தந்தை பெரியாரின் 49-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் மலர் வணக்க நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, நாங்கள் திராவிடம் என்பதை எதிர்க்கிறோம். தமிழர்கள் அல்லாதோர் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் வசதியாக கொண்டுவரப்பட்டது தான் திராவிடம். இன்று தமிழக அமைச்சரவையில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட 9 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எங்களுக்கு இவ்வளவு பெரிய முன்னுரிமை அங்கீகாரம் […]
Tag: பெரியார் சிலை
பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடவுள் மறுப்பு, சுயமரியாதை மற்றும் பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கக்கூடிய ஈ.வே.ராமசாமி பெரியாரின் சிலைகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் […]
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலை உடைப்பது தொடர்பாக கனல் கண்ணன் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றம் முதன்மை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதையடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு […]
செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கலைஞர் அவர்களுக்கு பில்டிங் கட்டுகின்றேன், பில்டிங் கட்டுகிறேன் என்று நம்முடைய முதலமைச்சரையே உட்கார வைத்து அவர் மீது பில்டிங் கட்டி விடுவார்கள் என்று தெரிகிறது. கலைஞர் அவர்களுக்கு பேனா சிலையை கட்டுகின்றேன் என்று சொல்கிறார்கள், அந்த பேனா சிலைக்குள்ள எத்தனை அமைச்சர்களை உட்கார வச்சி கட்ட போறாங்கன்னு தான் தெரியல. கலைஞர் அவர்களுக்கு கட்டக்கூடிய பேனா சிலைக்கு கீழே யார் இருக்கானு பாக்க ரொம்ப ஆச்சரியமா காத்துகிட்டு இருக்கேன் […]
சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன் மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு,கனல் கண்ணன் […]
ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன் மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு, கனல் கண்ணன் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மேலும் அவருடைய பேச்சு […]
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மதுரவாயிலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்மான கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசினார். இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையத்தின் […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதனை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. […]
பெரியார் சிலை தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருவதை, திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி கடுமையாக எதிர்த்திருக்கிறார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் இருக்கும் பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியை தூவி, செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள். இவ்வாறு பெரியார் சிலை சேதப்படுத்துவது தொடர்ந்து நடக்கிறது. இது பற்றி திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கோவை மாவட்டம், வெள்ளலூரில் தந்தை பெரியாரின் சிலைக்கு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்ந்து நடக்கிறது. குற்றவாளிகள் மீது […]
கோவையில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இன்று காலையில் மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்ததுள்ளனர். இதைப் பார்த்ததும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் அந்த சிலை அருகே பெரியாரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சிலையின் முகம் சிதைக்கப்பட்டு மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிலையை துணியால் மறைத்துள்ளனர். திராவிட கழகத்தினர் சிலையை சேதப்படுத்திய இடத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் யார் இந்த வேலையை செய்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ காவி துண்டு மற்றும் தலையில் தொப்பியை அணிவித்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். […]
தஞ்சையில் பெரியார் சிலைக்கு போலீசார் கூண்டு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு நள்ளிரவில் போலீசார் கூண்டு வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நேற்று முந்தினம் இரவு கூண்டை அமைக்கும் போதே தகவலறிந்து வந்த திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி […]
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு இது தான் மரியைதையா என பதிவிட்டது குறித்து எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் தந்தை பெரியாரின் சிலை காவி சாயம் அடித்து அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்… அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் முருகனும் இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருந்த நிலையில் மக்களவை உறுப்பினர் கனிமொழியும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது […]
பெரியார் சிலைகள் மீது காவி சாயம் பூசுவது பாஜகவின் நோக்கம் இல்லை என்றும், சில விஷ கிருமிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர்களைப் பொருத்தவரையில் வன்மம் அரசியல் செய்யாதவர்கள் எனவும் கூறினார். வருகிற தேர்தலில் தமிழகத்தில் அதிக ஓட்டு விழுக்காடு கொண்ட கட்சியாக பாஜக மாறப்போகிறது என அண்ணாமலை தெரிவித்தார். அதே போல எந்த ஒரு தலைவரும் அவமானப் […]
திருச்சியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக பாஜகவும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் […]
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசி அவமதிப்பு செய்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனாம்குளத்தூர் பகுதியிலுள்ள சமத்துவபுரத்தில் நுழைவுவாயிலில் பெரியார் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மீது காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலையினை சுத்தம் செய்தனர். இவ்விவகாரத்தில் […]
பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]
திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை […]
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டது அண்மைக்காலமாக தலைவர்கள் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதால், இந்த சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்க முடிவு செய்த அதிமுக நிர்வாகிகள், சிலையை பார்வையிட்டு அளவீடு செய்ய சென்றன. அப்போது பெரியார் […]