Categories
அரசியல்

8″ மாதத்தில் 8,000 கோடி ஊழல்…” திமுக மீது சீமான் பரபரப்பு புகார்….!!

திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 8,000 கோடி ஊழல் செய்துள்ளதாக சீமான் பரபரப்பாக பேசியுள்ளார் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் 8000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பரபரப்பு […]

Categories
அரசியல்

“இடத்த காலி பண்ணுங்க காத்து வரட்டும்…!!” பாஜக எம்எல்ஏவை விளாசிய சபாநாயகர்…!!

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் கே. என். ரவி இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஏதோ சில காரணங்களை கூறி ஏற்றுக்கொள்ள தகுந்ததாக இல்லை என மீண்டும் சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து திமுக தலைமையில் கடந்த 5 ஆம் […]

Categories
அரசியல்

நீட் தேர்வு அல்ல…. அது பலிபீடம்…. சட்டசபையில் முதல்வர் காட்டம்…!!!!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி வலுவான தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் பல நாட்களாக கிடப்பில் போட்டு பின்னர் அதனை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான மசோதா நிறைவேற்றப்படும் என தன்னுடைய பேட்டி ஒன்றில் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கூட்டத்துக்கு வரலன்னா கன்னத்துல அடிங்க…. கோபத்தில் வார்த்தையை விட்ட மகன்…. அட்வைஸ் சொன்ன தந்தை…!!!!

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கும்பகோணத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த திருமண விழாவில் விஜயபிரபாகரன் கூறியதாவது, தேமுதிகவுக்கு கூட்டம் வரவில்லை, தேமுதிகவிற்கு ஆளே இல்லை என்று பேசுபவர்களின் கண்ணத்தில் அறையுங்கள். தேமுதிகவுக்கு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்கு காரணம் அரசியல் சூழ்ச்சி தான். ஆனால் தேர்தல் களம் தேமுதிகவை சுற்றித்தான் சுழன்று கொண்டிருக்கிறது. அப்பாவுக்கு […]

Categories
அரசியல்

“நாங்கள் ஏழைகளையும் லட்சாதிபதி ஆக்கியுள்ளோம்….!!”பிரதமர் மோடி பேச்சு…!!

நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பிரதமர் மோடி பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘முதலாவதாக பாடகி லதா மங்கேஷ்கருக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கை சென்றடைகிறது. ஏழை தாய்மார்களும் இப்போது எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இலவச வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழைகளும் கூட தற்போது வீடு கட்டி லட்சாதிபதியாக மாறிவிட்டனர். ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு தற்போது எரிவாயு சிலிண்டர் கிடைப்பது […]

Categories
அரசியல்

தமிழ்நாட்டை பொம்மை முதல்வர் ஆட்சி செய்றாரு…! ஸ்டாலினை சீண்டும் எடப்பாடி…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டம் சிவகாசியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது, “ஸ்டாலின் தமிழக மக்கள் மத்தியில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்து விட்டார். வெறும் வாய் ஜலத்தின் மூலமாகவே ஆட்சியைப் பிடித்த முதல்வர் சொன்ன எந்த வாக்குறுதியையும் இப்போதுவரை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறினார் ஆனால் செய்யவில்லை. குடும்பத்தலைவிக்கு மாதம் […]

Categories
அரசியல்

அவருக்கு ரொம்ப பயம்…. அதான் நேரடியா வரமாட்டேங்குறாரு…. ஸ்டாலினை தாக்கும் ஓபிஎஸ்…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதில் அவர் பேசியதாவது, கடந்த ஆட்சி அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். இதனால் மக்கள் அதிமுக மீது நன்மதிப்பை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதோடு […]

Categories
அரசியல்

” உதயநிதி ஸ்டாலினின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது….!” சி.வி சண்முகம் சொன்னது என்ன…?

அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “அதிமுகவில் அனைவரது வேட்பு மனுவிலும் உண்மையான தகவல்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான் என்னுடைய மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் திமுகவை பொறுத்தவரை பெரும்பாலான மனுக்களில் பொய்யான தகவல்ளே இடம்பெற்றிருந்தன. இதுபோல் திமுக சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் […]

Categories
அரசியல்

“மோடிதான் ராஜா நம்ம எல்லாரும் கூலி தொழிலாளிகள்…!” உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பேச்சு….!

உத்தரகாண்ட் மாநிலத்தின் இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக உத்தம்சிங் நகர் கிச்சா மண்டியில் விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அதில் அவர் கூறியதாவது, “முன்பெல்லாம் இந்தியா பிரதமர் என்ற ஒருவரால் வழி நிறுத்தப்பட்டது. தற்போது ராஜா என்பவரால் வழி நடத்தப்படுகிறது. காரணம் மோடி யார் பேச்சையும் கேட்பதில்லை. ஒரு ராஜா எவ்வாறு கூலி தொழிலாளர்களின் பேச்சை கேட்க […]

Categories
அரசியல்

“வாயால வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர்….!” எடப்பாடி பழனிச்சாமி காட்டம்…!!

சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதனை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளின் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தற்போது திறந்து வைப்பதுதான் திமுக அரசின் 8 மாத கால சாதனை. அதோடு திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வார்த்தை ஜாலங்கள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதாரத்தில் உ.பி 2வது இடம்…. காரணம் யோகி தான்…. ராம்நாத் கோவிந்த் பெருமிதம்….!!!

உத்தரபிரதேசத்தில் வருகிற 10ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் பொருளாதாரத்தை 34 கோடிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்து சென்றுள்ளார். உத்தரபிரதேசம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

‘நம்மை காக்கும் 48’…. தமிழக அரசின் செம சூப்பர் திட்டத்தால்….காக்கப்பட்ட உயிர்கள்…!!!

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில் நம்மை காக்கும் 48′ என்ற சிகிச்சைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு உயிர்கள் காக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, முதல் தவணை இரண்டாம் தவணை, பூஸ்டர், இளம் சிறார்களுக்கு என நான்கு தவணையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதோடு நம்மை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யார் கட்சி மாறினால் வீடுபுகுந்து வெட்டுவேன்!”…. அதிமுக ஒன்றிய செயலாளரின் அதிரவைக்கும் சர்ச்சை பேச்சு….!!!

அதிமுகவில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும், அவரை வீடு புகுந்து வெட்டுவேன் என்று அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 இடங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முடிவுகள் […]

Categories
அரசியல்

“அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் அவங்க பேசி இருப்பார்களா”….? குழந்தைபோல் கதறிய அதிமுக தொண்டர்கள்….!!

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் […]

Categories
அரசியல்

என்ன ரூட் மாறுது…? திமுக அரசுக்கு ஓபிஎஸ் திடீர் ஆதரவு…. ஓ இது தான் காரணமா?….!!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தி பங்கேற்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள்”…. இதுவே முதல் முறை…. பிரதமர் மோடி….!!!!

தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம் என்று கூறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ரூ.4,000 கோடி செலவில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,450 […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 80 சதவீதம் மருத்துவ இடங்கள் அதிகரிப்பு…. பிரதமர் மோடி….!!!!

தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம் என்று கூறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ரூ.4,000 கோடி செலவில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,450 […]

Categories
தேசிய செய்திகள்

“இளைஞர்களால் தான் புதிய உலகத்தை உருவாக்க முடியும்”…. பிரதமர் மோடி அதிரடி பேச்சு….!!!

புதுச்சேரியில் 25 வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி இளைஞர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மத நல்லினக்கணம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்பும் வகையில் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்குதான் மிக முக்கியமாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர் நோக்கியுள்ளது. இந்தியா இன்று எதைச் சொல்கிறதோ அதை தான் நாளை உலகம் சொல்லும். இதனை தொடர்ந்து நவீனத்தை பேசுவதால் தான் […]

Categories
சினிமா

சாய்னாவை ஆபாசமாக பேசிய சித்தார்த்….!! கொந்தளித்த பிருந்தா….!!

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஏதாவது கருத்துக்களை பதி விட்டுக்கொண்டே இருப்பார். அதேபோல் தற்போது அவரின் ஒரு பதிவு அனைவரின் கோபத்தையும் தூண்டியுள்ளது. பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிய சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்ட டிவிட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாலியல் ரீதியாக ஆபாசமாக பதிவிட்டிருந்தார். சித்தார்த். அவரது பதிவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு கண்டனம் […]

Categories
மாநில செய்திகள்

“ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மாவட்டம் திராவிட இயக்கத்தின் தாய் வீடு. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?…. அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்த இபிஎஸ்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கை சரிசெய்ய இதுவரை கவனம் […]

Categories
மாநில செய்திகள்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி…. ஆளுநர் என்.ஆர்.ரவி பேச்சு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதில் முதல் மொழியாக தமிழும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“மொத்த இந்திய அரசையும் உங்கள் வாசலுக்கு கொண்டு வந்தேன்”….. மோடி அதிரடி பேச்சு….!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் 5 மாநிலங்களில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இன்று மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு காலத்தில் மணிப்பூர் தனித்து விடப்பட்டிருந்தது. நான் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒரு நீதி….. குஜராத்திற்கு ஒரு நீதியா?…. கொந்தளித்த சு.வெங்கடேசன் எம்.பி….!!!!

குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்னர் டவ்தே புயலால் பலத்த மழை பெய்தது. அதனால் இந்தியாவின் மேற்கு கரையோர அனைத்து மாநிலங்களையும் புயல் கடும் சேதத்திற்கு ஆளாக்கியது. இதையடுத்து பிரதமர் மோடி நேரில் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டு 1,000 கோடி ரூபாய் நிதியும் வழங்கினார். இந்நிலையில் இதுபற்றி பேசிய சு.வெங்கடேசன் எம்.பி, குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1,000 கோடி ரூபாயை அறிவிக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் தமிழ்நாடு பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பிரதமர், […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டம் பிடித்த மனைவி…. “கண்டுபிடித்து கொடுத்தா ரூ. 5000 பரிசு”….. வித்தியாசமான கணவரா இருப்பாரோ….!!!!

தன்னை விட்டு வேறு ஒரு நபருடன் ஓடிப்போன மனைவியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று கணவர் அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பிங்லா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் பணி நிமித்தம் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் மனைவி குழந்தையுடன் தப்பி சென்றுள்ளா.ர் இதைத்தொடர்ந்து மனைவி குழந்தையை இழந்த துக்கத்தில் கணவர் பல இடங்களில் தேடி அடைந்துள்ளார். அவர்கள் கிடைக்காததால் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது”…. அண்ணாமலை பேச்சு….!!!

நீட் தேர்வு மூலமாக சாதாரண மாணவர்களும் மருத்துவம் சேர்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். மருத்துவ படிப்பு இடங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நீட் தேர்வு மூலம் சாதாரண கிராமப்புற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சேர வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

“எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை”….. உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!

அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பு இருக்கும் எனக்கு ஆசை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் மண்ணை காக்க நாங்கள் எப்போதும் திமுக உடன் இருப்போம்”…. திருமாவளவன் பேட்டி….!!!!

சென்னையில் விடுதலை கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.  சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கினர்.  இந்த விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் தமிழ் மண்ணை காக்க நாங்கள் எப்போதும் திமுகவுடன் இருப்போம். காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கினால் மீண்டும் பாஜக […]

Categories
அரசியல்

“மோடியை வீழ்த்த போவது நான் தான்.”… மமதா பானர்ஜி அதிரடி பேச்சு….!!

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வீழ்வேன் என அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது போலவே வரும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடும் தோல்வியைச் சந்திக்கும் என மமதா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தா மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மமதா பானர்ஜி மேற்கு வங்க மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற நிலை இருக்க வேண்டும்…. மதுரை ஆதீனம் பேச்சு…!!!

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலைமை இருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடந்த நக்கீரர் தமிழ் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம் எந்த ஊரை மறந்தாலும் மதுரையை மறக்கக்கூடாது. தற்போது எங்கு பார்த்தாலும் ஆங்கில வழிக் கல்விதான் ஆக்கிரமித்துள்ளது. தமிழர்களுக்கு தமிழர்களாக அதிக அளவிற்கு உதவுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஏராளமாக உதவுங்கள். இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் நிம்மதி இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : இந்து, இந்துத்துவவாதி இடையில் தான் இந்திய அரசியலில் போட்டி…..  ராகுல் காந்தி பேட்டி….!!!

இந்து இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையில் தான் இந்திய அரசியலில் போட்டி என்று ராகுல்காந்தி எம்பி கருத்து தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இந்த போராட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:” […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதா…. பொங்கி எழுந்த திருமாவளவன்…!!!

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அநீதி இழைக்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதில் இது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை உருவாக்கவேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்.  கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை; இதனை ரத்து செய்து விட்டு ஜனநாயகப்பூர்வமானதான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவா?…. உறுப்பினர் பதவி கூட இல்ல…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்….!!!!

அதிமுகவில் சசிகலா அடிப்படை உறுப்பினராக கூட சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் இளைய மகளான நர்மதா-கௌதம் திருமணம் நேற்று சேலம் அருகே உள்ள சூரமங்கலத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஓ.பன்னீர்செல்வம் ,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது எனவும் அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தற்கொலை தாக்குதல் நடத்துவேன்….. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்….!!!

பெட்ரோல் விலையை இன்னும் ஒரு வாரத்தில் குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவத போவதாக  பேசியதால் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை இன்னும் ஒரு வாரத்தில் குறைக்க வில்லை எனில் பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆணைக்கிணங்க தற்கொலை படை தாக்குதல் நடத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் நாகரிகம் கொஞ்சம்கூட இல்லாம…. பொது இடத்தில் இப்படியா பேசுவது…. கே.பாலகிருஷ்ணன் கண்டனம்…!!!

தோழர் சு வெங்கடேசன் எம்பி குறித்து அமைச்சர் கே என் நேரு ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரீகம் அற்றது என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவன் இவன் என்ற பேச்சு….. வலுக்கும் எதிர்ப்பு….  கே.என். நேருவுக்கு வாய்ப்பூட்டு போடுவாரா மு.க. ஸ்டாலின்….?

மதுரை எம்பி சு வெங்கடேசனை அவன் இவன் என்று அமைச்சர் கே என் நேரு பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். அடிக்கடி எதையாவது சர்ச்சையாக பேசி […]

Categories
அரசியல்

திமுக ஊழல் கட்சி அப்படினா….. அப்ப அதிமுக….? நட்டா பேச்சு எங்கயோ இடிக்குதே…. நாட்டாவை கிழித்த திமுகவினர்….!!!

திமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அதிமுக மீதான ஊழல் பற்றி ஏன் பேசவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுகவை குடும்ப கட்சி, ஊழல் கட்சி என்று ஜேபி நட்டா பேசியுள்ளார். ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக கொண்ட அதிமுகவுடன் பாஜக எப்படி நெருக்கமான உறவை வைத்துக் கொண்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருப்பூர் வந்த ஜேபி நட்டா அங்கு […]

Categories
மாநில செய்திகள்

21 வருடத்துக்கு முன்பு…. திண்டுக்கல்லே திணறிப் போய்டுச்சு…. டாக்டர் ராமதாஸ் நினைவு கூர்ந்த நிகழ்வு…!!!!

2000வது ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த போராட்டம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும், போராடும் கட்சி. மற்ற கட்சிகளைப் போன்று வார்த்தைகளில் மட்டும் சொல்லும் கட்சி அல்ல, செயலில் காட்டும் கட்சி. அதற்கு பல எடுத்துக்காட்டுகளை என்னால் கூறமுடியும்.  அத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவேடன் எனப்படும் பழங்குடி இன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் இரு டைடல் பார்க்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கோவையில் நடைபெற்று வருகிறது. ரூ.34,723 கோடிக்கு  52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும்.கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும்.மின்னணுவியல் துறையில் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கு யாரும் வேறுபட்டவர்கள் அல்ல”…. மோகன் பகவத் அதிரடி பேச்சு….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “நம் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம். ஆனால் எப்படி வாழவேண்டும் என்பதை மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதனை நாம் உலகிற்கு கற்று கொடுப்பதற்காக  இந்த பாரத மண்ணில் பிறந்துள்ளோம். நமது மதம் நமக்கு நன்மை செய்கிறது. எனவே யாருடைய வழிபாட்டு முறைகளிலும் மாற்றாத குணம் உடையவர்களாக இருக்கிறோம். இந்தியாவை […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்… மாநாடு மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர்…!!!

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியுள்ளார். மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன். என் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உருக்கத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது”… வைகோ ஆவேசம்… அதுக்கு இதுதான் காரணம்…!!!

இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்து விடக் கூடாது என்றும், அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சிமொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை மந்திரி ‘அமித் ஷா இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி, நான் என் தாய் மொழியை விட அதிகமாக இந்தியை நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாள் முதல்…. எனக்கு பிரகாசமான சூழல்…. நடிகர் வடிவேலு….!!!!

நடிகர் வடிவேலு நடிப்பதற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், என்னுடைய வாழ்வில் பெரிய சூறாவளி அடித்தது. அது போன்ற துன்பத்தை யாரும் இதுவரை சந்தித்திருக்க முடியாது. மக்கள் அனைவரையும் இன்னும் மகிழ்ச்சியாக சிரிக்க வைத்துவிட்டு தான் என் உயிர் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஊழல் செய்ததை நிரூபியுங்க… இப்போவே தூக்கில் தொங்குகிறேன்… அபிஷேக் பானர்ஜி ஆவேசம்…!!!

நான் ஊழல் செய்ததாக நிரூபித்தால் அப்போது தூக்கில் தொங்குவதற்கு தயார் என்று அபிஷேக் பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி முறைகேடு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு டில்லியில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கான் சென்றால் தான் இந்தியாவின் அருமை புரியும்…. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…..!!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது. அதனால் அங்கு வாழ்வதற்கு மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கிருந்து மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர். இந்நிலையில் பீகாரில் பாஜக எம்எல்ஏ ஹரி பூஷன் தாகூர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் வாழ அச்சப்படுவோர் தாராளமாக ஆப்கானிஸ்தான் செல்லலாம். அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை எல்லாம் குறைவுதான். ஆப்கானிஸ்தான் சென்றால் தான் இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை… முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பதில்…!!

கட்சி மேலிடம் கூறினால் பதவியை ராஜினாமா செய்வேன், இல்லையெனில் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்பட உள்ளார் என தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா மீது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாகவும், கட்சித் தலைமைக்கு தாம் வேண்டியதில்லை என தோன்றினால் அன்றே எனது பதவியை நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் “இங்கே பாஜகவில் மாற்றுத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதற்கெல்லாம் விதை யார் போட்டது தெரியுமா…? நம்ம தோனிதான்..!!

விக்கெட் கீப்பராக இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ள வீரர்கள் பற்றி பட்லர் பேசினார். அப்போது இதற்கெல்லாம் விதை டோனி போட்டது என்று கூறினார். இந்த ஆண்டு ஐபிஎல் இல் ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து பேசிய பட்லர் இந்திய கிரிக்கெட் அனைவரும் தோனியின் வழியில்தான் நடக்கின்றனர். அவர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அண்ட் கேப்டனாக உருவாக காரணம் தோனி போட்ட விதைதான். மேலும் சாம்சங் தலைமையின்கீழ் விளையாடுவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

இரவும் பகலும் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல்… நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கிறார் மோடி… முதல்வர் பாராட்டு..!!

தாராபுரத்திற்க்கு வந்த பிரதமர் மோடி உரையாற்றிய பிறகு, எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தாராபுரத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம் கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. பிரதமர் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் இந்திய நாடு முன்னேற இரவு பகல் பாராமல் உரைக்கின்றார். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற நாட்டு மக்களின் கனவை நனவாக்க இருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

“பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது”… நாமக்கல்லில் டிடிவி தினகரன் பரப்புரை..!!

பணம் கொடுத்தாலும் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்று, அ.ம.மு.க., பொதுச் செயலாளா் தினகரன் கூறினார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வேட்பாளர்களை ஆதரித்து அமமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார்.  அப்போது தமிழக மக்கள் நலம் பெறவேண்டும், அடிப்படை வசதிகளை பெற வேண்டும் என்பதற்காக, அமமுக கூட்டணி அமைத்து இந்தத் தோ்தலை சந்திக்கிறது. கொரோனாவால், பொதுமக்கள் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் சிறிய, பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதோடு, அரசு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆா். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுபவன் நான்…. ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு நொடியும் மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories

Tech |