Categories
உலக செய்திகள்

பூர்வகுடியின மக்கள் படுகொலைகளுக்கு… மன்னிப்பு கோரிய போப் பிரான்சிஸ்…!!!

கனடா நாட்டிற்கு சுற்றுப்பயணமாக சென்றிருக்கும் போப் பிரான்சிஸ் அங்கிருக்கும் பூர்வ குடியின குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். போப் பிரான்சிஸ் கனடா நாட்டிற்கு சென்றார். அப்போது அங்கு இருக்கும் அல்பேடா என்னும் பகுதியின் கிறிஸ்தவ பள்ளிகள் உள்ள இடத்திற்கு சென்றபோது அவர் தெரிவித்ததாவது, ரோமன் கத்தோலிக்க பள்ளிகளில் கல்வி கற்ற பூர்வ குடியின குழந்தைகள் மீது வன்கொடுமைகள் நடந்ததற்கு மன்னிப்பு கூறினார். மேலும், அவர் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முன்பே, கொடும்செயல்களுக்கு மன்னிப்பு கோரும் யாத்திரை […]

Categories
உலக செய்திகள்

1000 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு.. போப் மன்னிப்பு கேட்க வேண்டும்.. கனடா பிரதமர் கோரிக்கை..!!

கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், போப் ஆண்டவர்  கனடாவிற்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜஸ்டின் ட்ருடோ கூறியிருக்கிறார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பூர்வக்குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் கடந்த மாதத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்து சுமார் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, Saskatchewan என்ற மாகாணத்திலும் கடந்த வியாழக்கிழமை அன்று மேரிவல் ரெசிடென்ஷியல் பள்ளியிலிருந்தும், சுமார் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மீண்டும் அதிர்ச்சி.. நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சடலம் கண்டுபிடிப்பு..!!

கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் மேலும் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் கம்லூப்ஸ் என்ற நகரத்தில் இருக்கும் பூர்வகுடியின குழந்தைகள் பள்ளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பல வருடங்களுக்கு முன்  காணாமல் போன பூர்வகுடியின மக்களின் குழந்தைகளின் உடல்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. அந்த குழந்தைகள் எப்போது இறந்தது? […]

Categories
உலக செய்திகள்

“இந்திய குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்!”.. இனிமேல் தான் தெரியவரும்.. வழக்கறிஞர் கூறிய தகவல்..!!

கனடாவில் பூர்வகுடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய குழந்தைகளும் இருப்பார்கள் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  கனடாவில் சமீபத்தில் பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், சுமார் 800க்கும் மேற்பட்ட குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் பூர்வகுடியின வழக்கறிஞர் Eleanore Sunchild இச்சம்பவம் குறித்து கூறுகையில், கனடா தற்போது தான் கொலை செய்யப்பட்டவர்கள் தவிர்த்து […]

Categories

Tech |