மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள், வாரிய ஊழியர்கள், தன்னாட்சி அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆம் சம்பள கமிஷன் அடிப்படையில் இனி பென்ஷன் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி பென்ஷன் வாங்குவோருக்கு வழங்கப்படும் படித்தொகை உயரும். ராஜஸ்தான் மாநில அரசின் இந்த அறிவிப்பால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷனர்கள் பயனடைவார்கள். இந்தத் திருத்தப்பட்ட புதிய பென்சன் ஏப்ரல் […]
Tag: பென்ஷன் வாங்குவோர்
பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அது தற்போது மிக எளிதாகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தபால்காரர் உங்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகின்றது. doorstepbanks.com அல்லது www.dsb.imfast.co.in/doorstep/login என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது மூலம் வங்கி அதிகாரி நீங்கள் சொன்ன தேதியில் உங்களை தேடி வந்து ஆயுள் சான்றிதழை ஜீவன் பிரமான் ஆப் மூலமாக வாங்கி செல்வர். […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 28%அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவை அமலுக்கு வந்தால் 31% உயரும். இதற்கு முன்பு 2020 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 2020 ஜூன் மாதம் 3% உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படியை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து 2021 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு ஒட்டுமொத்தமாக தற்போது அகவிலைப்படி 28% ஆக உள்ளது. […]
பென்ஷன் வாங்கக்கூடிய மூத்த குடிமக்களுக்கு தேவையான வாழ்வு சான்றிதழை இனி அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. அதன்படி டிஜிட்டல் முறையில் வாழ்வு சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொழில்நுட்பம் பற்றி முன் அனுபவம் இல்லாத ஓய்வூதியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மிக எளிதாக வாழ்வு சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வகையில் தபால்துறை இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றி தபால் துறை […]