பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில் 1880 ஆம் வருடம் முதல் 1947 ஆம் வருடம் வரையிலான தமிழகத்தின் சுதந்திர தருணம் குறித்த பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் பதினொன்றாவது கேள்வியாக “தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது?” என கேள்வி கேட்கப்பட்டு […]
Tag: பெரியார் பல்கலைக்கழகம்
உதவி பேராசிரியர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் வரலாற்றுத்துறை மாணவ-மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தங்களின் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பொய்யான புகாரை கொடுத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகாரை சூரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள […]
தேசிய தர குறியீட்டில் A++ பெற்று பெரியார் பல்கலைக்கழகம் சாதனை படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள கல்வி ஆராய்ச்சி கட்டமைப்பு விரிவாக்க பணிகளை ஆய்வு செய்து தரக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்து தர மதிப்பீடு வழங்கி வருகிறது. இதன்படி கடந்த 22ஆம் தேதி பெரியார் பல்கலைக் கழகத்திற்கு வந்து மூன்று தினங்கள் இந்த குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த […]
பெரியாா் பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவா்கள் தங்கள் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு துணைவேந்தா் தெரிவித்துள்ளாா். பெரியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு இன்று வெளியிட்ட செய்தியில், “பெரியாா் பல்கலைக்கழகத்தில் 2015-ஆம் ஆண்டில் இருந்து 2020- ஆம் ஆண்டு வரை பயின்ற முதுநிலை பட்ட மாணவா்கள், ஆய்வியல் நிறைஞா்கள், முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் அனைவரும் தங்களின் தற்போதைய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தங்களின் தற்போதைய […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயர்ப் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டது. சேலத்தை அடுத்து ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகியது. இந்த பெரியார் பல்கலைக்கழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 29 மேற்பட்ட துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் பெயர்பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 10 […]