பெரம்பலூர் மாவட்டத்தில் சூறாவளி போல் தொடங்கிய பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் ஓய்ந்தது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும், பெரம்பலூர் தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அனைத்து வேட்பாளர்களும் தேர்தலை முன்னிட்டு வீதி, வீதியாக சென்றும், துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் பொது மக்களிடையே சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலும், அதிமுக வேட்பாளர் […]
Tag: பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூரில் ஒரே நாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]
தமிழ்நாட்டில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நேரத்தில் பா.ஜ.க. நுழைய முயற்சி செய்யும் கனவு பலிக்காது என்று திருமாவளவன் எம்.பி. பிரச்சாரத்தில் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அகரம்சீகூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே திமுக கூட்டணி மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்ட வெற்றி கூட்டணி ஆகும். தமிழகத்தை கடந்த ஐந்து வருடங்களாக அமித்ஷாவும், மோடியும் […]
பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும், வேப்பூர் அனைத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் என்னும் பகுதியில் 328 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும் எண்ணப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வேப்பூர் மகளிர் கல்லூரியிலும், பெரம்பலூர் அரசு […]
பெரம்பலூரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சார நேரம் கடந்ததால் திறந்த வேனில் நின்றவாறு கையசைத்து விட்டு சென்றார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி குன்னம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன், பெரம்பலூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து ஏப்ரல் 1-ஆம் தேதி பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜயகாந்த் வருகையை எதிர்பார்த்து இரவு 8 மணி முதலே […]
பெரம்பலூரில் நாட்டுப்புற பாடல் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் கொரானா அச்சுறுத்தலால் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும், 100% வாக்களிப்பது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் நாட்டுப்புற பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நாட்டுப்புற பாடல்களை பாடி […]
பெரம்பலூரில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நற்குணம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். பிரபாகரன் சுகாதார ஆய்வாளராக குன்னம் தாலுகா முருக்கன்குடியில் பணியாற்றி வருகிறார். இவர் பெரம்பலூர் ரோஸ் நகர் விஸ்தரிப்பு பகுதியில் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதஉயடுத்து பிரபாகரன் அருப்புக்கோட்டையில் […]
பெரம்பலூரில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட முயற்சித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நற்குணம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சந்திரா (56) என்ற மனைவி உள்ளார். சந்திராவிற்கு குழந்தை இல்லை. மேலும் கணவரும் இறந்துவிட்டார். இதனால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மர்ம நபர்கள் சிலர் ஜன்னலை உடைத்து சந்திராவின் வீட்டிற்குள் திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சத்தம் கேட்டு சந்திரா […]
மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பெரம்பலூரில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் சார்பில் காவல் துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவ வீரர்கள் நேற்று மாலை கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தின் அருகிலிருந்து தொடங்கியது. இந்த அணிவகுப்பை போலீஸ் […]
பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் மர்ம நபர் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகா நம்புக்குறிச்சி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள தி.நகரில் தற்போது கணவருடன் வசித்து வருகிறார். சென்னையிலிருந்து நம்புக்குறிச்சி கிராமத்திற்கு வருவதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி தனியார் பேருந்தில் அருள்மொழி கணவருடன் பயணம் செய்தார். அப்போது தம்பதியின் மீது பேருந்தில் பயணம் […]
பெரம்பலூரில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அரவிந்த் ஜி.தேசாய் தலைமையில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்கண்ணு, மற்றும் சரவணன், புஷ்பா, மெர்சி ஆகிய காவல்துறையினர் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் எக்ஸ் ரோடு பகுதியில் தீவிர வாகன […]
பெரம்பலூரில் நேற்று முன்தினம் 2-வது நாளாக புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரானா பரவி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் மொத்தம் 2,309 ஆக உயர்வடைந்துள்ளது. […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பு வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அந்த அளவிற்கு பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் 102 டிகிரி வெயில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே உள்ளனர். அதன்பின் மாலை நேரங்களில் மட்டும் வெளியில் வருகின்றனர். சாலையில் நடந்து செல்வோர் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் […]
பெரம்பலூரில் வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பு முடிந்த பின் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலன்று குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. குன்னம் தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளியிலும், பெரம்பலூர் தொகுதிக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர்கள் பயன்படுத்த உள்ள செல்போன் செயலி குறித்தும், வாக்குபதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய […]
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 198 மதுபாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுரங்கம் மற்றும் கனிமத்துறையின் தனி துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாலிகண்டபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 பீர் பாட்டில்கள், 150 வாட்டர் […]
தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களை தயார் செய்யும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் பதிவு செய்யும் எந்திரங்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 428 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள், […]
பெரம்பலூரில் வாகனம் மோதி தொழிற்சாலை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூர் வடக்கு தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு அந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. […]
பெரம்பலூரில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பரவி கொண்டு தான் வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல்அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 36 பேரும் தற்போது […]
பெரம்பலூரில் திருமணமான 45-வது நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்திரமனை கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செண்பகம், ரஞ்சிதா என 2 மகள்கள். இதில் இளைய மகள் செண்பகத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணன் என்பவரது மகன் மணிவேலுடன் சமயபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. […]
பெரம்பலூரில் அரிசி மூட்டைகளுடன் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியின் முன் நின்றுகொண்டிருந்த லாரியை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக அரசி கிட்டங்கி, பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ளது. தினமும் அரிசி மூட்டைகள் கிட்டங்கில் பொதுவிநியோக திட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து அதன் பின் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி காஜாமலையிலிருந்து கடந்த 29-ஆம் தேதி அன்று இரவு விமான […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் இதுவரை ரூ. 45 லட்சத்து 39 ஆயிரம் 28 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவும் குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒன்பது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரும், ஒன்பது பறக்கும் படை குழுவினரும், 2 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறைமங்கலம் […]
பெரம்பலூரில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊர்க்காவல் படை வீரர்கள், காவல்துறையினர் தபால் வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்ற ஊர்க்காவல் படையினர், காவல்துறையினர் மற்றும் முன்னாள் ராணுவதினர் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 72 மண்டல அலுவலர்களுக்கும், 3,916 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 816 […]
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களித்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளர்களும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 அடையாள ஆவணங்களை, வாக்குப்பதிவின் போது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் அதனை காண்பித்து […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை உரிய வாக்குச்சாவடியில் பதிவு செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி திருச்சி, கரூர், பெரம்பலூர், செந்துறை, புதுக்கோட்டை ஜெயங்கொண்டம், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் வருகின்ற 4, 5-ம் தேதிகளில் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு […]
பெரம்பலூரில் அரசு பேருந்து கண்டக்டர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு திருச்சியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று காலையில் பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் தீரன் மாநகர் சாலையில் வசித்து வரும் பாலு என்பவர் பேருந்தை ஓட்டியுள்ளார். திருச்சி போலீஸ் காலனி பகுதியில் வசித்து வந்த விமல்பாபு என்பவர் கண்டக்டராக பணியாற்றி உள்ளார். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்த பேருந்து வந்த போது திடீரென்று […]
பெரம்பலூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூராட்சி ஏழாவது வார்டு முன்னாள் உறுப்பினராக பணியாற்றியவர். மேலும் இவர் அ.தி.மு.க. பிரமுகர். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினரை அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் நேற்று காலையில் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு […]
பெரம்பலூரில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த்தில் நேற்று மங்களமேடு கிராம பொதுமக்கள், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதி விவசாயிகள் உழவர் சந்தையாகவும், விளையாட்டு மைதானமாகவும், தானியம் […]
பெரம்பலூரில் ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பில்லாங்குளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போலீஸார் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]
பெரம்பலூரில் செல்போனுக்கு ஆசைப்பட்டு வாலிபர், சிறுவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புகுமார் (11) என்ற மகன் இருந்தான். இவன் ஆறாம் வகுப்பை அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்புகுமார் தனது நண்பர் விட்டிற்கு போவதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. […]
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் குடும்ப பிரச்சனையில் பெண் விஷ மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகம் (48) என்ற மனைவி இருந்தார். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் கனகம் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை […]
பெரம்பலூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை-அரும்பாவூர் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த 28-ஆம் தேதி அன்று விற்பனையாளர் மாதேஸ்வரன் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் பூட்டப்பட்டிருந்த கதவு உடைக்கப்பட்ட நிலையில் […]
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் வளைவு அருகே டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலம் உள்ளது. இந்தத் திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு குருத்தோலை, புனித பனிமய மாதா திருத்தலம், டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஆத்தூர் சாலையில் சி.எஸ்.ஐ திருத்தலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் ஒன்று கூடினர். அதன்பின் பெரம்பலூர் சங்குபேட்டை வரை குருத்தோலையை கையில் ஏந்தி கிறிஸ்தவ பாடல்களை பாடிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் பிரச்சாரத்தின் போது தரக்குறைவாக பேசிய ஆ.ராசா எம்.பி மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான ஆர்.ராசா எம்.பி., தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளரை […]
பெரம்பலூரில் வீடு புகுந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் காலனியில் நந்தீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து நந்தீஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கல்லூரி மாணவி மனவேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காடூர் கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்தார். ஆர்த்தி இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பை வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கு ஆர்த்தி, தனக்கு திருமணம் செய்து கொள்ள தற்போது […]
நேற்று அரசு ஊழியர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் தபால் ஓட்டு போடத்தொடங்கினர். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மொத்தம் 3,916 அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள 816 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள 531 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியலூரில் பணியாற்றக்கூடிய […]
திருட்டு வழக்கில் கைதான வாலிபரை பெரம்பலூர் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் காந்தி நகரில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (22) என்ற மகன் உள்ளார். இவரை திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்த பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்துறையினர் திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் விடுதலையாகி வெளியில் வந்தால் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
பெரம்பலூரில் வெளிமாவட்ட பெண்கள் இரண்டு பேரை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு(30) என்ற மகன் உள்ளார். இவர் பெரம்பலூரில் உள்ள பாலக்கரை பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சிறுவாச்சூர் பகுதியில் வசித்து வரும் செல்லமுத்து என்பவரது மகன் சரவணன் வந்து கொண்டிருந்தார். அவரிடம் அன்பு பணம் கொடுத்தால் போதும் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை […]
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில் குன்னம் தொகுதியில் […]
பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் பால் குளிரூட்டும் நிலையம் எதிரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். அதன்பின் வயலுக்குச் சென்ற முத்துசாமி வீட்டிற்கு மதியம் 3 மணி அளவில் திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு […]
பெரம்பலூர் வெள்ளாறு தடுப்பணையில் 10 வயது சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் கவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிரோஜன்(10) என்ற மகன் இருந்தான். ஹரிரோஜன் நான்காம் வகுப்பை தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளான். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஹரிரோஜன் அகரம் சிகூர் கிராமத்தில் வசித்து வரும் தனது பாட்டி மின்னல்கொடி வீட்டிற்கு தனது தாயுடன் சென்றுள்ளார். இதையடுத்து ஹரிரோஜன், […]
பெரம்பலூரில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான முன்ன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். […]
பெரம்பலூரில் முகமூடி அணிந்த கும்பல் வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் காலனியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் வெள்ளையன் என்பவரை கடந்த 24-ஆம் தேதி நாய் ஒன்று கடித்துள்ளது. இதன் காரணமாக வெங்கடேசபுரம் காலனி பகுதியில் நடமாடும் நாய்களை பிடிக்குமாறு பெரம்பலூர் நகராட்சிக்கு வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி வெங்கடேசபுரம் காலனி பகுதியில் […]
பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூரில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பயத்தை போக்கும் வகையிலும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் உத்தரவின்படி இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கலமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு […]
பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் நகரில் போக்குவரத்து விதிமுறைகள் வாகன ஓட்டிகளால் மீறப்படுகிறது. குன்னம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாடி-வேப்பூர் சாலையில் கல்லங்காடு பகுதி அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி மொபட்டில் ஆறு பேர் சென்றபோது மொபட் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேரில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக […]
பெரம்பலூரில் கஞ்சா வியாபாரியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பலில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குபேட்டை அம்பேத்கர் தெருவில் செங்கோட்டுவேல் என்ற கோட்டை வசித்து வந்தார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதன்பின் சில தினங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியில் வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் நாவல்மரத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். […]
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூரில் பிரசித்திபெற்ற மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வாகனங்களில் சுவாமி புறப்பாடு தினமும் இரவில் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், உதய கருட சேவையும் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் மாலை செம்மையாக […]
பெரம்பலூரில் மக்கள் சமூகநீதி பேரவை அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட மக்கள் சமூக நீதிப்பேரவை அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க புறப்பட்டனர். இந்த அமைப்பிற்கு பேரவை செயலாளர் நல்லுசாமி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சிவமணி, மாநில இணைச் செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பெரம்பலூர் பழைய பேருந்து […]
பெரம்பலூரில் டிராக்டரை திருடிய இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வடகரை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக டிராக்டர் ஒன்று உள்ளது. அந்த டிராக்டரை முத்துசாமி வீட்டு வாசல் முன்பு கடந்த 23-ஆம் தேதி நிறுத்தி வைத்துள்ளார். அங்கு இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் திடீரென காணாமல் போனது. இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் காவல் நிலையத்தில் […]
பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலகத்தில் ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில்லக்குடி கிராமத்தில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 28-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இந்த மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சில்லக்குடி ஜல்லிக்கட்டு அமைப்பினர் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய […]