தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நடுப்பாளையம் பகுதியில் கார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவர் பேக்கரி பொருள்கள் தயாரித்து ஊர் ஊராக விற்பனை செய்துவரும் தொழில் நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கார்த்திபன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திபன் பணம் வாங்குவதற்காக ஈரோடு சென்று வருகிறேன் என்று வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். இதனையடுத்து கார்த்திபன் […]
Tag: பேக்கரி
கேரளாவில் ஒரு பேக்கரியில் 25 ஆயிரம் பிஸ்கட்டுகளை பயன்படுத்தி தீயம் ஓவியத்தை உருவாக்கியுள்ளனர். கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓவியங்களில் ஒன்று தீயம் முகம். இது கேரள பாரம்பரிய சின்னமாக கருதப்படுகிறது. கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ‘பேக் ஸ்டோரி’ என்ற பெயரில் சுமார் 25 ஆயிரம் பிஸ்கட்டுகளை பயன்படுத்தி பாரம்பரியமிக்க தீயம் ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை கேரளாவின் பிரபல கலைஞரான தான் டொன்விசி சுரேஷ் உருவாக்கியுள்ளார். கடையின் மையப்பகுதியில் டேபிள்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதன் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனபடி, தனியாக செயல்படும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
கிறிஸ்துமஸை முன்னிட்டு ராமநாதபுரம் பேக்கரி ஒன்றில் மறைந்த கால்பந்து வீரர் மாரடோனா உருவத்தில் தயாரிக்கப் பட்ட பிரமாண்டமான கேக் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு அண்மையில் மறைந்த சர்வதேச கால்பந்து வீரர் மாரடோனா முழு உருவ கேக் சிலை உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 6 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கேக்கை 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகள் கொண்டு நான்கு நாட்களில் […]