தமிழகத்தில் மிகவும் பிரபலமான தமிழ் அறிஞர் புலவர் தியாகராஜன் காலமானார். பூம்புகாரின் மேலபெரும்பள்ளத்தில் வாழ்ந்துவந்த தமிழ் அறிஞர் புலவர் தியாகராஜன். இவருக்கு வயது 93. சிலப்பதிகார ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவர். மூன்று ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டு, பூம்புகாரின் சிறப்பை உலகறிய செய்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பூம்புகார் குறித்து அரிய வரலாற்று தகவல்களை வழங்கியுள்ளார். இவர் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: பூம்புகார்
திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது. 50 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மைகள் நல்ல நலிவடைந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை. உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் இந்த பூம்புகார் நகரில் கொலுபொம்மை பொருட்காட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலைஞர்களின் கலைத்திறமையை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனால் இந்த பூம்புகாரில் இருக்கும் கொலு பொம்மைகளை வேங்கி பயன்பெறுமாறு அப்பெண்மணி கேட்டுக்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் 18 கிராம மீனவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்க கோரி மீனவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட சுறுக்கு வலையை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்க கோரி 18 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூம்புகார் ஆலோசனை கூட்டத்தில் நாகை, கடலூர், […]