அமெரிக்க ராணுவ துணை கீழ்நிலைச் செயலாளர் என்ற உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்தப் பெண் அதிகாரி, இதுவரை கூகுளில் நம்பிக்கை, பாதுகாப்பான ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு இயக்குனர் பதவி வகித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பேஸ்புக் நிறுவனத்தில் கொள்கை பகுப்பாய்வு பிரிவின் உலகளாவிய தலைவராகவும், கார்ப்பரேஷனில் மூத்த பொருளாதார நிபுணராகவும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூத்த அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார். […]
Tag: பெண் அதிகாரி
மராட்டிய மாநிலம் சட்டாரா பகுதியை சேர்ந்தவர் சிந்து சனாப். இவர் ஒரு வனச்சரக பெண் அதிகாரியாக காட்காவன் காவல் வனப்பகுதியில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் பணி முடிந்து வரும் போது, இவரை கணவன் மற்றும் மனைவி என்று 2 பேர் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதுபற்றி வனச்சரக பெண் அதிகாரி கூறுகையில், பணியில் சேர்ந்ததிலிருந்தே அந்த நபர் என்னை மிரட்டியும், பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதற்கு நான் அடிபணியவில்லை. […]
கோவை மாவட்டத்தில் ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் இருந்து வந்த பெண் அதிகாரியை மற்றொரு அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் என்பவர் பலாத்காரம் செய்ததாக கமிஷனர் அலுவலகத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பது, டெல்லியை சேர்ந்த நான் விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியிலிருந்து பயிற்சிக்காக கோவை மாவட்டம் ரெட் பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் […]
இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஷ்ருதி சவுகான்(38) சிகாகோவில் நடைபெற உள்ள திருமணமான பெண்களுக்கான திருமதி(கலாக்சி)போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க இருக்கிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மிஸஸ் இந்தியா உலக அழகிப்போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த இவர் கடந்த 16 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களிலேயே பணிக்குத் திரும்பிய துணை ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வராததால் அதனை தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகாரிகள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் துணை ஆசிரியராக பணிபுரியும் சௌமியா பாண்டே என்பவர் தற்போது கொரோனா காலம் என்பதால் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு […]
இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் முன்கள போராளிகளாக முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையில் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், போர்க்கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதன்முறையாக போர்க்கப்பலில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். சப்-லெப்டினன் குமுதினி தியாகி மற்றும் சப்-லெப்டினன் ரீத்தி சிங் ஆகியோர் கடற்படை போர்க் கப்பல்களில் முன்கள பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் இருவரும் 60 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பயிற்சி மிகவும் கடுமையாக இருந்தது எனவும் […]