Categories
சினிமா

“தொடக்கத்தில் எனக்கு தயக்கமாக இருந்துச்சு”…. நடிகர் அசோக் செல்வன்…..!!!!!

பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தன் தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பின் தயாரித்துள்ள புது திரைப்படம் “ஹாஸ்டல்” ஆகும். இந்த படத்தை சுமந்த்ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இதைத்தவிர நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இவற்றில் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன், நடிகர்கள் அசோக் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!!

ஆசிரியா் தகுதித்தோ்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று பரிசீலனை செய்யப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை, ஆழ்வாா்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாசார மையத்தில் கடந்த 2021ஆம் வருடத்துக்கான “அன்பாசிரியா் விருது” வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பான கல்விப் பணியோடு சமூக அக்கறையுடன்கூடிய மாணவா்களை உருவாக்கி வரும் 46 ஆசிரியா்களுக்கு, அன்பாசிரியா் விருதை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியதாவது […]

Categories
உலக செய்திகள்

கராச்சியில் நடந்த பொதுக்கூட்டம்…. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேச்சு…..!!!!!

தம் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்க நாடு சதிசெய்ததாக குற்றம்சாட்டிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய எந்த ஒரு வெளிநாடும் தமக்கு எதிரி அல்ல என்று கராச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். முன்பாக சர்வதேச தளங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த 3 நாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார். ஆனால் தற்போது இம்ரான் கான் பதவி இழந்த பின், இந்த 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரியாவை நினைத்து கண்கலங்கிய சிவகுமார்….. எதற்கு தெரியுமா?….!!!!

அருண் விஜய் நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் சூரியாவை நினைத்து கண் கலங்கினார். பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார், சின்ன வயதில் என் மகன் சூர்யாவுக்கு நான்கு வார்த்தை கூட பேச வராது. இவன் வரும் காலங்களில் என்ன ஆகப் போகிறான் என்ற கவலை எனக்கும் என் மனைவிக்கும் அதிகமாக இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாக ஆகாது. அவன் பள்ளிப் படிப்புக்காக கால் நடுங்க வெயிலில் […]

Categories
உலக செய்திகள்

மைக்ரோபோன்களை பலமுறை நாக்ஆப் செய்த உணர்ச்சிகரமான கைவீச்சு…. வைரலாக பரவும் தொகுப்பு…!!!!!

பாகிஸ்தானின் புதிய பிரதமரின் உணர்ச்சிகரமான பேச்சுகள் மற்றும் கைகளால் சைகைகள் மூலம் தனது பேச்சுகளால் பிரபலமாகியுள்ளவர் ஷெபாஸ் ஷெரிப். பலமுறை உணர்ச்சி வேகத்தில் அவர்  கைகளால் மைக்ரோபோன்கள் நொறுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த பழைய பேச்சு தொகுப்புகளில்  ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தான் நடிக்கும் தமிழ் படங்களில் சொந்தமாக டப்பிங் பேசுவேன்”… புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷ்…!!!

நடிகர் யாஷ் இனி தமிழில் தான் நடிக்கும் திரைப்படங்களில் தானே டப்பிங் பேச உள்ளதாக கூறியுள்ளார். பிரபல நடிகரான யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கே ஜி எஃப் 2. இத்திரைப்படத்தில் சஞ்சய்தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார்கள். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“365 நாட்களும் பால் கொள்முதல் செய்யப்படும்…!!” பால்வளத்துறை அமைச்சர் அதிரடி…!!

தமிழக அரசின் பால்வளத் துறை மார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பால்வளத் துறை அமைச்சரின் உத்தரவுபடி பாலை உற்பத்தி செய்யும் விவசாயிகளான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆண்டு முழுவதும் அரசு நிர்ணயித்த தரத்துடன் பாலை கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் வருடத்தின் 365 நாட்களும் பாலை கொள்முதல் செய்ய சங்க நிர்வாகிகள், பொது மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தயக்கம் காட்டக்கூடாது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்த இடத்தை மறந்துறக்கூடாது…. நெல்சன் குறித்து பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு…!!!!!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது’பீஸ்ட்’  படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான இந்தப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது.  வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது விஜய்யின் ‘பீஸ்ட்’ படம்.கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப் குமார்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் மலையாள […]

Categories
அரசியல்

800 செவிலியர்களுக்கு….!!மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி…. சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி…!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது சுமார் 3200 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இவர்களில் 2400 பேர் நிரந்தர ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 800 பேர் எதிர்கால காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் செய்யப்படுவார்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த 800 செவிலியர்களும் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை கண்டித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா….??? அமைச்சர் சொன்ன தகவல்…!!

சென்னையிலுள்ள நகர்புற சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வதற்கான கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசியைப் அடுத்தவரை […]

Categories
உலக செய்திகள்

“பதவி விலக மாட்டேன். பெரும்பான்மையை நிரூபியுங்கள் ஆட்சியை விட்டு தருகிறேன்.!!!!” இலங்கை அதிபர் பேச்சு…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பிரதமர் ராஜபக்சேயை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 4 புதிய மந்திரிகளை அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமனம் செய்துள்ளார். எனினும் அதிபர் கோட்டபயா ராஜபக்சே பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதி குறைப்பு….!! சோனியா குற்றச்சாட்டு…!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு குறைவான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக கூறவேண்டும். அதோடு அந்த திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்குள் கூலி வழங்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த […]

Categories
அரசியல்

“அப்பாட்ட மறக்காமல் சொல்லிருங்க….!!” ஓபிஎஸ் மகனிடம் முக்கியமான விஷயம் சொன்ன சசிகலா…!!

சட்டமன்ற தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கண்ட மாபெரும் தோல்வி சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு ஒரு அச்சாரமாக அமைந்தது. தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஓபிஎஸ் வெளிப்படையாகவே சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ கூறி தடுத்து நிறுத்திவிட்டார். சசிகலா நுழைந்தால் நாம் இருவருக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும் எனவே அவரை கட்சிக்குள் அனுமதிக்க வேண்டாம் என ஓ பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி கூறி […]

Categories
அரசியல்

“தயவு செஞ்சு இதை பண்ணுங்க…!!” பாராளுமன்றத்தில் கதறி அழுத பாஜக பெண் எம்பி…!!!

மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ ரூபா கங்குலி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இருப்பதற்கே மக்கள் பயந்து நடுங்கி கொண்டிருக்கின்றனர். நாள்தோறும் ஊரைவிட்டு வெளியேறும் மக்களின் […]

Categories
அரசியல்

“ரஜினிக்கு போன் போட்ட மு.க ஸ்டாலின்…!!” காரணம் என்ன தெரியுமா…??

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தன்னுடைய சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிட்டார். இதில் கேரள முதல்வர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த புத்தகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]

Categories
அரசியல்

திமுகவின் லட்சியம் இதுதானாம்…!! முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்…!!

வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக மாணவர்களுக்கு கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் அடிப்படை கல்வி மட்டும் போதாது அனைவரும் உயர் கல்வியும் பெற வேண்டும். அதற்கு ஏற்ப அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஏதோ ஒரு வேலை என்றெல்லாம் பார்க்க கூடாது தகுதிக்கும் படிப்பிற்கு ஏற்ற வேலை தான் […]

Categories
அரசியல்

பாஜகவுக்கு எச்சரிக்கை எடுத்த சீமான்…!! செம கடுப்பான அண்ணாமலை…!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையை வாட்டி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியும், அன்றாடப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்டு மக்களின் துயரம் துடைக்காத சிங்கள அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்கிறேன். நாட்டு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தமிழக மக்களை எவ்வாறு துன்புறுத்துவது, எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது என […]

Categories
அரசியல்

அமைச்சர்களுக்கு டார்கெட் வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்….!! நடுங்கிப் போன எம்எல்ஏக்கள்…!!

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மன் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசினார். அதில் அவர் கூறியதாவது, பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பதவியேற்ற […]

Categories
அரசியல்

“சாமானிய மக்களுக்கு எந்த நன்மையும் இல்லாத பட்ஜெட்…!!” வி.கே சசிகலா காட்டம்…!!

கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு திமுக சார்பில் வரவேற்பும் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளின் சார்பில் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் பட்ஜெட் குறித்து வி.கே சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியதாவது, “தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் திமுகவினருக்கு நன்றாக இருக்குமே ஒழிய அது சாமானிய மக்களுக்கு எந்த பயனையும் அளிக்காது கார்ப்பரேட்க்கு பயன்படும் இந்த பட்ஜெட் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

தென்கொரியாவின் புதிய அதிபர்…. வாழ்த்து தெரிவித்த மோடி…. இரு நாட்டு ஒத்துழைப்புக்கு ஆலோசனை….!!

தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் யூன் சுக்-யோல் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படார் . அவருக்கு பிரதமர் மோடி  தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததோடு இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை  நடந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யோலுக்கு  வெற்றிக்கான வாழ்த்தை தெரிவித்தும் பல்வேறு துறைகளில் இந்தியா – தென்கொரியா இடையேயான சிறப்பு ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்’ என தெரிவித்துள்ளார் அதோடு, இந்தியா – தென்கொரியா இடையே தூதரக உறவு  […]

Categories
மாநில செய்திகள்

ஜெயில்ல என்ன சோபாவும், ஏசியுமா கொடுப்பாங்க?…. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி….!!!!!

சென்னை பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற 24-வது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது “24வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. கொரோனா வெகுவாக குறைந்து வந்தாலும் ஓரிரு மாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருக்கிறார்” எனத் தெரிவித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

33 ஆண்டுகளுக்குப் பிறகு…. உபியில் மீண்டும் பாஜக ஆட்சி…. அண்ணாமலை ,பெருமிதம்….!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர்  பாஜகவிற்கு 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் கிடைத்த வெற்றி குறித்த கூறியுள்ளார் . அதில் அவர் கூறியதாவது. “நாங்கள் பாரத பிரதமருடன் பயணிப்போம் என்று மறுபடியும் ஒரு முறை நமது நாடு உரத்த குரலில் சொல்லி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆளும் கட்சி 33 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இது சாதனை. இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மத […]

Categories
அரசியல்

“அவரிடம் இருந்து 10 ரூபாய் வாங்குவது கூட மிகவும் சிரமம்…!!” அழகிரியின் பேச்சால் சர்ச்சை…!!

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “வசந்தகுமாரிடமிருந்து கட்சி செலவுக்காக 10 ரூபாய் வாங்குவது என்பது கூட கல்லிலிருந்து நார் உரிப்பது போன்றதாகும். அவரை ஏதாவது ஒரு கூட்டத்தில் பங்கேற்க வைப்பது என்றால் நான் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவருடன் தொடர்ந்து பேசி சம்மதிக்க […]

Categories
அரசியல்

“அரண்மனை விமர்சிப்பவர்களுக்கு ஏழைத் தாய் படும் கஷ்டம் தெரியாது…!!!” பிரதமர் மோடி பேச்சு…!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, இந்த தேசத்தின் முன் சில சவால்கள் எழும்போது குறிப்பிட்ட வம்சத்தினர் அதில் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள நினைக்கிறார்கள். பாதுகாப்பு படைகளையும் மக்களையும் விருந்தாக்கி அவர்கள் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். நோய் தொற்று தொடங்கி தற்போது உக்ரைன் விவகாரம் வரை அனைத்திலும் இவர்களின் அரசியல் ஆதாயம் தேடும் செயல் நன்றாக தெரிகிறது. கண்மூடித்தனமான எதிர்ப்பு, விரக்தி மக்களை காக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

இந்தி தெரிந்தவர்கள் இங்கு பானிபூரி தானே விற்கிறார்கள்…. அமைச்சர் பொன்முடி கேள்வி….!!!!!

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பேச்சு, கலைப் போட்டிகளை அனைத்து கல்லூரிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், வரலாற்றை அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அனைவரும் விரும்பிய ஆசையை நிறைவேற்ற “நான் முதல்வன்” என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று நம் தமிழகத்தில் பேச்சு ஆற்றல், […]

Categories
அரசியல்

“பெண் உறுப்பினர்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க…!!” அமைச்சர் போட்ட ஆர்டர்…!!

தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறு குறு நடுத்தர வர்க்க தொழில் நிறுவன துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மக்கள் நம் மீது அதாவது திமுகவின் மீது நம்பிக்கை வைத்து நம்மை தேர்வு செய்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்றவேண்டும். பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து […]

Categories
அரசியல்

“வேஷ்டி சட்டை கிழிந்து கொண்டிருக்கிறது…!! அத முதல்ல பாருங்க ராகுல்…!!” அண்ணாமலை பேச்சு….!!

சென்னை கிண்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதே எண்ணத்தோடு பாஜகவினர் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். தமிழக மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களது நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. முதல்வர் வெளியிட்ட வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு நான் முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் […]

Categories
அரசியல்

“பாஜகவை எப்படி தோற்கடிப்பது என எனக்கு தெரியும்…!!!” ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு…!!

முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது, “உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அடிக்கடி தமிழகம் மற்றும் தமிழக மக்கள் பற்றி பேசி வந்தேன். இது குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்னையறியாமலேயே நானும் ஒரு தமிழன் தான் என்று கூறினேன். தமிழகத்திற்குள் நுழையும்போது ஒரு […]

Categories
அரசியல்

உக்ரைன் விவகாரம்: ஜெய்சங்கருக்கு நேரடியாக போன் போட்ட முதல்வர்..!! மிரண்டுபோன அதிகாரிகள்….!!

உக்ரைனில் தொடர்ந்து 5-வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு மீட்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 5 விமானங்கள் ரூமானியவில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்துள்ளது. எனினும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக […]

Categories
அரசியல்

“அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார் ஸ்டாலின்…!!” ஓபிஎஸ் காட்டம்…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புழல் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் என்று கூட பாராமல் நள்ளிரவில் ஜெயக்குமார் அவர்களை கைது […]

Categories
உலக செய்திகள்

வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்…. வேதனையில் உக்ரைன் அதிபரின் பேச்சு….!!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன விமர்சித்தாலும் எனக்கு கவலையில்லை”…. ரசிகர்களின் ஆதரவை பெருக்கும் வளரும் நடிகர்….!!!

நடிகர் அஸ்வின் குமார் பல விமர்சனங்களை தாண்டி ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவை பெருக்கி வருகிறார். விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி  என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதால் பத்து படத்தில் நடித்து ஹிட் கொடுத்த ஒரு ஹீரோவிற்கு எப்படி வரவேற்பு கிடைக்குமோ அதைவிட அதிக வரவேற்பு கிடைத்ததுள்ளது. இதனை தொடர்ந்து அஸ்வின் மட்டுமில்லாமல் புகழ் உட்பட இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். […]

Categories
அரசியல்

லட்சுமி தேவி சைக்கிளிலோ, யானை மீதோ வருவதில்லை…. தாமரை மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார்…!!!

இந்தியாவின் பஞ்சாப்,கோவா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “லட்சுமிதேவி யாருடைய வீட்டிற்கும் சைக்கிளிலோ, யானை மீதோ அல்லது உங்கள் கைகளில் அமர்ந்து கொண்டு வருவதில்லை. அவர் தாமரை மீது தான் அமர்ந்து அமர்ந்துதான் அருள்பாலிக்கிறார். இதனை சில கட்சிகள் புரிந்து […]

Categories
அரசியல்

“கட்டிப்பிடிப்பது, பிரியாணி ஊட்டுவது வேஸ்ட்”…. பொங்கியெழுந்த மன்மோகன்சிங்…!!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் அதீத ஞானம் கொண்டவர். அவரது ஆட்சி காலம் தான் இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் எனக் கூறலாம். ஆனால் அவர் பதவியிலிருந்து இறங்கியதில் இருந்து நாட்டு நடப்பு மற்றும் இந்திய அரசியல் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை. இதற்கு காரணம் அவரின் வயது முதிர்ச்சி என கூட சிலர் கூறினர். அன்மையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார். ஆனால் அவர் மோடி பிரதமராக பதவியேற்கும் போது சொன்ன ஒரு […]

Categories
அரசியல்

வேணும்னா ரெண்டாவது…. கல்யாணம் பண்ணிக்கோங்களேன்….கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு…!!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடம்பூர் ராஜு கோவில்பட்டி பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற திமுக பல சூழ்ச்சிகளை செய்து பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி எப்படியோ வென்று விட்டது. அதிமுகவிற்கு மக்களின் மன நிலைமை தெரியும். ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களின் மனசு தெரியாது. அவருக்கு ஜாலியாக சைக்கிள் ஓட்டத் தான் தெரியும். நாங்களும் தான் […]

Categories
அரசியல்

நான் ஒன்றும் பாஜகவின் “பி டீம்” அல்ல…. புலம்பி தள்ளிய சீமான்…!!!

சென்னையிலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளும் இத்தனை ஆண்டு காலமாக நாட்டை ஆட்சி செய்து மோசமான நிலைக்கு தான் தள்ளி இருக்கின்றன. பணம் இருப்பவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்றால் இங்கு […]

Categories
அரசியல்

“கட்டப்பஞ்சாயத்து கவுன்சிலர்கள் வேண்டாம்…!” அண்ணாமலை ஆவேச பேச்சு…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபெறவிருக்கும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக முதல்வர் நேரில் சென்று பிரச்சாரம் செய்யாமல் அவரது அறையில் இருந்து கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பிரச்சாரம் செய்கிறார். ஒரு தேர்தலில் முதல்வர் நேரில் வந்து பிரச்சாரம் செய்யாதது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏனென்றால் நேரில் வந்தால் எமது சகோதரிகள் குடும்பத் தலைவிக்கு கொடுப்பதாக கூறிய […]

Categories
அரசியல்

முதல்வரின் அடுத்த அரசியல் திட்டம் இதுதானாம்….!! பொது இடத்தில் உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் திமுக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று நெல்லை டவுன் பகுதியில் தேர்தல் பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் 8000 கோடி வரை ஊழல் செய்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. செய்திருக்க வாய்ப்புள்ளது ஏனெனில் எங்கு சென்றாலும் கமிஷன், கரப்ஷன் என்பதுதான் திமுகவின் சாதனை. அவ்வாறு இருக்கையில் ஊழல் மட்டும் எவ்வாறு நடைபெறாமல் இருக்கும். 517 […]

Categories
அரசியல்

“முடிஞ்சா செஞ்சு பாருங்க எல்லாத்துக்கும் நாங்க தயார்…!!” உதயநிதி பேச்சு…!!

மேற்கு வங்காளத்தில் மாநில ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கி வைத்தார். இதேபோல தமிழகத்திலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் தமிழக சட்டப் பேரவையும் முடக்கபட வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் “தமிழக சட்டமன்றத்தை முடக்கிய விடுவோம் எனக் கூறுகிறார்கள். தைரியம் இருந்தால் முடக்கி […]

Categories
அரசியல்

“திமுக குடும்பத்துக்கு திகார் தான் அப்புறம் களி தான்…!!” வேற லெவலுக்கு இறங்கிய சீமான்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது அதில் உரையாற்றிய சீமான் கூறியதாவது, “மக்களை நம்பித்தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். ஆளும் கட்சி தான் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. அவ்வாறு வெற்றிபெறும் […]

Categories
அரசியல்

” என் தொகுதியை சிங்கப்பூர் மாறி வச்சிருக்கேன்..!!” வம்புக்கு இழுக்கும் இபிஎஸ்…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “என்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக நான் மாற்றியுள்ளேன். கடந்த 2011ஆம் ஆண்டு எந்த வசதிகளும் இல்லாமல் இருந்த எடப்பாடி தற்போது அனைத்து வசதிகளுடன் சிங்கப்பூர் போல மாறியுள்ளது. […]

Categories
அரசியல்

“திருமாவுக்கு தில் இருந்தா ஸ்டாலினிடம் கேட்க சொல்லுங்க.!!” எல்.முருகன் காட்டம்…!!

புதுச்சேரி மாவட்டத்தில் “கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, மக்களுக்கு பகுத்தறிவு என்ற ஒன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இதிகாசத்தில் உள்ள ராமாயணம் மகாபாரதம் போன்ற குப்பைகளை மக்கள் மூளையில் திணிக்கின்றனர் எனக் கூறினார். அதோடு இந்தியர்களை மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் பிரிக்கின்றனர் எனவும் சிறுபான்மையினர் மத்தியில் வெறுப்பு அரசியலை விதைக்கின்றனர் திருமாவளவன் பேசியிருந்தார். […]

Categories
அரசியல்

“திமுகவிற்கு வாய்ஸ் மாஸ்டர் திருமாவளவன் தான்…!!” சும்மா போட்டுத்தாக்கிய ஜெயக்குமார்…!!

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பரப்புரையின் போது பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கிய எட்டு மாதங்களில் வன்முறைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ரவுடிசமும் தீவிரவாதமும் படமெடுத்து ஆடுகின்றன. இவ்வாறு தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடிசதிற்கும் தீவிரவாதத்திற்கும் திருமாவளவன் தான் வாய்ஸ் கொடுக்கிறார். திமுகவுக்கு வாய்ஸ் மாஸ்டர் திருமாவளவன் […]

Categories
அரசியல்

“எங்களைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது…!!” எடப்பாடியை சாடிய கனிமொழி…!!

நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் கனிமொழி எம்.பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “பாராளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கு பக்கபலமாக துணை நின்று ஆட்சி நடத்த வழிவகை புரிவார்கள். அதிமுக அரசு தான் மிகச் சிறப்பான உள்ளாட்சியை கொண்டிருந்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தைரியமில்லாத எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறுவது […]

Categories
அரசியல்

“நான் உயிரோடு இருக்க மாட்டேன்” கதறி அழுத அதிமுக வேட்பாளர்…. பெரும் பரபரப்பு…!!!

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 1 வது வார்டு அதிமுக வேட்பாளராக விஜயன் போட்டியிடுகிறார். இவர் செங்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், அதிமுக என்னை கைவிட்டு விட்டது. நான் மக்களை நம்பித்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். ஒருவேளை நான் தேர்தலில் தோற்று விட்டால் உயிரோடு இருக்க மாட்டேன். அவ்வாறு நான் இறந்த […]

Categories
அரசியல்

இது நடக்க இன்னும் “7 அமாவாசை தான் இருக்கு”…. கணிச்சி சொன்ன எடப்பாடி…!!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கரூரில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பரப்புரை ஆற்றினார். அதில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வரப் போவதாக அவர் கூறினார். அதற்கு இன்னும் 24 அமாவாசைகள் தான் உள்ளன. ஆட்சி மாறும்போது காட்சி மாறும். தொண்டர்கள் பலம் அதிகம் கொண்ட கட்சி அதிமுக. நமது கட்சியில் சாதாரண அடிமட்ட தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம் […]

Categories
அரசியல்

துட்டு வாங்கிட்டு…. எனக்கு ஓட்டு போட்ருங்க…. பிரபல கட்சி வேட்பாளர் பிரச்சாரம்….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சேலம் மாவட்டம் மூன்றாவது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சத்ரிய குமார் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. சத்ரிய குமார் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஓட்டுக்கு யாரும் காசு வாங்க கூடாது என கூறியுள்ளார். […]

Categories
அரசியல்

“ஸ்டாலின் சொல்லித்தான் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்…!!” அண்ணாமலை பகீர்…!!

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை இடமான கமலாலயத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பெட்ரோல் குண்டு மர்ம நபர்கள் சிலரால் வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அலுவலக செயலாளர் சந்திரன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் கருக்கா வினோத் பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பேசிய பாஜக […]

Categories
அரசியல்

மக்களே…! இது குப்பை தேர்தல்…. பாடம் புகட்டவிட்டால் அல்வா கிண்டிருவாங்க…. செல்லூர் ராஜு…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மதுரை மாவட்டத்தில் 43 வது வார்டில் போட்டியிடும் கண்ணன் என்பவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த தேர்தல் ஒரு குப்பை தேர்தல் திமுக ஆட்சியை ஒழித்துக்கட்ட மக்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பு. சாக்கடையில் ஓடும் கழிவுகளை நீர்மூலம் பீச்சியடிக்க இந்த […]

Categories
அரசியல்

தோல்விக்கு அஞ்சாத கட்சி பாஜக…. அண்ணாமலை கான்பிடன்ஸ்….!!!!

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது 11 ஆண்டுகளுக்கு பிறகு தனித்து போட்டியிடுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக இல்லை […]

Categories

Tech |