பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சமீபகாலமாக பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் செல்போன்கள் ஒட்டு கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. இதனை காரணமாக வைத்து எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள […]
Tag: பெகாசஸ் விவகாரம்
பெகாசஸ் உளவு மென்பொருள்களை செயல்படுத்தும் இஸ்ரேலில் உள்ள NSO நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் இன்று 15வது நாள் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்ததால், மத்திய அரசு […]
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் தொடர்பான வழக்கில் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், மற்றவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை? என்று உச்சநீதிமன்ற […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளின் காரணமாக பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தற்போது பெகாஸஸ் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்த விவகாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலை மக்களவை கூடிய உடன், ராகுல்காந்தி தலைமையில் எது கட்சி எம்பிக்கள் இன்று காலை […]
பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த ஒரு சில நாடுகளுக்கு இஸ்ரேல் நிறுவனம் தடை விதித்துள்ளது . இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பின் உளவு மென்பொருளான பெகாசஸ் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் , பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் என்எஸ்ஓ அமைப்பு தனது உளவு மென்பொருளை பயன்படுத்த பல்வேறு நாடுகளுக்கு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான பென்னி கன்ட்ஸ் […]
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கனிமொழி, டி.ஆர் பாலு, சு. வெங்கடேசன் ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தியும், என்.சி.பி, […]
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விஸ்வரூபம் எடுத்து வரும் பெகாசஸ் விவகாரத்தால் தனது மொபைல் போன், எண்ணை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியல் அரங்கில் இன்று வரை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் பெகாசஸால் மொராக்கோ, மெக்சிகோ, ஈராக், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக உலக அளவில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டிருந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவர் […]
பெகாசஸ் உளவு செயலி மூலம் மூன்று அதிபர்கள், பத்து பிரதமர்களுடைய செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் இந்தியாவை உலுக்கி வரும் உளவு செயலியான பெகாசஸ் மூலம் மூன்று அதிபர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பத்து நாடுகளின் பிரதமர்கள், ஒரு நாட்டின் மன்னர் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே பிரான்ஸ் அமைச்சர்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட 15 பேர் உளவு பார்க்கப்பட்டுள்ளதால் […]
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசு மறைப்பதற்கு எதுவும் இல்லை எனில் இஸ்ரேல் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதவேண்டும். இந்திய அரசு பணம் கொடுக்கவில்லை எனில் வேறு யார் பணம் கொடுத்து இந்தியர்களை உளவு பார்க்கச் சொன்னது […]
உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது என்றும், ஒன்றிய நீர்வளத் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பெயரும், தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா பெயரும் இதில் இடம்பெற்றதாக […]