புதீன் மகன் பஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர், ஆசையாக ஒரு வயதான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்தப் பூனைக்கு பசீர் அகமது, பட்டுக்குட்டி என்று பெயர் வைத்துள்ளர். அந்தப் பூனை காம்பவுண்ட் சுவற்றில் உட்கார்ந்திருந்த போது, அவ்வழியே சென்ற சுவாமிமலை […]
எலிகளின் விளையாட்டை பூனை மெய்மறந்து பார்க்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது சிங்கப்பூரில் பூனை ஒன்று இரண்டு எலிகள் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தான் அதனை வேட்டையாட வந்ததை கூட மறந்து போய் நின்ற காட்சி காணொளியாக பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் இரண்டு எலிகள் ஒன்றுக்கொன்று மிகவும் உற்சாகமாக விளையாடுகின்றது. அப்போது அவற்றை வேட்டையாடுவதற்காக அங்கு வந்த பூனை எலிகளின் விளையாட்டை மெய்மறந்து […]
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வந்த கொரோனா தற்போது விலங்குகளுக்கு செல்லப்பிராணிகளுக்கு பரவ தொடங்கியுள்ளது உலகம் முழுவதிலும் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மனிதர்களிடமிருந்து செல்லப் பிராணிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் பிரான்சில் முதல்முறையாக பூனை ஒன்றுக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று Val-De-Marne பகுதியிலிருக்கும் Alfort கால்நடை மருத்துவமனையில் அந்தப் பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை […]
கொரானா என்ற கொடிய வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்த தொற்று சர்வதேச அளவில் 9,35,000க்கும் அதிகமான மக்களை பாதித்தது. மேலும் இந்த தொற்று காரணமாக 47,000 பேர் சர்வதேச அளவில் உயிரிழந்துள்ளனர். தற்போது சீனா கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்ததையடுத்து அந்நாட்டில் மீண்டும் இயல்பாக நாய், பூனை ,பாம்பு மற்றும் வௌவ்வால் கறிகள் விற்பனை சமீபத்தில் களைகட்ட தொடங்கியது. வூகான் நகரில் வௌவால், பாம்புகளோடு சேர்த்து புனுகுப்பூனை போன்றவை விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் […]
சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சதை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 68,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மொத்த சீனாவும் நிலை குலைந்து காணப்படுகிறது. வர்த்தகம், தொழில், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த […]