நாட்டில் ஆன்லைன் விளையாட்டால் அதிக அளவில் தற்கொலைகள் அதிகரிப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகள் தங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக சிறுவயதிலிருந்தே விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக செல்போனை கொடுத்து விடுகிறார்கள். […]
Tag: பெற்றோர்கள்
பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகள் சொல்லும் சிறிய விஷயங்களை இப்போது இருந்தே காது கொடுத்து கேட்பது உங்களுக்கு தான் நல்லது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஆனால் குழந்தைகளைப் புரிந்து கொள்ள நாம் முயல்வதே இல்லை மாறாக, குழந்தைகள் தான் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். இதன் காரணமாகவே குழந்தைகளை எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். உங்கள் […]
ஆக்ராவில் கல்லூரிக்கு வரும் மாணவிகள் அனைவரும் பாய் பிரண்டோடுதான் வரவேண்டும் என அச்சிடப்பட்ட நோட்டீசால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆக்ராவில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் லேட்டர் பேடில், கல்லூரியின் லோகோ பேராசிரியர் கையெழுத்துடன் கூடிய ஒரு நோட்டீஸ் வலம் வந்து உள்ளது. அதில் வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி கல்லூரியில் பயிலும் மாணவிகள் அனைவரும் பாய் பிரண்டோடுதான் கல்லூரிக்கு வர வேண்டும். இல்லையெனில் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அச்சிடப்பட்டிருந்தது. இதை கண்டு மாணவர்களின் பெற்றோர்கள் […]
பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை. குழந்தையை வளர்க்கும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒன்று. சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு ஒரு சில தீர்வு இருக்கும். அத்துடன் பெற்றோர்கள் ஒரு முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்வது அவசியம். மலச்சிக்கல் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் பசலைக் கீரையை எடுத்து பொடியாக அரிந்து வேக வைத்துக் கொடுக்கவேண்டும். தேங்காய்ப்பால் வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் எடுத்து கடித்து […]
உங்கள் குழந்தை தொடர்ந்து கை சூப்புவதை தவிர்க்க மருந்துகள் தடவுவதை தவிர்த்து இதனை செய்து வந்தால் போதும். நம் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக முக்கியமான கடமை. அதனை பெற்றோர்கள் சரியாக செய்ய வேண்டும். அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உணவளிப்பது, அறிவுப்பூர்வமான செயல்களை சொல்லிக் கொடுப்பது என அனைத்தையும் பெற்றோர்கள் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது குழந்தைகள் கை சூப்புவதை தடுப்பதுதான். உங்கள் குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க, […]
தமிழகத்தில் தொடர் மழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிவதால் குழந்தைகளை அங்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக மற்றும் ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தேவகோட்டை அருகே பூண்டி கிராமத்தில் கண்மாயில் குளித்த மூன்று […]
ஆன்லைன் கிளாஸ்க்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த குழந்தைகளை பெற்றோர் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமி பாலியல் […]
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் வலியுறுத்தியுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கடந்த நவம்பர் மாதம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பை தமிழக அரசு ரத்து […]
பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை அதிரடியாக குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பித்து வருகின்றனர். […]
ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு நான்கு நாட்களில் 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பது பற்றி மாநில அரசுகள் இறுதி முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கடந்த […]
ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா பரவியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டன. மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பள்ளி திறந்து இரண்டு நாளே ஆன நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் பள்ளியில் 150 […]
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு […]
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயப் பணியில் இறங்கி நாற்று நட்டது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நாற்று நடும் பணியை தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் பெற்றோருடன் விவசாய பணியில் இறங்கியுள்ளனர். கல்லூரி […]
ஆன்லைன் வகுப்புகள் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர். கொரோனா கால பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுகின்றது. இந்த கல்வி ஆண்டு தொடங்கி மூன்று மாதங்களாகியும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் குறைப்பு போன்ற எந்த ஒரு விஷயத்தையும் அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மூன்று மாதங்களாக இணையம் வாயிலாக மெட்ரிக் பள்ளிகள் வகுப்புக்களை […]
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது […]
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சிறுவர்கள் இணைய விளையாட்டிற்கு அடிமையாகி வருவது பெற்றோர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. நகரங்களில் மட்டுமல்லாது தற்போது கிராமங்களில் இருக்கும் சிறுவர்களின் மத்தியில் மொபைல் விளையாட்டுகள் பிரபலமாகி உள்ளது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர்களை இந்த இணைய விளையாட்டுகள் தற்போது தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் சிறுவர்களும் இதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுவர்கள் இதிலேயே மூழ்கிப் போகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு […]
குழந்தைகளுக்கு கொரோனா குறித்து அன்பாக விளக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். உலகையே அச்சுறுத்தும் கொரோனா நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. அவர்களுக்கு சுற்றி என்ன நடக்கிறது, ஏன் யாரும் வெளிய செல்லக்கூடாதென்று கூறுகிறார்கள் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அப்பொழுது நம்முடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் மாறுபடும், பதட்டத்தோடும் செயல்படுவோம். அதையெல்லாம் குழந்தைகள் பார்த்து மேலும் அச்சமடைவார்கள். அதனால் இந்த பயம்கூட அவர்களுக்கு மிகப்பெரிய கொடிய நோயாகும் என்பதை துளி அளவில் கூட மறந்துவிடாதீர்கள். இதனால் குழந்தைகளுக்கு […]
குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வுப், தற்காப்பு பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும். வேகமாக பரவி வரும் கொரோனோவை தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதை நம் வீட்டு பிள்ளைகள் அறிந்திருக்க மாட்டார்கள், அதனால் அவர்கள் விளையாட்டாக இருப்பார்கள். நாம் தான் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை பற்றி எடுத்துரைத்து அலட்சியம் இல்லாமல் இருக்க செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இவற்றிற்கு […]
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்ல முறையிலும் வளர்ப்பது அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் அவ்வாறு ஆரோக்கியமாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில வழிமுறைகள் தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் மற்றும் கேமராவில் இருக்கும் ஃபிளாஷ் மூலம் குழந்தைகளின் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு அவ்வப்போது சளி இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரின் […]
குழந்தைகளிடம் தயவுசெய்து இந்த வார்த்தைகளை மட்டும் சொல்லாதீர்கள். அது அவர்களின் மனதில் நெகட்டிவ் எண்ணங்களை உருவாக்கும்..!! குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை, இதுதான் அதன் எல்லை என்று வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் உள்ளது. குழந்தைகள் கண்ணாடியை போன்றவர்கள், நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோம் அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாக பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத வார்த்தைகளை பற்றி பார்ப்போம். 1. எந்த […]
குழந்தைகள் தவறு செய்தால் தட்டிக்கொடுங்கள், நல்வழிபடுத்த அன்பான முறையில் கூறுங்கள். பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..! குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள். அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டுமே பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை. பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழிநடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். குழந்தைகள் பிறந்தபின் அவர்கள் நல்லதையே செய்ய வேண்டுமென்றும், அறிவாளியாக தான் இருக்க வேண்டும் […]