மல்லிகை பூ விலை நேற்று ஒரு கிலோ 1,500ஆக இருந்த நிலையில், இன்று திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூவின் வரத்து குறைந்ததே விலை அதிகரிப்புக்கு காரணம் என பூ விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஒரு கிலோ ரூ1,000க்கு விற்கப்பட்டு வந்த பிச்சிப்பூக்களின் விலை 2,500 ஆகவும், மற்ற பூக்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.
Tag: பூ விலை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பருவமழை காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆவணி மாதம் முழுவதும் தொடர் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினங்கள் அதிக அளவில் இருந்த காரணத்தினால் பூக்களின் விலை உச்சத்தை எட்டி இருந்தது. அதுவும் மல்லிகை பூவின் விலை அதிக அளவில் இருந்ததால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மதுரை மல்லிகை பூ 3000 […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தாண்டம்பாளையம், வடவள்ளி, ராஜு நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ, சம்மந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு , கோவை , திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய […]
ஆவணி மாதம் பிறப்பதை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடுக்கு மட்டுமல்ல கேரளாவுக்கும் புகழ்பெற்றது. இங்கு ஓசூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் பெங்களூர் என வெளியூர்களிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல் வாய்மொழி உள்ள பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் அதிக அளவில் பூக்கள் வரத்து இருக்கும் . கேரளா மாநிலம் மற்றும் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் பூக்கள் மொத்தமாக இங்கிருந்து ஏற்றுமதி […]
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடைகள், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆடிமாத பிறப்பையொட்டி மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பூக்கடையில் பூஜைக்கான பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600, சாமந்தி பூ ரூ. 150, அரளிப்பூ ரூ.800 க்கு விற்பனையாகிறது. மேலும் நாளையும் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என்று […]