ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை பகுதியில் இருக்கும் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது பெண்ணின் உடலுக்கு அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் காலியாக இருந்துள்ளது. மேலும் அருகே கிடந்த மணி பரிசில் சேலம் […]
Tag: பெண் இறப்பு
பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் பகுதியில் பச்சாயி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பச்சாயி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்கு நிலக்கடலை பறிப்பதற்காக சென்றபோது பாம்பு அவரை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பச்சாயியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பச்சாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் வசித்து வந்தவர் சுப்ரியா (35). இவருக்கு வெங்கட் ராஜேஷ் என்ற தம்பி இருக்கிறார். என்ஜினீயரான இவருக்கு பிரான்ஸ் நாட்டில் மென் பொறியாளராக வேலை கிடைத்தது. இதனையடுத்து வேலையில் சேர பிரான்ஸ் செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த வெங்கட்ராஜேஷை வழியனுப்புவதற்காக சகோதரி சுப்ரியா மற்றும் அவரது கணவர் கிரண்குமார் போன்றோர் உடன் வந்தனர். அதன்பின் விமானம் நிலைய வளாகத்திற்குள் சகோதரி சுப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்த வெங்கட்ராஜேஷ் அவர்களிடமிருந்து விடைபெற்று விமான […]
வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை சின்ன எட்டிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் துரைசாமி மகன் குள்ளையன் (28). இவருக்கும் ஜார்த்தான் கொல்லை ஊராட்சிக்குட்பட்ட எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகள் காஞ்சனாவுக்கும் (22) சென்ற 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து காஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எலந்தம்புதூர் மலை கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இருந்த காஞ்சனாவுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பிரசவவலி ஏற்பட்டது. இதனிடையில் காஞ்சனாவின் கணவர் வெளியூருக்கு […]
சென்னையில் பைக்ரேஸ் கலாசாரம் அதிகரித்துள்ளது. பொதுவாக புத்தாண்டு தினம் உள்ளிட்ட நாட்களில் பொதுயிடங்களில் நடைபெறும் பைக்ரேஸ் இப்போது தினசரி நடந்து வருகிறது. இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாலும், சாலை விதிகளை மதிக்காததாலும் இந்த ரேஸால் பல்வேறு விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த அடிப்படையில் தாம்பரம்அருகில் வண்டலூர் பகுதியில் இளைஞர்கள் ரேஸ்சென்ற காரணத்தால் பெண் ஒருவர் இறந்திருக்கிறார். இதில் தாம்பரம் வெளிவட்ட சாலையில் 2 இருசக்கர வாகனத்தில் சென்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் மீது அதே சாலையில் வேகமாக […]
மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பையில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாரிச்செல்வி வீட்டு மாடியில் துணிகளை காய போட்டுள்ளார். அப்போது தலை சுற்றியதால் எதிர்பாராதவிதமாக மாரிச்செல்வி மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]
மெடிக்கல் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு அனிதா(27) என்ற மனைவியும், வர்ணிகா(5), வர்ஷினி(3) என்ற இரண்டு மகள்களும் உள்ளார்கள். இந்நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் வேல்முருகன் – அனிதா தம்பதியினர் தங்களுக்கு மூன்றாவது குழந்தை வேண்டாம் என நினைத்து கருவை கலைக்க முடிவு செய்து, கடந்த ஐந்தாம் தேதி கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் மெடிக்கல் கடை […]
மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் காமராஜர் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி இருந்துள்ளார். தேசிய உதவி தொழிலாளியான ஜானகி வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அவினாஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஜானகியின் சேலை காற்றில் பறந்து சிக்கியது. இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்ததோடு, ஜானகியும் தூக்கி வீசப்பட்டார். இதனை […]
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகில் கன்னாபட்டியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி 47 வயதுடைய பசுபதி. இவர் தனது சொந்தக்காரர் ஒருவர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வேலை பார்த்து விட்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் போது படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பசுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் நேரு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மீனா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது மீனா மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காட்டாம்புளி பகுதியில் தயா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாய்க்காலில் வேகமாக வந்த தண்ணீர் தயாவை இழுத்து சென்றுள்ளது. இதனால் காப்பாற்றுங்கள் என தயா சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் தயாவை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. ஆனால் அதற்குள் தயா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான கல்பனா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த கோவிந்தராஜை அருகில் உள்ளவர்கள் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பண்ணாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலைதடுமாறி பாபா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிராம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கவிதா அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
சேலம் மாவட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நிலை காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கரட்டுப்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவி இருந்தார். இவர் மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாலதிக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் விடுப்பு எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மாலதி மேல் சிகிச்சைக்காக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வளவம்பட்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனநலம் பாதிக்கப்பட்ட பானுமதி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் வெளியே சென்ற பானுமதி வீட்டிற்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து கள்ளுக்காரன் பட்டியிலுள்ள தைல மர காட்டில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக […]
திருவாரூர் மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குன்னலூர் பகுதியில் ஜெபமாலை என்பவர் வசித்து வந்தார். இவர் அதிகாலை சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பாம்பு ஒன்று ஜெபமாலையை கடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த ஜெபமாலையை மீட்டு அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஜெபமாலைக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]
அரியலூர் மாவட்டத்தில் கட்டிட பணியின் போது கான்கிரிட் எந்திரத்தில் கை சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலைப் பார்க்கும் அஞ்சம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அஞ்சம்மாள் அதே பகுதியில் ராஜலட்சுமி என்பவரின் வீட்டிற்கு கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது காங்கிரிட் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கான்கிரிட் பணி முடிந்த பின்னர் அஞ்சம்மாள் கான்கிரிட் கலவை இயந்திரத்தில் தண்ணீர் […]
சேலம் மாவட்டத்தில் சோளத்தட்டு அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மெய்யனூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். கவிதா விவசாய தோட்டத்தில் சோளத்தட்டு அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டு அறுத்து கொண்டிருக்கும் போது கவிதாவை பாம்பு கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கவிதாவை மீட்டு பூதப்பாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக […]