Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்காளர் அட்டை ஒப்படைப்பு போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பின் நடந்த சம்பவம்….!!!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாடு மக்களுக்கு திமுக. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி வறண்ட வெள்ளாறுபடுகையில் வேப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு பணிகளை தொடர்ந்தது. இதனால் அதை கண்டிக்கும் வகையிலும் எதிர் வரும் தேர்தலை புறக்கணிக்கும் வகையிலும் வாக்காளர் அடையாளஅட்டையை லெப்பைக் குடிகாடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டமானது நடத்தப்படும் என நீர்ஆதார பாதுகாப்பு குழு எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் முன்னதாகவே அறிவித்து இருந்தனர். அந்த வகையில் நேற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மொபட், லாரி மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த 3 பேர்…. பெரம்பலூரில் கோர விபத்து….!!

மொபட், லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அய்யப்பன் தாங்கல் அபர்ணா கிரேன் பகுதியில் பார்வதிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது மனைவி தெய்வானை, மகன் சேதுராம், விருகம்பாக்கத்தில் வசித்து வந்த தாய் வசந்தா, அண்ணன் சேதுராமன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தலையில் உரசிய மின்கம்பி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை காமராஜ் நகரில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலா (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஹோட்டலில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா சின்னாறு பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலின் பின்புறம் வயரிங் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்த கம்பி பாலாவின் தலையில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கதவை திறந்த உரிமையாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காலை தர்மலிங்கம் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் இருந்த சாரை பாம்பை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பெரம்பலூரில் உள்ள பள்ளி ஒன்றிற்கு கழிவறைகள் கட்டித் தர கோரிக்கை”…. ஆட்சியரிடம் மனு…!!!!!

பெரம்பலூரிள்ள பள்ளி ஒன்றில் கழிவறைகள் கட்டி தர கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதில் பொதுமக்கள் பலரும் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக தந்தனர். அதில் குன்னம் தாலுகா வேப்பூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் மேலாண்மை குழுவினர் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பள்ளி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியை”….. முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு….!!!!!

விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெங்களூருவில் தலைமை இடமாக கொண்டிருக்கும் ஒரு தன்னார்வ அமைப்பின் சார்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், கல்வி பெருவாரியாக சென்றடையாத பகுதிகளில் இருக்கும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு கல்வி குறித்து அறிவியல் ரீதியான விஷயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளி மாணவர்களே ஊக்கப்படுத்த சுற்றுலா பயணமாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“6 அம்ச கோரிக்கைகள்”…. ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….!!!!!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக பார்வையற்ற மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகவொளி திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில் சங்கத் தலைவர் இதற்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100% பார்வையற்ற மாற்று திறனாளிகள் கடும் உணமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் மாத ஓய்வுதியத்தை மூன்றாயிரமாக உயர்த்த வேண்டும் எனவும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்….!!!!!

பெரம்பலூர் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெரம்பலூரில் உள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் எனவும் நலவாரிய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து நலவாரிய மனுக்களை அமைக்க ஆன்லைன் முறையில் அனுமதிக்க வேண்டுமெனவும் நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான தீர்ப்பு மனுக்களை பரிசீரிக்கப்பட்டு தாமதம் இன்றிய அனைத்து பணப்பயன்களை வழங்க வேண்டும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“108 ஆம்புலன்ஸ் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்”…. தொழிலாளர்கள் முடிவு….!!!!!

108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகளை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றனர். தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாத கலந்தாய்வுக் கூட்டமானது பெரம்பலூரில் நடைபெற்றதில் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். இந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சங்கத்தின் மாநாடு வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடத்தப்படுகின்ற நிலையில் ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் விரோத போக்கை கடைபிடித்து வருவதால் அதை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பெரம்பலூரில் வீட்டுக்கொட்டைக்கு தீ வைப்பு”…. தானியங்கள், மொபட் தீயில் எறிந்து நாசம்….!!!!!

வீட்டை ஒட்டியுள்ள கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் தானியங்கள், மொபட் தீயில் எறிந்து நாசமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்த நீதி என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நீதி மற்றும் அவரின் மனைவி லட்சுமி பின் வாசல் வழியாக வெளியேறி உயிர்தப்பினார்கள். பின் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு திடீரென நேர்ந்த விபரீதம்…. சிக்கிய மெடிக்கல் உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை தாலுகா மேட்டுபாளையத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு அனிதா(27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு சென்ற 2016 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்னிகா, வர்ஷினா என 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 3வதாக அனிதா கர்ப்பமடைந்தார். இதையடுத்து 4 மாத கர்ப்பிணியாக இருந்த அனிதா கடந்த மே மாதம் 5ஆம் தேதி ராமநத்தத்திலுள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்து வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பார்த்துள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமான 17 வயது சிறுமி…. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ்(24) என்ற மகன் உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு பால்ராஜ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதும் பால்ராஜ் துபாய்க்கு தப்பி சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை”… களை வெட்டும் பணியில் ஈடுபடும் விவசாய பெண் தொழிலாளர்கள்….!!!!!

சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பெரம்பலூர்-எளம்பலூர் இடையேயான சாலையில் உப்போடை பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் வேலையில் விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அந்தூர் கிராமத்தில் அண்ணாதுரை(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை வேலைக்கு செல்வதற்காக குன்னம் நோக்கி நடந்து சென்றார். அப்போது ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்த உஷா என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி முன்னால் சென்ற அண்ணாதுரை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அண்ணாதுரை மற்றும் உஷா ஆகிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நக்கசேலம் கிராமத்தில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அதே பகுதியில் வசிக்கும் ஜவகர்(31) என்பவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் ஜவகர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஜவகர் கிணற்றில் சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தென்னை மட்டையை எடுத்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் இருக்கும் பண்ணையில் அறிவழகன் என்பவரது குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவருக்கு 5 குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் மூத்த மகள் தனலட்சுமி(6) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாட்டுக் கொட்டகையில் தனலட்சுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தென்னை மட்டையை சிறுமி எடுத்தபோது அதில் இருந்த பாம்பு தனலட்சுமியை கடித்தது. இதனால் தனலட்சுமியின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான 3 வீடுகள்…. நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி ரோடு அரபுக் கல்லூரி அருகில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வராஜ்(36), ரமேஷ்(32) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சொந்தமாக அடுத்தடுத்து 3 கூரை வீடுகளில் இந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தந்தையை தட்டி கேட்ட மகன்…. உருட்டு கட்டையால் தாக்கிய விவசாயி…. போலீஸ் நடவடிக்கை…!!

உருட்டுக்கட்டையால் மகனை தாக்கிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை விவசாயியான ராஜா(57) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ்(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ராஜாவை ரமேஷ் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராஜா தனது மகனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரமேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“எனது பேத்தியை மீட்டு தாங்க” மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த பாட்டி…. போலீஸ் விசாரணை…!!

பேத்தியை மீட்டுத்தர கோரி பாட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டி ஒருவர் தனது மகள் மற்றும் பேரனுடன் வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2021-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது பேத்தியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு மங்களமேடு காவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஏன் குடித்துவிட்டு தகராறு செய்கிறீர்கள்…? தந்தையை அடித்து கொன்ற மகன்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் விவசாயியான செங்கமலை(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்(28) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செங்கமலை அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தில் இருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஏன் அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்கிறார்கள் என வினோத் தனது தந்தையை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கோவிலை புனரமைப்பதாக கூறி ரூ 44 லட்சம் மோசடி”…. யூ டியூப் மூலம் பணம் வசூலித்த பா.ஜ.க ஆதரவாளர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

கோவிலை புனரமைப்பதாக கூறி ‘யூ டியுப்’ மூலம் பொதுமக்களிடமிருந்து ரூ 44 லட்சம் பணத்தை வசூலித்து அபேஸ் செய்ததாக பா.ஜ.க ஆதரவாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மதுரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 500 வருடங்கள் பழமையானது. இந்த கோவிலுக்கு சொந்தமான பகுதியில் பல இடங்களில் உப கோயில்கள் அமைந்துள்ளன. அதில் மலையடிவாரத்தில் இருக்கின்ற பெரியசாமி கோவிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நிறைய சிலைகள் அமைந்துள்ளன. அதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் விவசாயி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் மேற்குத் தெருவில் விவசாயியான வெங்கடேசன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவி சுந்தரம்மாளுடன்(40) மோட்டார் சைக்கிளில் கீழப்புலியூரில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் தம்பை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது நிஷாந்த் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வெங்கடேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதி கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட பிரசவ வலி…. தேர்வு மையத்தில் பரபரப்பு…!!

தேர்வு எழுதி கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் நியூ காலனியில் போலீஸ்காரரான காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அனிதா நேற்று தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த குரூப்-2 தேர்வு மையத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அனிதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வு மைய கண்காணிப்பாளர் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு அனிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை ராஜாஜி தெருவில் அரசு பேருந்து ஓட்டுநரான ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(27) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஸ்வரி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

காவலாளி மீது தாக்குதல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

முதியவரை தாக்கி பணம் பறித்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள களரம்பட்டியில் சின்னகண்ணு என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் பனமரத்துப்பட்டி காந்திநகர் சினிமா தியேட்டர் பின்புறம் இருக்கும் பருப்பு மில்லில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சின்னகண்ணு பணியில் இருந்தபோது 2 வாலிபர்கள் சுற்று சுவரை தாண்டி மில்லுக்குள் குதித்தனர். இதனையடுத்து மில்லில் இருக்கும் இரும்பு, பித்தளை, செம்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து தருமாறு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. படுகாயமடைந்த 11 பேர்…. கோர விபத்து…!!

வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியான நிலையில், 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை பாலசுப்பிரமணியம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை தங்கநகரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி வேன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும்… “தலைகீழாக தொங்க விட்டு”…. முயல் வேட்டை திருவிழா..!!

சித்திரை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கின்ற கிராமங்களில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம், சிறுவாச்சூர், ஆலம்பாடி, குரும்பலூர், திருநகர் ஆகிய பகுதிகளில் சித்திரை மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முயல் வேட்டை திருவிழா நடந்தது. இந்த விழாவையொட்டி நேற்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“ஒருதலையாக பள்ளி மாணவியை காதலித்து கேலி, கிண்டல்”…. கண்டித்த உறவினர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி செய்த இளைஞர் கைது…!!!

நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்திற்கு அடுத்தியிருக்கும் கவுல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள மேற்கு மலை அடிவாரப் பகுதியில் வாழ்ந்து வருபவர் ஏழுமலை. இவன் கல் உடைக்கும் தொழிலாளி ஆவார். சேலத்தில் இருந்து கவுல்பாளையத்திற்கு வந்து சில வருடங்களாக வசித்து வருபவர் 24 வயதுடைய தனபால். இவர் மோட்டார் மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகின்றார். இவர் ஏழுமலையின் உறவுக்கார பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில்…. கோலாகலமாக நடைபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா…!!!!

நேற்று பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூரில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேவதி இந்த விழாவிற்கு தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் ரோஸ்மேரி பங்கேற்று உரையாற்றினார். முன்பாக கணிதவியல் துறை இணை பேராசிரியர் வளன் அரசு இவரை வரவேற்றார். அவர் கலந்து கொண்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம்”…. பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்…!!!

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியம் சங்கம் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் மருதமுத்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்க, மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரன், ஆளவந்தார், இளவரசன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் எனவும் வருவாய் கிராம ஊழியர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடு” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருணகிரி மங்களம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  பரமசிவத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  அவரது மனைவி  தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பரமசிவம் தனது மனைவியின் சேலையை  தீ வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது திடிரென  […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை காணும்…. தேடி அலைந்த குடும்பம்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

பெரம்பலூர் மாவட்டம் புறநகர் பகுதியில் பொன்னுசாமி என்பவர் தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் மோகன்ராஜ் அவருடைய மனைவி சுகி மகன்  தேவேஷ், மகள் தன்ஷிகா என்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மோகன்ராஜ் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சுகி கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகியின் தாய் பிரேமா பெரம்பலூருக்கு வந்து சுகியுடன் இணைந்து வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுகி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க போன இடத்தில் சோகம்…. கரையில் பரிதவித்த தாய்…. சடலமாக மீட்கப்பட்ட மகன்….!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர்கள்  அழகுதுரை-அழகம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஹன்சிகா, பிரசாந்த் என 2 குழந்தைகள். பிரசாந்த் மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அழகம்மாள் தனது 2  குழந்தைகளையும் அழைத்து அசூர் கல்லாங்காட்டு ஏரிக்கு குளிக்க சென்றனர். அந்த சமயத்தில் பிரசாந்த் திடீரென ஏரிக்குள் மூழ்கினான். அதை கண்ட அழகம்மாள் மற்றும் மகள் ஹன்சிகா பிரசாந்தை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஹன்சிகா ஏரிக்குள் விழுந்து விட்டார். உடனே […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இவங்க தான் பிரச்சனையா….? கணவன் மனைவிக்குள் தகராறு…. பெண்ணின் விபரீத முடிவு….!!

பெரம்பலூர் மாவட்டம் எசனை காட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கட்டிட தொழில் செய்து வருகிறார். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப தகராறு ஏற்பட்டு அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் திருமணம் செய்துள்ளார். ஆனால் மணிகண்டன் தாயாரின் செயல்கள் கவிதாவிற்கு பிடிக்காததால் அடிக்கடி கவிதா மற்றும் மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்கு சென்ற கணேசன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கணேசனைபல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஏரிக்கு அருகில் கணேசனின் காலனி கிடந்துள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிலிமிசை கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்த்துவிட்டு இலுப்பைக்குடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகேசனின் மோட்டார் சைக்கிள்  மீது பலமாக மோதியது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாயியான சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சொந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

குளிப்பதற்கு சென்ற பெண் தண்ணீரில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜம்மாள்  அருகில் உள்ள ஏரிக்கு  குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள் …. திடீரென நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை….!!

சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்கிறதா?… மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா வருவாய் தாசில்தார் அலுவலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் தனித்துணை ஆட்சியர் சரவணன், தாசில்தார் கிருஷ்ணராஜ், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையம் ஆகியவற்றில் பதிவேடுகளை சரியாக பராமரிக்கபடுகிறதா? […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு, கழனிவாசல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு  உள்ளிட்ட வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய  பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மின்சாரம் தடை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள்….. அழுகிய நிலையில் கிடந்த முதியவர் ….. எப்படிஇறந்தார்? போலீசார் விசாரணை…..!!

குன்னம் அருகே முதியவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம்  அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகிலுள்ள மருவத்தூர் கிராமத்தில் 58 வயதான அருணாச்சலம் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பழனியம்மாள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அருணாசலத்திற்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர். அவரது மகள் ஆனந்தஜோதி திருமணமாகி தர்மபுரியில் வசித்து வருகிறார். மகன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கல்மரப் படிமம்… மண் போட்டு மூடி ரோடு போட்டுட்டாங்க…. அருங்காட்சியத்தில் வைக்கனும்… பொதுமக்கள் கோரிக்கை…!!

12 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரப் படிமத்தை அருங்காட்சியத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பாக டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்மர படிமம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சுற்றுப்புற கிராமங்களில் டைனோசர் முட்டை படிமங்கள், நத்தை படிமங்கள், கிளிஞ்சல் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குன்னம் கிராமம் அருகில் ஆனைவாரி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மதனகோபாலசுவாமி கோவிலில்… பங்குனி உத்திரத் திருவிழா ஆரம்பம்… ராமர் அலங்காரத்தில் வீதி உலா வந்த பெருமாள்.. பக்தர்கள் தரிசனம்…!!

மதனகோபாலசாமி கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ராமர் அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா வந்துள்ளார். பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் சாமி வீதியில் உலா வருகின்றது. அதன் படி மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று இரவு பெருமாள் ராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்துள்ளார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு தயாரான காளைகள்…. ஏமாற்றத்தில் மாடுபிடி வீரர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். மேலும் விழா நடக்க வேண்டிய இடமும் சிறப்பாக தயார் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை என கூறி அறிக்கை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மருவத்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் சதாசிவம் மற்றும் இவரது மகன்கள் தர்மராஜ், பழனிச்சாமி என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தருண் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் 4 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

” தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ” சுரங்கத்தை மூடவேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…!!

பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அருகில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. சில வருடங்களாக இந்த ஆலை மூடப்பட்டிருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேற்றபடுகிறது. இந்த சுரங்கங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோவிந்தராஜ பட்டினம், ஓலைப்பாடி, காரைப்பாடி, வீரமாநல்லூர், வயலப்பாடி போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த நபர்…. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவிலில் உள்ள மணி, குத்து விளக்குகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் மருதையான் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலிருந்து  இரண்டு பித்தளை குத்து விளக்கு, நான்கு  வெண்கல மணி ஆகியவற்றை  ஒருவர் திருடி சென்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து பாடலூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரித்த போது, அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருக்கும் போது….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  சங்குப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகன் வசந்தகுமார்(22). இவர் பிஏ இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் பகுதி நேரமாக வெங்கடேச புறத்திலுள்ள பரகர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  விளாமுத்தூர் சாலையில் உள்ள ரங்கநாதனின் வயலில் உள்ள கிணற்றிற்கு வசந்தகுமார் குளிக்க சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அக்கம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தங்க காசுகள் விற்பனை…. நிறுவனத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

போலி நாணயங்ககளை விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தங்க நகைகள் அடகு வைக்கும் கடை ஒன்றுள்ளது. இந்த கடையில் லாடபுரம் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் தங்க நாணயங்ககளை  அடகு வைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். அதன்பின் அடகு கடையின் மேலாளர் விஜயசாந்தியிடம் 23 தங்க நாணயங்களை விற்றதற்காக 8,30,000 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.  இந்த தங்க நாணயங்களை  பெங்களூருவில் இருக்கும் முதன்மை நிறுவனத்திற்கு […]

Categories

Tech |