Categories
உலக செய்திகள்

கடும் வெள்ளத்தில் மிதக்கும் மருத்துவமனைகள்.. தத்தளிக்கும் லண்டன்.. நோயாளிகள் அவதி..!!

இங்கிலாந்தின் தெற்குப்பகுதிகளில் இடி மின்னல் மற்றும் புயலும் உருவாகி லண்டன் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லண்டன் முழுக்க தெருக்கள் மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் பெருகி சாக்கடைகள் நிரம்பி வழிகிறது. இதுமட்டுமல்லாமல் சில மருத்துவமனைகளிலும் வெள்ளம் புகுந்ததால் மின்வெட்டு ஏற்பட்டு ஜெனரேட்டர்களும் செயல்படவில்லை. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வரும் நோயாளிகள் பிற மருத்துவமனைகளை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/26/6319679684750886267/640x360_MP4_6319679684750886267.mp4 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில், ஒரு மணி நேரத்தில் மட்டும் 50 […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகர்.. கடும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி..!!

பிரிட்டனில் பெருவெள்ளம் உருவாகி லிவர்பூல் நகரில் இருள் சூழ்ந்ததால், அங்குள்ள மக்களை வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் உருவாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அதை சரி செய்யும் பணியை இரவு நேரத்தில் பணியாளர்கள் மேற்கொண்டனர். எனவே மக்களை அவரவர் வீடுகளிலிருந்து வெளியேற்றினர். மேலும் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. வெள்ளத்தினால் பல வீடுகள் சேதமடைந்திருக்கிறது. இதற்கிடையில் நள்ளிரவு நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே மக்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம்…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…. ஜெர்மனியில் ஏற்பட்ட பெருவெள்ளம்….!!

ஜெர்மனியில் பெருவெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா குறித்த நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஜெர்மனியில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இவ்வாறு மீட்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா குறித்த நடவடிக்கைகளான சமூக இடைவெளியையோ, சுகாதார நடவடிக்கைகளையோ கடைபிடிக்காமல் செயல்படுகிறார்கள். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவிலேயே பணக்கார நாடு.. வெள்ளத்தை சமாளிக்க தவறியது ஏன்..? நாட்டுமக்கள் கேள்வி..!!

ஜெர்மன் நாட்டில் கனத்த மழை பொழிந்து பெருவெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு, இயற்கை சீற்றம் என்று நாட்டையே புரட்டிப்போட்டது. ஜெர்மனில் இந்த பேரழிவால் சுமார் 170 நபர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சேதங்களை சந்தித்து நிலை குலைந்து நிற்கும் ஜெர்மனியில் வரும் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாட்டுமக்கள், ஐரோப்பாவிலேயே பணக்கார நாடு ஜெர்மன் தான். எனினும் வெள்ளத்தை சந்திப்பதில் இவ்வளவு தடுமாற்றம் எதற்காக? என்று தங்கள் குடும்பத்தாரை […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் முடிவுக்கு வந்த மழை.. வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் எச்சரிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் கனத்த மழை ஒருவழியாக முடிவடைந்த நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் பெரிய புயல் உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் கடந்த வரம் முழுக்க பலத்த மழையால் கடும் புயல் ஏற்பட்டது. இதனால் பல சேதங்களும் ஏற்பட்டது. குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால் அச்சம் ஏற்பட்டது. ஒரு வழியாக தற்போது தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் பெரிய புயல் உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது. எனினும் எந்த பகுதிகளில் ஆபத்து என்று […]

Categories
உலக செய்திகள்

அபாய கட்டத்தில் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகள்.. மேலும் மழைக்கு வாய்ப்பு.. ஆபத்தில் மக்கள்..!!

சுவிட்சர்லாந்தில் அதிகமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சில பகுதிகள் அபாயமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், கடும் இடி மின்னலுடன் மழை பொழிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆறுகள் ஏரிகள் முழு கொள்ளளவில் நிறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lucerne ஏரியின் கறைகள் உடையும் நிலையில் இருப்பதால் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பெடரல் சுற்றுச்சூழல் அலுவலகமானது ஆபத்து அளவில் ஐந்தாம் மட்டத்தை அடைந்துவிட்டதாக கூறியிருக்கிறது. இது நூறு வருடங்களுக்கு ஒரு தடவை நிரம்பக் கூடிய அளவு […]

Categories
உலக செய்திகள்

பெருவெள்ளத்தில் மிதக்கும் ஐரோப்பிய நாடுகள்.. எகிறும் உயிரிழப்பு எண்ணிக்கை.. பலர் காணாமல் போன அவலம்..!!

ஐரோப்பிய நாடுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலர் உயிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வெள்ளத்தால் அதிக பாதிப்படைந்திருக்கிறது. எனவே தினசரி உயிரிழப்புகள் அதிகரித்திருக்கிறது. தற்போது வரை சுமார் 60 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் முழுக்க பாதிப்படைந்தது. சாலையில் நின்ற வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது. ஜெர்மனியில் மட்டும் பலர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் கூரைகளின் மேல் […]

Categories

Tech |