Categories
தேசிய செய்திகள்

“ரயில்வே துறையை நவீனப்படுத்த மாபெரும் முதலீடு”…. பிரதமர் மோடி தகவல்….!!!!

மேற்கு வங்கத்தில் ஹௌராவில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்பு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக்கூடியவை என தெரிவித்தார். இதற்கிடையில் பிரதமர் மோடி பேசியதாவது “வந்தே மாதரம் முழக்கம் உருவான இடத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் ரயில் சேவை துவங்கப்பட்டு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“விமர்சனத்தை உதயநிதி தனது சேவை மூலம் நிரூபிப்பார்”… முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை பேச்சு…!!!!!

உதயநிதி ஸ்டாலின் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான போது எழுந்த விமர்சனத்தை உதயநிதி ஸ்டாலின் சேவை மூலமாக எதிர்கொண்டு நிரூபித்துள்ளார். அதேபோல் தற்போது அமைச்சரான பின்பும் எழுந்துள்ள விமர்சனத்தையும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேவை மூலமாக நிரூபிப்பார் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளது. அதாவது இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு கிராமப்புற கடன்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் போன்ற முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பை அவர்களால் தான் உறுதிப்படுத்த முடியும்”…. மத்திய அமைச்சா் பேச்சு….!!!!

தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வீரா்களுக்கான வீடு ஒதுக்கீடு மற்றும் தகவல் தொடா்புக்காக உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) “பிரஹாரி” கைப்பேசி செயலியை மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது ” சா்வதேச எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் கடினமான நில அமைப்பு காரணமாக வேலிகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அவ்வாறு வேலிகள் அமைக்க இயலாத பகுதிகளில் பிஎஸ்எஃப் சாா்பாக உருவாக்கப்பட்ட மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வீரா்கள் பயன்பாட்டுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளையராஜா என்னுடைய உணர்வு”…. இயக்குனர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சி…..!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இப்போது விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படத்தை இயக்குகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் எனும் அமைப்பின் வாயிலாக சென்ற 2 ஆண்டுகளாக “மார்கழியின் மக்களிசை” என்ற இசை விழாவை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்றார். அப்போது பா.இரஞ்சித் பேசியதாவது, “இளையராஜா என்னுடைய உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போல் தான் இளையராஜா எனக்கு. அவர் பாடல்களை கேட்கும் போது எமோஷனலாக இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

“பொறுப்பான செல்லப் பிள்ளையாக என்றுமே இருப்பேன்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “நான் திருச்சிக்கு பல முறை வந்துள்ளேன். அதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, எம்எல்ஏவாக வந்திருக்கிறேன். தற்போது முதன் முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வருகை தந்திருக்கிறேன். இந்த தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது பிற மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறது. முத்தமிழ் அறிஞரின் பேரனாகவுள்ள பெருமையைவிட உங்களது […]

Categories
தேசிய செய்திகள்

நிலம் கையகப்படுத்துவது தமிழர்களிடம்… ஆனால் வேலை மட்டும் அவங்களுக்கா?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!!

கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், பெங்களூருவுக்கு செல்லும் சாட்டிலைட் சாலை அமைக்கவும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டத்தில் பங்கேற்று தன் ஆதரவை தெரிவித்தார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த பகுதியில் 500 ஏக்கர் கையகப்படுத்துவதாக கூறிய […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க-வினர் கட்சிக்கு ஆள்பிடிக்காங்க”…. டிடிவி தினகரன் அதிரடி பேச்சு…..!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அமமுகவிலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே அ.தி.மு.க-வுக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதனால் அவர்களை நான் வரச் சொல்லியிருக்கிறேன். அதிமுகவினர் எங்களது கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க இயலும். அ.ம.மு.க வீரர்களின் பட்டாளம் ஆகும். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கமானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விலகி செல்பவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

25 எம்பிக்கள் டெல்லி செல்வது உறுதி…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பாக மொத்தம் 25 எம்பிக்கள் வெற்றி பெற்று டெல்லி செல்வது உறுதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆளும் கட்சி அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கூட தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதன் காரணமாக மக்கள் மீது இந்த அரசுக்கு வெறுப்பு வந்து விட்டது. ஆகையால் கண்டிப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

“ராகுல் பேசுவது நேரு பேசுவது போல இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழாவானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நூலினை வெளியிட்டார். இதையடுத்து முதல்வர் பேசியதாவது “ராகுல்காந்தி பாத யாத்திரை வாயிலாக இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ராகுல் பேசுவது நேரு பேசுவது போன்று இருக்கிறது. கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி,நேரு வாரிசுகளின் பேச்சானது எரிச்சலை ஏற்படுத்த தான் செய்யும்” என அவர் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

பொய்யிலே பிறந்து வளர்ந்தவர் சசிகலா!…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்….!!!!

2004ம் வருடம் ஏற்பட்ட ஆழிபேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். லான்ச் படகு வாயிலாக நடுக் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும் மறைந்தவர்களுக்கு மரியாதை செய்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யவில்லை. ஓ.பி.எஸ் ஒரு டம்மி, ஒரிஜினல் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மேல் எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நான் உங்கள் வீட்டு செல்லப் பிள்ளை”… அதுதான் என்னோட ஆசை!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

கோவைக்கு வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற பெருமையை விட நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.க எங்கு இருக்கு?… எத்தனை பேர் இருக்காங்க?…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்பீச்….!!!!

பெரியார் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் வழிநடத்தி வருகிறார். மேலும் ஒன்றரை வருடங்களில் அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரிசெய்து 85 விழுக்காடு வாக்குறுதிகளை முழுவதுமாக வழங்கி இருக்கிறார். பா.ஜ.க […]

Categories
மாநில செய்திகள்

இறப்பதற்கு முன் அவர்களுக்கு நகை, பரிசு கொடுக்க ஆசைப்பட்ட “ஜெ”…. சசிகலா சொன்ன புது தகவல்….!!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா மரணம் பற்றி சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது “சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம் என ஜெயலலிதாவிடம் நான் கேட்டபோது வேண்டாம் என்று அவர் மறுத்தார். அவரை வெளிநாடு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. ஆனால் தமிழகத்திலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாகவும் , சிகிச்சையின் போது தன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஜெயலலிதா கூறினார். இறக்கும் அன்று மாலை வேளையில் அவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

“நான் யார் பக்கமும் இல்லை பொதுவான நபராக செயல்படுகிறேன்”… சசிகலா பேச்சு…!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா கலந்து கொண்டார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றவர்களுக்கு புத்தாடை மற்றும் கேக் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, நான் யார் பக்கமும் இல்லை. நான் அனைவருக்கும் பொதுவான நபராக தான் செயல்படுகிறேன். நான் இருக்கும் வரை அ.தி.மு.க தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். மேலும்  அ.தி.மு.க-வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன். […]

Categories
மாநில செய்திகள்

“கருணாநிதி குடும்பத்தை விட அந்த கும்பலே மேல்”…. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஸ்பீச்…..!!!!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்துவரி உள்ளிட்ட விலைவாசி அதிகரிப்பை கண்டித்தும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மாவட்டங்கள்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் தி.மு.க அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும், பல வகையிலான விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவற்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார். அப்போது கே.சி.வீரமணி பேசியதாவது “இந்தியாவில் 520 வாக்குறுதிகளை கொடுத்தது தி.மு.க கட்சி மட்டும்தான். எனினும் அதில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்தி பயன்படாது… ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளுங்கள்”…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி….!!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகின்றார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் முடிவடைகின்றது. இந்நிலையில் ஒற்றுமை பாத யாத்திரையில் நேற்று ராஜஸ்தான் ஆழ்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உலக மக்களிடம் பேச இந்தி பயன்படாது எனவும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும் உலகின் மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால் இந்தி ஒருபோதும் உங்களுக்கு பயன்படாது, […]

Categories
மாநில செய்திகள்

வாட்ச் விவகாரம்: 10 வருஷத்தில் எவ்வளவு வரவு செலவு?…. அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு….!!!!

பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு சார்பாக சென்னை கீழ்பாக்கத்தில் “சமத்துவ கிறிஸ்துமஸ் விழா” கொண்டாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பல மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது “பா.ஜ.க குறித்து கூறப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் எடுத்து வருகிறோம். 2024ல் மிகப் பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பா.ஜ.க ஏற்படுத்தும். அரசு பணத்திலிருந்து 1 ரூபாய் கூட இப்போது வருமானம் பெறவில்லை. எனினும் என்னிடம் தி.மு.க ஒரு கேள்வி கேட்டுள்ளது. தி.மு.க-வினர் என் உடைகள், கடிகாரம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டின் பொது சொத்து அவர்!…. ஆனால் உரிய மரியாதையை அரசு செய்யல!…. வருத்தம் தெரிவித்த பாரதிராஜா….!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் வைத்து நடந்தது. இந்த விழாவில் டைரக்டர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசினார். அதாவது “சிவாஜிக்கான உரிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை. தற்போது பாரதிராஜா பேசுகிறேன் எனில் அது அவர் போட்ட பிச்சை என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் இந்த நாட்டினுடைய பொதுசொத்து ஆவார். எனினும் அவருக்கு கிடைக்கவேண்டிய இணையான பட்டம் என்று எதுவுமில்லை” என […]

Categories
மாநில செய்திகள்

“கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க”….. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி ஸ்பீச்…..!!!!!

நான் என்னுடைய சொத்து விபரங்களை விரைவில் வெளியிடுவேன். அதேபோன்று தி.மு.க தலைவர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட தயாரா? என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். தற்போது இதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருப்பதாவது “சம்பள கணக்கை வெளியிடுகிறேன். மேலும் சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை எல்லாம் சொல்ல வேண்டாம். 5 லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா (அல்லது) இனிமேல் தான் தயார் செய்ய வேண்டுமா என்று […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…”ஞாபகம் வருதே பாடல் தான் நினைவிற்கு வருகிறது”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

முதல்வர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்  கூறியதாவது, வெள்ளிகிழமை  இரவு முதலில் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கு போகிறேன் என்று. பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்நிலையில் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் 50 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறோம் பழைய நண்பர்களை பார்க்கின்றேன். எனக்கு இந்த பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

இப்போதே அதுக்கு ரெடி ஆகுங்க!… அமைச்சர் ஆனதும் புஃல் போர்ஸில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்….!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அமைச்சர் பதவியேற்றதும் அவர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதையடுத்து முதன்முறையாக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். அதாவது ஆந்திராவில் நடைபெறும் தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள செல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

அவருமில்லை, இவருமில்லை அடிச்சுக்காதீங்க!… தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் இவர்தான்!…. பா.ஜ.க அண்ணாமலை அதிரடி ஸ்பீச்…..!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். தி.மு.க அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் தினசரி விலைவாசி அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. தற்போதெல்லாம் பா.ஜ.க-வை பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய-திராவிடம் எனும் பிரிவினையை ஏற்காதவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதையெல்லாம் நிரூபிக்க முடிந்ததா?…. வடிவேலுவை சந்தித்து பேச நான் ரெடி….. நடிகர் சிங்கமுத்து ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலும், சிங்கமுத்துவும் சேர்ந்து நடிக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். 10 ஆண்டுகளுக்கு பிறகும் இவர்கள் இருவரும் இணைந்த நகைச்சுவை காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் காட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிங்கமுத்துவிடம் கேட்டதற்கு “நாங்கள் 2 பேரும் நேரில் சந்தித்து பேசினால் இப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும். யாரோ கூறியதை கேட்டுக் கொண்டு என் மீது உண்மைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திண்டுக்கல்லில் பொதுநுாலகத் துறை சார்பாக “நூலக நண்பர்கள் திட்டம்” தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் பங்கேற்று திட்டத்தை துவங்கி வைத்தனர். இதையடுத்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது “நுாலக நண்பர்கள் திட்டம் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதல் முறையாக துவங்கப்படுகிறது என்று கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அப்போது தான் கூட்டணி அறிவிக்கப்படும்!…. டிடிவி தினகரன் அதிரடி ஸ்பீச்….!!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழக்கூடிய ஒரு கேள்விதான். மேலும் அமமுகவின் தேர்தல் கூட்டணி அடுத்த ஆண்டு நவம்பர் (அ) டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவிற்கு பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் இபிஎஸ் அதனை வட்டார […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக் கூடாது!…. அமைச்சர் சு.முத்துசாமி அதிரடி ஸ்பீச்….!!!!

கோயம்பேட்டிலுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அலுவலகத்தில் நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பாக புதியதாக நியமனம் செய்யப்பட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் 30% -40% காலியிடங்கள் இருக்கிறது. ஆகவே நாங்கள் பதவியை நிரப்ப முயற்சிக்கிறோம். இதனிடையில் அதிகாரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை!… அவங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்ல!… ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி ஸ்பீச்….!!!!

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி இருக்கிறார். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுதந்திரப்போராட்டம் குறித்த பாடங்களில், அது காங்கிரஸ் இயக்கத்துடன் மட்டுமே தொடர்புடையது என போதிக்கக்கூடாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காந்தி ஒரு சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் கிடையாது. மேலும் சுதந்திரப் போராட்டத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிப்பது காங்கிரஸுடன் மட்டும் இருக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் வார்த்தையா?…. முத்தமிழறிஞர் கலைஞரின் மகனே அதை கண்டுபிடிங்க!…. தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்….!!!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “புயலால் பாதிப்பு வரக் கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புதுச்சேரியில் செய்யப்பட்டது. நல்ல முன் ஏற்பாடு காரணமாக பல்வேறு பாதிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது. புயலால் பல பேர் வீடுகளை இழந்து இருக்கின்றனர். இதற்கிடையில் இழப்பீடு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகின்றனர். உயிரிழப்பு இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைதான் சிறப்பான பணி ஆகும். மக்களை காக்கவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் மாண்டஸ் புயல் குறித்த நடவடிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

PM மோடி அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் ரூ75 ஆயிரம் கோடி மதிப்பில் ஆன திட்டப் பணிகளை  நேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து மராட்டிய கவர்னர் பகத்சிங், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில், இவ்விழாவில் பிரதமர் பேசியதாவது, சென்ற 8 வருடங்களில் நாங்கள் அனைவரின் ஆதரவுடனும், நம்பிக்கையுடனும், முயற்சிகளுடனும், மன நிலையையும், அணுகுமுறையையும் மாற்றிக்காட்டி இருக்கிறோம். நாக்பூரில் துவங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையான பார்வையை கொண்டுள்ளது. இங்கே துவங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை”… ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஓபன் டாக்….!!!!!

தூத்துக்குடியில் நடைபெறும் மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை. இதனால் ஒரு நல்ல தமிழ் பெயரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் என்னை அரசியல்வாதியாக பார்க்கின்றனர். ஆனால் நான் ஆளுநராக மட்டுமே வேலை […]

Categories
மாநில செய்திகள்

நான் சாதாரண ஸ்டாலின் இல்ல!… அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்!…. தமிழக முதல்வர் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.க நிர்வாகியான கோவி.அய்யாராசு என்பவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம். புயலுக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். புயலை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. இதற்கிடையில் உழைப்புதான் நம் மூலதனம் என்று கருணாநிதி கூறினார். நான் நம்பர்-1 முதல்மைச்சர் என்பதில் எனக்கு பெரிய பெருமை இல்லை. என்றைக்கு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… புயலில் இருந்து தமிழகம் தப்பித்தது…. இனி கவலை வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உட்பட சென்னையின் பல […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் குறித்து போப் ஆண்டவர் பேச்சு… திடீரென கண்ணீர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

போப்பாண்டவர் உக்ரைன் குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சர்வதேச நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரு தரப்பினரையும்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றுள்ளார். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!… அவங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாமா?…. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு….!!!!

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இவற்றில் மருத்துவம், கலை அறிவியல் உட்பட பல பாட பிரிவுகளில் படித்து முடித்த 2,241 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இந்திய மருந்தக கவுன்சில் மோண்டு பட்டேல், திரைப்பட டைரக்டர் சுந்தர் சி, விஜிபி […]

Categories
மாநில செய்திகள்

“80 வயது ஆனாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார்”…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களிலுள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிடபட்டது. இதையடுத்து தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, “நமது நிலம் நமதே” என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அன்னூர் – ஓதிமலை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க-வை ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்ல!…. அவங்க 8 பேர் தான்…. அமைச்சர் ஜெயக்குமார் சாடல்….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது தி.மு.க-வை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது, தி.மு.க-வை இன்று ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்லை. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-விற்கு சென்ற 8 பேர் தான் தி.மு.க-வை ஆட்சி செய்கின்றனர். சேகர் பாபு போன்ற சில பாபுகார்கள் தான் தன்னை guide செய்வதாக முதல்வரே கூறுகிறார். முதல்வர் குடும்பத்தில் […]

Categories
அரசியல்

அவர் ஆளுநர் தான்!…. அதுக்காக உடனே சைன் போட முடியாது!…. தமிழிசை சௌந்தரராஜ அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் அவசரகால மசோதா கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அனுமதிக்காக அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் தமிழக ஆளுநர் மசோதாவிற்கு கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்துவந்தார். இதன் காரணமாக அவசரகால மசோதா செல்லுபடியாகாமல் போனது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ஆளுநருக்கு […]

Categories
மாநில செய்திகள்

“மெரினா கடற்கரையில் இருப்பது போல் அங்கேயும் அமைக்கப்படும்”…. உதயநிதி ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதில் உதயநிதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சாக்லைட் மற்றும் பரிசுகளை கொடுத்து கொண்டாடினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் […]

Categories
மாநில செய்திகள்

நீ படிக்க வை!… நான் வாழ வைக்கிறேன்!… அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளை பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து யாரும் நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் என்னிடம், மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

“மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி அது மக்களுக்காக தான்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையில் இந்துசமய அறநிலையத் துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியானது இன்று (டிச…4) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாண் வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார். மேலும் 30 சீர்வரிசை பொருட்களையும் முதல்வர் வழங்கினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் ஏற்கனவே பல்வேறு கூட்டங்களில் கூறியதுபோல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோவில் என்பது மக்களுக்காகத் தான். ஏனெனில் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

“ஓ அப்படியா நல்லா இருக்கு”…. இபிஎஸ் பேச்சுக்கு சிரித்தபடி பதில் கூறிய உதயநிதி ஸ்டாலின்…..!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். இதற்கிடையில் திராவிட மாடலை உருவாக்கியதே தாங்கள் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியது தொடர்பாக உதயநிதியிடம் […]

Categories
சினிமா

“நான் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புகிறேன்”…. பாலிவுட் டிரைக்டர் ஓபன் டாக்…..!!!!

தளபதி விஜய்க்கு பிற நடிகர், நடிகைகளும் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். இதனை பற்றி பல பிராபலங்கள் வெளிப்படையாகவும் பேசுவது உண்டு. அதன்படி தற்போது ஹிந்தி டிரைக்டர் ரோஹித் ஷெட்டி விஜய்-ஐ வைத்து படம் இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். நேற்று ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கும் Cirkus திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், பூஜா ஹெக்டே உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். இதற்கிடையில் நிகழ்ச்சி மேடையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரோஹித் ஷெட்டி பதிலளித்தார். அப்போது தென் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே கொள்கை!…. எது தெரியுமா?…. எஸ்.பி.வேலுமணி சாடல்…..!!!!

தி.மு.க அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. அப்போது எஸ்.பி.வேலுமணி பேசியதாவது “தைரியம் இருந்தால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் ஆட்சியை கலைத்து விட்டு சட்டமன்றம் தேர்தலை வைக்கவேண்டும். அவ்வாறு வைத்தால் எடப்பாடி தான் முதல்வர் என சவால் விட்டார். மேலும் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை. தைரியம் இருந்தால் ஸ்டாலினை பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள். இதனிடையில் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

பொம்மை முதல்வரே!…. இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்….. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்….!!!!!

சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, கோவையில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடந்தது. கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது “தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. இந்த 18 மாதகால ஆட்சியில் கோவை […]

Categories
சினிமா

அது எங்க அப்பா எனக்கு கொடுத்தது!…. கேட்டா புகார் கொடுக்காங்க!…. ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் விளக்கம்….!!!!!

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து “அவள் என் மகளே இல்லை, வளர்ப்பு மகள் தான்” என ராஜ்கிரண் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ராஜ்கிரணின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதாவது, முனீஷ் ராஜா தரப்பு பணம் கேட்டு தொல்லை செய்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின் அது […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் படம்: நான் தான் பர்ஸ்ட் செல்வேன்!…. பழைய நினைவுகள் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆர்-ன் நூற்றாண்டு துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். அதன்பின் முதல்வர் பேசியதாவது “தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எனும் பெருமைக்கு உரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். எம்ஜிஆர் நடித்த திரைப்படம் வெளியாகும் வேளையில் முதல் ஆளாக நான் படத்திற்கு செல்வேன். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரும் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் எப்படி இருந்தது என கேட்பார். தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களுக்கு இடமில்லை”…. ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் ஸ்பீச்…..!!!!!

கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதனை முன்னிட்டு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அத்திரைப்பட இயக்குநர் ஞானவேல் பேசியதாவது “சட்டச் செயலாக்கம், நீதி பரிபாலனத்திலுள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த ஜெய்பீம் வெறும் வார்த்தை அல்ல அது ஒரு உணர்வு ஆகும். அத்துடன் விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பிஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. ஜெய்பீம் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கற்பனைக்கு எட்டாத […]

Categories
மாநில செய்திகள்

காலம் மாறிப்போச்சு!…. ராணுவ வீரரையே மிரட்டுறாங்க…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

அரசியல் சாசன தினத்தையொட்டி, அதை நாடு முழுவதும் பரப்பும் அடிப்படையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரிலுள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ…27) விழா நடைபெற்றது. அதாவது, இந்த பயணத்தில் 15 தினங்களில் 6000 கி.மீ இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது. இவற்றில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் கமர்சியல் படங்களில் அதிகமாக நடிப்பதில்லை”… ஆனால் அவரின் கதையில்… விஜய் சேதுபதி ஓபன் டாக்..!!!!

விஜய் சேதுபதி நடித்திருக்கும் டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கி வரும் டி.எஸ்.பி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாசன் நடித்திருக்கின்றார். மேலும் இத்திரைபடத்தில் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம் புலி என பலர் நடித்திருக்கின்றார்கள். படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. எனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சின்ன இருமல் என்றால் கூட என்னை பற்றி பெரிய செய்திகள் வருது”… கமல் ஓபன் டாக்..!!!

உடல் நலம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் உடல் நலம் குறித்து […]

Categories

Tech |