கோவையில் உள்ள வெள்ளலூரில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு காவி பொடி தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியார் சிலை முன்பாக திரண்ட திராவிட கழகத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிப்பால் கொந்தளித்த திக தலைவர் கி.வீரமணி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் […]
Tag: பெரியார் சிலை அவமதிப்பு
“பெரியார் சிலையை அவமதிப்பது மனநிலை பாதித்த காரியம் இல்லை. இது திட்டமிட்ட சதிச்செயல் எனவே இதனை செய்தவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு கடந்த சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவைக் கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்தில் […]
மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு குங்குமபொட்டு வைத்து, மாலை அணிவித்து அவமதித்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து சென்ற வெள்ளிக்கிழமை அன்று இந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி காவல்துறையினர் […]
மயிலாடுதுறையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் முகநூலில் பரவி வருதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து நேற்று அந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலர் சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]