பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப்பை ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு. பள்ளி மாணவனான சீனு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் நான்காவது நாளாக மாணவனின் உடலை வாங்காமல் சாலை மறியல் போராட்டத்திற்கு சில […]
Tag: பெண் காவலர்
இஸ்ரேல் நாட்டில் அதிகாரிகள் பெண் காவலரை பாலஸ்தீன நாட்டின் சிறை கைதிக்கு பாலியல் இரையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசு தங்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களில் தொடர்புடைய பாலஸ்தீன கைதிகள் பலரை கில்போவா சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிசிம் பினிஷ் என்ற சிறை அதிகாரியின் பதவியில், அங்கு பணிபுரிந்த ஒரு பெண் காவலர் மேல் அதிகாரிகளின் உத்தரவால் பாதுகாப்பு குறித்த குற்றங்களை செய்த […]
கனடாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் சக பெண் காவலரிடம் அத்து மீறியதால் ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. வான்கூவர் பகுதியில் வசிக்கும் ஜக்ராஜ் பேரர் என்ற காவல் துறை அதிகாரி, கடந்த 2019 ஆம் வருடத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது ஹோட்டலில் வைத்து, ஜக்ராஜ் பேரர், தூங்கி கொண்டிருந்த சக பெண் காவலரை குளியலறைக்குள் தள்ளிவிட்டு தவறாக நடந்திருக்கிறார். இதனால், அந்த பெண் காவலரின் திருமண வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும், அவர் […]
முதல் முறையாக தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் முதல் முறையாக பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளர். இதற்கு முன்னதாக 250-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் சுழற்சி முறையில் முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்ட நிலையில்,மேலும் சில […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. அதில் அரக்கோணத்தை சேர்ந்த காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]
மும்பையை சேர்ந்த பெண் காவலரை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநிலத்தில் போவாய் பகுதியில் பெண் ஒருவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அந்தப் பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக அந்த நபர் உறுதியளித்தார். பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக […]
கடலூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு சிறப்பான ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்கள் வேலைக்கு செல்வது சகஜமான இச்சூழலில் மாதவிடாயின் போது அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களில் நாப்கின் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர்கள் நிறைய சிரமத்தை அனுபவித்து உள்ளார்கள். இந்நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் ஐந்து ரூபாய் செலுத்தினால் நாப்கின் வரும் திட்டம் பெண் காவலர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களின் சிரமங்களை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அதன்பின் கைதான அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மதுபோதையில் குடித்துவிட்டுவண்டி ஓட்டி சென்றதால் அவரது மோட்டார் சைக்கிளை கூடங்குளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் மதன்ராஜ் தன் வண்டியை கேட்டு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வண்டி திருடு போனது தெரியவந்தது. உடனடியாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் […]
கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் திருட்டு வேலையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை போலீசார் காவல் நிலையத்தின் வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் பல்வேறு செல்போன்களையும் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். தற்போது இவைகள் திருட்டுப் போனதாக கூறி புகார் வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கூடங்குளம் காவல் […]
பெண் போலீசை மிரட்டிய அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குஜராத் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. கொரோனா தொற்றின் காரணமாக குஜராத் மாநிலத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது . சூரத்தின் மங்கத் சவுக் பகுதியில் இரவு நேர பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது முக கவசம் இல்லாமல் காரில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்தார். அவர்கள் தங்கள் நண்பனான மாநிலசுகாதாரத்துறை அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியை […]
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தை பார்த்த பெண் காவலர் கணவர் கொடுத்த பேட்டி தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம் சாத்தான்குளத்தில் அரங்கேறியது. அங்கு செல்போன் நடத்தி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தினர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைத்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து, இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த சம்பவத்தை விசாரிக்க நீதித்துறை நடுவர் பாரதிதாசனை […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா என வெளியான தகவலுக்கு சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெண் காவலருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வெளியானதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை பாதுகாப்பு காவல் பிரிவில் பணியாற்றிவந்த பெண் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. […]