Categories
உலக செய்திகள்

ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படும் நபர்… காரணம் என்ன?… வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கிறார். பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் பாதுகாவலராக இருந்த டேவிட் ஸ்மித், பிரிட்டன் அதிகாரிகளின் பெயர்கள் உட்பட சில தகவல்களை ரஷ்ய உளவாளிகளிடம் கொடுத்து பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். எனவே, அவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். காவல்துறையினர் அவரின் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு ரஷ்ய நாட்டின் கொடி, சோவியத் ராணுவ தொப்பிகள், ரஷ்ய மொழியில் நிறைய […]

Categories
உலக செய்திகள்

அதிக செலவில் கட்டப்பட்ட அரசு முனையம்…. அகற்ற முடிவெடுத்த புதிய நிதியமைச்சர்… என்ன காரணம்…?

ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விமானநிலையத்தில், அதிக செலவில் கட்டப்பட்டு முடிக்கப்படாமல் உள்ள புதிய அரசு முனையத்தை நீக்குவதற்கு புதிய நிதியமைச்சர் தீர்மானித்திருக்கிறார். ஜெர்மனில் ஓலாஃப் ஷோல்ஸ், அதிபராக பதவியேற்றவுடன் புதிய அமைச்சரவையை ஏற்படுத்தினார். அந்த வகையில் புதிய நிதியமைச்சராக கிரிஸ்டியன் லிண்ட்னர் நியமிக்கப்பட்டார். இவர், வரும் வருடங்களில் நாட்டின் செலவினங்களுக்கான பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில், புதிய நிதி அமைச்சரான இவர் முன்புள்ள செலவினங்களை ஆராய்வதற்காக சக பணியாளர்களை அழைத்தார். அப்போது பெர்லின் நகரில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய தூதரக சாலையில் மர்மமாக மரணமடைந்த அதிகாரி!”.. உடற்கூராய்விற்கு அனுமதி மறுப்பு..!!

பெர்லினில் இருக்கும் ரஷ்ய தூதரக சாலையில் ஒரு அதிகாரி மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் ரஷ்ய தூதரக சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதியன்று ஒரு அதிகாரி மர்மமாக இறந்து கிடந்திருக்கிறார். அவர் தூதரக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த அதிகாரி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர்ந்த பதவியிலும், தூதரகத்தின் இரண்டாவது செயலர் பொறுப்பிலும்  இருந்திருக்கிறார். அவர், உயிரிழந்ததற்கு காரணம் என்ன? என்பது […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன சகோதரி…. சி.சி.டிவியில் சிக்கிய சகோதரர்கள்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

சகோதரர்கள் இருவர் சேர்ந்து சகோதரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்லின் நாட்டில் கடந்த ஜூலை மாதம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண் திடீரென காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதில் போலீசாருக்கு அந்த பெண்ணின் சகோதரர்கள் இருவர் மீது சந்தேகம் எழும்பியுள்ளது. இந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அந்தப் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

அயர்லாந்திலிருந்து, போலந்திற்கு சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அயர்லாந்திலிருந்து Ryanair நிறுவனத்தின் விமானம், சுமார் 160 பயணிகளுடன் போலந்து நாட்டிற்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இரவு சுமார் எட்டு மணிக்கு விமானம் திடீரென்று பெர்லினில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியுள்ளது. அதன்பின்பு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் பெடரல் காவல்துறையினர், உடனடியாக அந்த விமானத்தை சூழ்ந்து மோப்ப நாய்களுடன் விமானத்திற்குள் சோதனை செய்துள்ளார்கள். அதில் எந்தவித […]

Categories
உலக செய்திகள்

“பிசாசு”!! முத்திரை குத்திய மாடல் அழகி… குடியிருப்பில் சடலமாக மீட்பு… பிரபல கால்பந்து வீரருடன் காதலா …??

கால்பந்து வீரரின் காதலியும்  மாடல் அழகியுமான 25 வயதுடைய பெண் குடியிருப்பில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெர்லினில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் மாடல் அழகி Kasia Lendirt(25) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவர் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Kasia ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதன்பின்பு இவர் முன்னாள் காதலனை பிரிந்து […]

Categories

Tech |