அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென செய்த செய்கையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விமானம் நடுவானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த 34 வயதான பெண் பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனைப் பார்த்த விமான பணிப்பெண் ஒருவர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் […]
Tag: பெண் பயணி
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த நதிஷா ரோஷினி (47), வசீகா (45) போன்றோர் சென்ற 8-ஆம் தேதி அதிகாலை கொழும்பிலிருந்து பயணிகள் விமானத்தில் வந்தனர். இவர்கள் சுங்க இலாகா மற்றும் குடிஉரிமை சோதனையை முடித்து விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலையத்திலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது கார் பார்க்கிங் அருகே நடந்து வந்தபோது அவர்களை 2 பேர் வழிமறித்து, “நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் […]
மகாராஷ்டிரா மாநிலம் வகோலி என்கிற இடத்தில யோகித்தா சதவ் என்ற பெண் ஒருவர் பேருந்து ஓட்டுனர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரே அந்த பேருந்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற இடத்திற்கு பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தடுமாற்றம் அடைந்து அவர் ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழும் நிலைக்கு சென்று விட்டார். […]
விமானத்தில் ஒரு பெண் தன் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு செய்யும் செயல் அனைவரையும் வியக்க செய்திருக்கிறது. விமானத்தில் பயணிக்கும் இளம்பெண் ஒருவர் தன் கையில் குழந்தையை வைத்திருக்கிறார். விமானம் தரையிறங்கிய பின் இருக்கைக்கு மேலே உள்ள கேபினில் வைக்கப்பட்டிருந்த தன் பெட்டியை எடுப்பதற்கு அவர் பிறரின் உதவியை கேட்கவில்லை. தன் காலால் அந்த கேபினை திறந்துவிட்டார். அதனைத்தொடர்ந்து, அதிகமான எடை கொண்ட தன் பெட்டியை மற்றொரு கையில் எடுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து தன் காலால் மீண்டும் கேபினை அடைத்து […]
அமெரிக்காவில் விமானத்தில் ஒரு பெண் பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விமான கழிவறையில் 3 மணி நேரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரிலிருந்து ஐஸ்லாந்திற்கு Icelandair என்ற விமானம் புறப்பட்டிருக்கிறது. அதில் மிச்சிகன் நகரில் வசிக்கும் மரிசா ஃபோட்டியோ என்ற பெண், தன் குடும்பத்தாருடன் பயணித்திருக்கிறார். விமானம் புறப்பட்டு சென்ற, ஒன்றரை மணி நேரத்தில் அவருக்கு கடும் இருமல் ஏற்பட்டது. எனவே அவர் சந்தேகமடைந்து, தான் வைத்திருந்த ரேபிட் கொரோனா […]
ஈரோடில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்தில் 50 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பயணித்த பெண் பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டதை கவனித்த பயணிகள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். அப்போதுதான் மற்றவர்களுக்கு தெரிந்தது, அவர் போதையில் இருக்கிறார் என்று. மேலும் அவர் ஆபாசமாக பேசியதால் சக பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்தப் பெண் பயணிகளிடம் மிக மோசமாக நடந்துள்ளார். வயது வித்தியாசம் கூட பார்க்காமல் அவர்களை […]
ஒயிட் போர்டு எனப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்துவிட்டு பெண் பயணிகள் அவமதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தென்காசியில், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்ட பெண்ணை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்க முயன்ற வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணை, உரிய இடத்தில் இறக்கிவிடாமல், வேறு வேறு இடத்தில் இறக்கி பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் மரியாதை குறைவாக நடத்தியுள்ளதாக அந்த பெண் புகார் […]
காம்யானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் போலீஸ் அதிகாரி என பொய் கூறி பணப்பை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். மும்பையிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு காம்யானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்த சாரதா சிர்சாட் என்ற பெண்ணிடம் அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பேச்சுக் கொடுத்துள்ளார். மேலும் தன்னை போலீஸ்காரர் என அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் அப்பெண் வைத்திருந்த உடமைகளை […]
பேருந்தில் முக கவசம் அணியாமல் பயணித்த பெண் சக ஆண் பயணி மீது எச்சில் துப்பியதால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார் கனடாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணொருவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இந்நிலையில் உடன் பயணித்த பயணி ஒருவர் அருவருப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனைக் கேட்ட அந்தப் பெண் அவரது முகத்தில் துப்பி விட்டு நகர்ந்து செல்கிறார். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் எழுந்து சென்று அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார். இறுதியில் அந்த பெண்ணை […]