பெல்ஜியத்தில் இரவு நேரத்தில் பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசில்சின் ஷர்க்பீக்கில், நேற்று இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென்று கத்தியுடன் வந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். மற்றொரு அதிகாரியையும் அந்த நபர் தாக்கினார். அவர் தன் […]
Tag: பெல்ஜியம்
பெல்ஜியத்தில் வசிக்கும் ஓரினச்சேர்க்கையாளரான ஜெர்மன் நாட்டை சேர்ந்த தூதர் தன் துணைவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தூதரான உவே ஹெர்பர்ட் ஹான், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் துணைவரான வால்டர் ஹென்றி மாக்சிமிலியன் பயோட் மர்மமாக உயிரிழந்ததாக காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அவர், தன் துணைவர் மது அருந்திவிட்டு மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறியிருக்கிறார். எனினும் உயிரிழந்தவரின் உடல், மற்றும் வீட்டை ஆய்வு […]
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2நாள் மாநாடு இன்று துவங்குகிறது. இவற்றில் உக்ரைனை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நேட்டோவில் இணையக்கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காத காரணத்தால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு நிதிஉதவி மற்றும் ஆயுதஉதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் உறுப்புநாடு என்றால் தான் நேரடியாக ராணுவ உதவி […]
ஐரோப்பிய மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக பெல்ஜியத்தில் மாம்பழத்திருவிழா தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியா உலகநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் முக்கிய நாடாக திகழ்கிறது. எனினும் அதிகமான மாம்பழங்கள் மத்திய கிழக்கு நாடுகளைத் தான் சென்றடைகின்றன. ஐரோப்பிய யூனியன், லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு உரிய இந்திய தூதரான சந்தோஷ் ஜா, இந்திய நாட்டின் மாம்பழங்களுக்கு ஐரோப்பியாவில் பெருமளவில் சந்தை மதிப்பு இருக்கிறது என்று கூறினார். இந்திய தூதரகத்தினுடைய கடல்சார், வேளாண்மை பொருட்களுக்கான ஆலோசகராக இருக்கும் மருத்துவர் ஸ்மிதா […]
கடந்த 2015-ஆம் ஆண்டு பெல்ஜியமில் ஒரு லிட்டர் பாலின் விலை 10 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது பால் பொருட்களின் விலை குறைந்ததால் பாலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமையில் வாடிய விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் சாலைகள் மற்றும் வயல்களில் பாலைக் கொட்டி கவிழ்த்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக ஒரு மிகப்பெரிய போராட்டம் நடந்துள்ளது. அந்தப் போராட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பாலை பீய்ச்சி அடித்துள்ளனர். மேலும் […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது வெளி நாடுகளில் பலவற்றில் ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காச்சல் கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குரங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தவர்கள் […]
புற்றுநோயால் சிரமப்படும் கணவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்வதற்காக பெல்ஜியம் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான சோஃபி வில்மஸ் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளாா். கடந்த 2019-2020ஆம் வருடம் வரை பிரதமராகப் பொறுப்பு வகித்த வில்மஸ், ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கிறிஸ்டோஃபா் ஸ்டோனை சென்ற 2009-ஆம் ஆண்டு மணந்தாா். இப்போது ஸ்டோனுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதைத் அடுத்து தன் பதவியை ராஜினாமா செய்வதாக வில்மஸ் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, என் கணவா் மூளைப் புற்றுநோயால் […]
பெல்ஜியம் நாட்டில் ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் நோட்டோ மாநாட்டில் பங்கேற்க உக்ரைன் நாட்டிற்கு அழைப்பு வந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெல்ஜியம் நாட்டில் பிரசெல்ஸில் வைத்து ஏப்ரல் மாதம் 6,7ம் தேதிகளில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டில் ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு போன்ற நாடுகள் (வட அட்லாண்டிக் ஒப்பந்த […]
பணி நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அரசு ஊழியர்களை அழைக்கக் கூடாது என்ற புதிய திட்டத்தை அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது என்பது உண்மையாகும். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டு அரசும் தனது ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏனென்றால் அரசின் நலத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைவதில் அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் புதிய […]
பெல்ஜியத்தில் பாஸ்போர்ட்களில் பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வரையப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தின் கார்ட்டூன் கதைகளை பிரபலப்படுத்துவதற்காக, மக்களின் பாஸ்போர்ட்களில் கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து கொடுக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அதாவது, நாட்டில் பிரபலமான ஸ்மர்ப்ஸ், டின்டின் ஆகிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பாஸ்போர்ட்டில் வரையப்படுகிறது. பிற நாடுகளின் பாஸ்போர்ட்களிலிருந்து, தங்களது பாஸ்போர்ட் தனித்துவமாக இருப்பதற்காகவும், அதனை பிரபலமாக்குவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
பெல்ஜியம் அரசு அந்நாட்டில் அரசு அலுவலக மேலதிகாரிகளுக்கு புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது அரசு அலுவலக மேலதிகாரிகள் பணி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் ஊழியர்களை அழைக்க கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த உத்தரவானது பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பெல்ஜியம் அரசு ஊழியர்கள் “Right to Disconnect” என்ற இந்த முறையை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பெல்ஜியத்தில் ரயில் வரும் சமயத்தில் ஒரு பெண்ணை ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெல்ஜியத்தில் உள்ள பிரஸல்ஸ் என்னும் நகரத்தின் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை அவரின் பின்புறமிருந்து ஒரு நபர் ரயில் வந்துகொண்டிருந்த சமயத்தில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். (⚠️Vidéo choc)Tentative de meurtre dans la station de métro Rogier à Bruxelles ce vendredi […]
தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்படும் முன்பே நெதர்லாந்தில் பரவிவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஓமிக்ரோன் வைரஸ் முதல் தடவையாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் நவம்பர் 19 மற்றும் 23ம் தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரோன் பாதிப்பு இருந்திருக்கிறது என்பது, தற்போது தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஜெர்மன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் முன்பே ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனினும் தற்போது வரை, […]
பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரதம மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா முழுவதும் கொரோனோவின் நான்காம் அலை பரவி வரும் நிலையில், பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று, பிரான்ஸ் நாட்டின் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், பெல்ஜியம் நாட்டிற்கு சென்று வந்திருக்கிறார். அதன் பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரதமர் அடுத்த பத்து தினங்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. எனவே, பெல்ஜியத்தின் பிரதமருக்கு […]
ஒரு பெண் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் சிம்பன்சி குரங்கை நேசிப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் Adie Timmermans என்ற பெண் வாழ்ந்து வந்துள்ளார். அவர் Antwerp மிருகக்காட்சிசாலையில் Chita எனும் 38 வயதுடைய சிம்பன்சி குரங்கை சந்தித்து அதனுடன் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். அந்த சிம்பன்சி குரங்கும் அவருடன் அதிக நேரத்தைச் செலவழித்துள்ளது. இதனை கவனித்த அதிகாரிகள் Adie Timmermans அழைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் அளித்த பதில் அதிகாரிகளை அதிர்ச்சியில் […]
ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டின் மேற்குப் பகுதிகளில் கடந்த புதன்கிழமையிலிருந்து கனத்த மழை பொழிந்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு உருவானது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து பெல்ஜியம் போன்ற நாடுகளும் பாதிப்படைந்திருக்கிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்களும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. எனவே அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர். இதற்கிடையே, மீட்புப்படையினர் காணாமல் போனவர்களை தேடி […]
ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தொடர் மழையால் வெள்ளம் வடியாமல் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே ஜெர்மனி ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு பகுதியில் நேற்று பெய்த கனமழையால் 6 வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் 25 வீடுகள் இடிந்து விழும் நிலையிலும் […]
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 90 வயதான பெண் ஒருவருக்கு ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் ஆல்ஸ்ட் நகரில் உள்ள OLV மருத்துவமனையில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி 90 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினமே பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று 2-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு – நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது .இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.ஆனால் 2-வது பாதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் தாமஸ் ஹோல்ஸ் 68-வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க , இவரை […]
பெல்ஜியமில் வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்படுவதாக இருந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த தொடக்கப்பள்ளியானது வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்படவிருந்ததால் அங்கு கட்டுமானப் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. மேலும் அங்கு கட்டுமான பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதில் தொழிலாளர்கள் […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெல்ஜியம் அணி ரஷ்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பின்லாந்து -டென்மார்க் அணிகள் மோதிக் கொண்டன. ஆனால் போட்டி தொடங்கி முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் , திடீரென்று டென்மார்க் அணி வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி விழுந்தார். இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . இந்நிலையில் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டியன் கண் விழித்துவிட்டதாகவும், மேலும் […]
சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த பெல்ஜியத்தை சேர்ந்த மாணவி, காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவி Sarah Kassandra (21). இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள Valais என்ற மண்டலத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவில் Sarahவிற்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விடுதியிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால் தற்போது வரை அவர் விடுதிக்கு திரும்பாததால் காவல்துறையினரிடம் […]
பெல்ஜியத்தில் ஒரு ராணுவ வீரர் பயங்கரமான ஆயுதங்களுடன் காணாமல் போனதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பெல்ஜியத்தில் ராணுவ வீரர் ஒருவர், தொற்று நோயியல் நிபுணராகவுள்ள Marc Van Ranst என்பவரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் அவர் இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதித்துறை அமைச்சர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, அந்த நபர் ராணுவ முகாமிலிருந்து சக்தி வாய்ந்த ஆயுதங்களை திருடி வந்திருக்கலாம். அது […]
பெல்ஜியத்தில் ஒரு விவசாயி தன் பகுதியில் இடையூறாக இருந்த ஒரு கல்லை தள்ளிவைத்ததால் இரு நாடுகளுக்கிடையிலான எல்லையே மாறியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் இருக்கும் Erquelinnes என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயி, அவரது இடத்தில் இடையூறாக இருந்த ஒரு கல்லை ட்ராக்டர் மூலமாக 2.29 மீட்டர் தூரத்தில் தள்ளி வைத்திருக்கிறார். அந்த கல்லினால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று அவர் அறியவில்லை. அதாவது பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அந்த கல் சுமார் […]
பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர் வித்தியாசமான மாஸ்க் அணிந்து வீதிகளில் சென்றது அனைவராலும் தற்போது கவரப்பட்டு வருகின்றது. பெல்ஜியத்தில் சமூக ஆர்வலர்களுள் ஒருவரான கலைஞர் ஆலியன் வெர்சூரன் (61) புருசல்ஸ் வீதிகளில் சென்ற போது கண்ணாடி கூண்டினால் ஆன ஒரு வித்தியாசமான மாஸ்க்கை அணிந்து கொண்டு சென்றுள்ளார். மேலும் அந்த கண்ணாடி கூண்டினால் ஆன மாஸ்கினுள் பச்சை பசேலென்று இருந்த நறுமணமிக்க செடிகள் அனைவராலும் கவரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் அந்த முதியவர் அணிந்திருக்கும் மாஸ் தூய்மையான […]
பெல்ஜியத்தில் தன் முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 27 வயதான பெண் இவருக்கு இரண்டு பிள்ளைகள இருந்த நிலையில் தன் முன்னாள் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நடக்கும்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4வயது இளைய மகளுக்கு அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் போலீசாரிடம் அம்மாவின் உடலில் ஏன் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது? என்று கேட்ட செயல் மனதை பதைபதைக்க வைக்கிறது. அப்போது […]
பெல்ஜியம் அரசு அந்த நாட்டில் சாக்லேட்டும், பீரும் அத்தியாவசிய பொருளில் ஒன்றாக அறிவித்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட் உலகப் புகழ் பெற்றது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் பெல்ஜியம் சாக்லெட் விற்பனை சற்று சரிவை கண்டது. இதில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டது. அத்தியாவசியம் இல்லாத பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாக்லேட்கள் மட்டும் ஊரடங்கு […]
பெல்ஜியத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையில் சாண்டா கிளாஸ் வருகையால் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது சாண்டா க்ளாஸ்ம், பரிசுப்பொருட்களும் தான். அந்த வகையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தற்போது சோகத்தில் முடிந்துள்ளது.அந்நாட்டின் ஆண்ட்வெர்ப், மோலில் உள்ள ஹெமெல்ரிஜ்க் பராமரிப்பு இல்லத்திற்கு சாண்டா கிளாஸ் உடையணிந்த நபரின் வருகைக்கு பிறகு, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தொற்று ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 18 […]
பெல்ஜியம் துணை பிரதமர் மாஸ்க் அணிய திணறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பெல்ஜியம் துணைப் பிரதமரான Koen Geens தையல் நிலையம் ஒன்றிற்கு 35000 துணியாலான மாஸ்க்குகளை தன்னார்வலர்கள் செய்து நாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கு அவருக்கும் மாஸ்க் கொடுக்கப்பட்டது. Koen Geens மாஸ்க்கை அணிய தெரியாமல் முதலில் நெற்றியில் அதனை அணிய அவரது காதுகளுக்குள் மாஸ்க் செல்லவில்லை. https://video.dailymail.co.uk/preview/mol/2020/05/04/2690830845026808644/636x382_MP4_2690830845026808644.mp4 பின்னர் கண்கள் மீது அணிந்து மூக்கையும் வாயையும் மாஸ்க்கை இழுத்து […]
பெல்ஜியத்தில் ஊரடங்கு தளர்த்துவதற்கான விதிமுறைகள் குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் 12ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். முக கவசம் தேவையை நிவர்த்தி செய்ய […]
பெல்ஜியம் அறிவியலாளர்கள் விலங்கு ஒன்றின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லாமாக்கள் (llama) எனப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்குகளின் உடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
பெல்ஜியம் ஜிப்ராக் துறைமுகத்தில் கடந்த புதன் கிழமை முதல் லைனர் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 3000-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். சீனாவின் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து பெல்ஜியத்தில் கொரானா வைரசால் 3 பேர் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்த பயணிகள் உள்ள நிலையில் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் […]
3000த்திற்கும் மேற்பட்ட மக்களுடன் ஒரு கப்பல் பெல்ஜியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கப்பல் பெல்ஜியத்தின் ஜீப்ரக் துறைமுகத்தில் நேற்று முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் பிளாண்டர்ஸ் மாகாண ஆளுநர் கார்ல் டெகலுவே (West Flanders provi0nce governor Carl Decaluwe) இந்த தடையை விதித்துள்ளார். பெல்ஜியத்தில், கொரோனா வைரஸால் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இத்தாலியைச் சேர்ந்த சுமார் 2,500 பயணிகளும் 640 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கார்னிவல் […]