இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 10 கோடி பெட்ரோல் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற 2017-2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரையிலும் 1,42,12,385 டீசல் வாகனங்களும், 10,44,28,407 பெட்ரோல் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் வருகிற காலங்களில் மேலும் வாகன போக்குவரத்து பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tag: பெட்ரோல் வாகனங்கள்
இந்தியாவில் இன்னும் 2 வருடங்களில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு நிகராக இருக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி மக்களவையில் கூறினார். மக்களவை சபாநாயகரிடம் பாராளுமன்றம் வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிதின் கட்கரி, அவ்வாறு சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால் எம்பிக்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அவர் ஒவ்வொரு அரசு […]
பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை மாற்றும் முயற்சியில் ஜப்பான் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் அரசு 2050 ஆம் வருடமளவில் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வை அடைய போவதாகவும் வருடத்திற்கு குறைந்தது 2 ட்ரில்லியன் டாலர் பசுமை வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த பசுமை வளர்ச்சித் திட்டமானது இந்த நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் கார்பன் உமிழ்வை நீக்குவதற்காக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் பிரதமரின் அக்டோபர் உறுதிமொழியை அடைவதற்காகவும் இத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனோவால் ஏற்பட்ட […]