பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இந்தியா போன்று அமெரிக்க நாட்டுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பிரதமராக நான் பொறுப்பேற்ற வுடன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டேன். எனினும் அது பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் நல்ல உறவை கொண்டிருக்கிறது. […]
Tag: பேட்டி
பிரபல நடிகை டாப்ஸி தனது திருமணம் குறித்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இதைத்தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் என்பவரை காதலிப்பதாகவும் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் நடிகை டாப்ஸி தனது காதலருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]
சசிகலா அதிமுக தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக தொண்டர்கள் ஒருவர்கூட செவிசாய்க்க மாட்டார்கள். சசிகலா தொண்டர்களை திசைதிருப்பி குழப்ப முயற்சி செய்கிறார். மேலும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டரும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் கட்டிக்காத்து இந்த இயக்கத்தை பாதுகாத்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி […]
நடிகை தமன்னா மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போதுள்ள திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் மாறியுள்ளது. ஆகையால் சினிமாவைப் பற்றியும் அவர்களது பார்வை இனிமேல் மாறக்கூடும். தனி ஒரு நடிகருக்காக எந்த ரசிகரும் இனி […]
டெல்லியில் தடுப்பூசி இல்லாத காரணத்தினால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வந்தால் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும் என்பது தெரியவில்லை என்று அவர் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “டெல்லியில் தடுப்பூசி இல்லை என்ற காரணத்தினால் நான்கு நாட்களாக 18 முதல் 44 வயது நபருக்கு போடப்படும் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய […]
நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி , உலகக் கோப்பை போட்டிக்கு சமமானது என்று உமேஷ் யாதவ் கூறியுள்ளார். இங்கிலாந்தில் வருகிற ஜூன் 2ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தப்போட்டி தொடரில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் பேட்டி ஒன்றில் கூறும்போது, நடக்க உள்ள உலக டெஸ்ட் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா ரீமேக் மூவியில் நடிக்க மறுத்துள்ளார். கன்னடத் திரையுலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ எனும் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா, தான் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவில்லை […]
தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா தனது நடிப்பில் இளைஞர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவர் தற்போது தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் தமிழ்நாட்டின் உணவு வகைகள் வெகுவாக என்னை கவர்ந்து விட்டது. தமிழ் உணவில் அறுசுவை இருக்கிறது. இதற்காகவே ஒரு தமிழரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு பெண்ணாக மாறி விடுவேன் என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறிய இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று, போட்டியின் அமைப்பாளர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டுமென்று , முன்னாள் டென்னிஸ் வீரரான பெடரர் தெரிவித்துள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற சாதனையாளரான ரோஜா் பெடரர், கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் இவர் போட்டிகளில், பங்கு பெற்று விளையாடாமல் இருந்தால். இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில், பங்கேற்க உள்ள பெடரர், இதன்பிறகு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் […]
முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் பொருளாதாரப் பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுபோல் தெலுங்கில் சலார் எனும் படத்திலும் நடித்து வருகிறார். பிஸியான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தற்போது கொரோனா காலகட்டம் நிலவி வருவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களைப் போல எனக்கும் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நான் […]
நடிகர் அஜித் சினிமாவே வேண்டாம், அரசியலுக்கு வரட்டா என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் அஜித் சொன்ன விஷயம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]
பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலின் இந்தியன்2, படத்திலும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகருடன் என்னை இணைத்து பேசி […]
பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா, தி.மு.க.வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தேவையில்லாமல் பேசுகிறது என்று பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவினால் ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு குறித்து பேசுகின்றனர். இதன்மூலம் திமுக ஆட்சிக்கு வராது என்பது தெரிய வருகிறது. மேலும் பெண் காவலர்கள் பயன்படுத்தும் மொபைல் டாய்லெட் கண்டெய்னரை […]
படப்பிடிப்பில் சுதந்திரமாக சுற்ற முடியவில்லை என்று தளபதி65 ஹீரோயின் கூறியுள்ளார். ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, அனைவரது வாழ்க்கையிலும் கொரோனாவுக்கு பின் பல தாக்கம் ஏற்பட்டிருக்கும்.சொல்லப்போனால் கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றித் திரிந்தது போல் தற்போது சுற்ற […]
நடிகர் பகத் பாசில் தனது வெற்றிக்கான காரணத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் தான் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில். இவர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படி மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்த பகத் பாசில் பல மொழி படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய அளவில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் […]
பெண்களிள் ஓட்டு அதிகமாகப் பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி அமையும் என மதுரை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதினால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலை சிறுத்தையினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டாக்டர். அம்பேத்கர் உலக தலைவர் எனவும் அவரை ஒரு ஜாதிய வட்டாரதிற்குள் அடைக்கக் கூடாது எனவும் கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை […]
ரஜினி சூட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு என்று பிரபல காமெடி நடிகர் சூரி பேட்டியளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரஜினி மற்றும் சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு […]
திருமணத்தைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரபல நடிகை சுனைனா பேட்டி அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து சுனைனா தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “இந்த ஒன்றரை […]
கர்ணன் பட நடிகை நான் ஒரு மண் மாதிரி என்று கூறியுள்ளார். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படம் வரும் 9-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நான் நடித்த ஜூன் படத்தை பார்த்து இப்படத்திற்காக என்னை மாரிச்செல்வ ராஜ் தேர்வு செய்துள்ளார். எனக்கு இந்த கதை மிகவும் […]
நடிகை அஞ்சலி காதல் தோல்வி குறித்து முதல்முறையாக பேட்டியளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் சிலர் மட்டுமே ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை அஞ்சலி. இவர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் சொந்த விஷயங்களிலும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். குறிப்பாக பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வந்த இவர் திடீரென அவரை விட்டு பிரிந்தார். […]
ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் பரத் தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் நடிகை அசினுக்கு தம்பியாக நடித்து பிரபலமானவர் நடிகர் பரத். இவர் உலக நாயகன் கமலஹாசன் நடித்து 2002ஆம் வருடம் வெளிவந்த பஞ்சதந்திரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் பிறந்தது தமிழ்நாடு. அதன் பின்பு சென்னையில் இருக்கும் […]
அரசியலில் இணைந்த ஷகிலா இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீங்க என்று கூறியுள்ளார். மலையாள படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷகிலா.இதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஷகிலா பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் […]
அஜித்தின் வலிமை படத்திற்கான அப்டேட்டை போனி கபூர் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவர் நடிப்பில் கடந்த ஒரு வருடமாக வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை போனிகபூர் இயக்குகிறார். வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் வரும் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட […]
வில்லியாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முன்னணி நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் சில நாட்களுக்கு முன்பு அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “திருமணத்திற்குப் பின்னர் எனக்கு அதிக மரியாதை தருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் திருமணத்திற்கு பின்பு […]
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் டென்ஷனில் இருந்து விடுபட எனக்கு எழுத்து உதவுகிறது என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் மட்டுமின்றி பாடுவதிலும் திறமை கொண்டவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னை டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கு எழுதுவதே உதவுகிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் பாடல்களும், கவிதைகளும்,கதைகளும் எழுதுகிறேன். இவைகள் சோகமான தருணங்களில் நம்மை சிறப்பான […]
பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவியான மேகன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பல அதிர வைக்கும் தகவல்களில் ஒன்றாக தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அமெரிக்கா தொலைக்காட்சியான ஒபேரா வின்பிரேவில் பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டி சில மணி நேரத்திலேயே அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்ட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒன்றாக மேகன் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்ய […]
பிரிட்டனில் பேட்டியாளர்களை சந்தித்து பேசிய ஹரி மேகனின் பேட்டியை பார்ப்பதற்கு மகாராணியாருக்கு நேரம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹரி மேகனின் பேட்டியை சர்க்கஸ் என அரண்மனை வட்டாரம் விமர்சித்த நிலையில் மகாராணியாருக்கு அதையெல்லாம் பார்ப்பதற்கு நேரம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சில மணி நேரத்திற்கு முன்பு ஒளிபரப்பான அந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி இருந்தது. ஆனால் இந்த பேட்டி குறித்து மகாராணியார் […]
பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வின்ஃப்ரேக்கு அளித்துள்ள பேட்டி அரண்மனை வட்டாரத்திற்கு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Jason Knauf என்ற நபர் மேகனின் முன்னாள் உதவியாளராக பணிபுரிந்தார். தற்போது அவர், அரண்மனையில் மேகன் தனது உதவியாளர்களை மிகவும் கொடுமைப்படுத்துவார் என்று ” The Times” பத்திரிகையில் புகார் அளித்திருந்தார். அதனால் பிரிட்டன் மகாராணியார் ஹரி- மேகன் தம்பதி மீது முறையான விசாரணை ஒன்று நடக்க வேண்டும் என்று கூறினார். மகாராணியரின் அந்த அறிவிப்பு வெளியானதுமே […]
முன்னாள் அமைச்சர் ஒருவர் பேட்டியின் போது சட்டத்திற்கு முரணாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் முன்னாள் கேபினட் அமைச்சராக இருந்தவர் மோரிட்ஸ் லுயன்பெர்கர். இவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ஒரு பிணைக்கைதி விடுவிக்கப் படுகிறார் என்றால் அதற்காக ஒரு பிணைத் தொகை கொடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சுவிட்சர்லாந்தின் சட்டத்தின்படி பிணைக் கைதிகளை மீட்க பிணைத்தொகை கொடுக்கப்படவில்லை என்று இருக்கிறது. ஆகையால் மோரிட்ஸ் லுயன்பெர்கர் அளித்த பேட்டியில் அவர் […]
சமீபத்தில் நடிகை மீனா அளித்த பேட்டியில் நடிகர் அஜித் எப்போதும் ஹேண்ட்சமானவர் தான் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் “தல அஜித்”-க்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நாளுக்கு நாள் அவருக்கென்று இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்று பல நடிகைகள் ஏங்கி வருகின்றனர். அவருடன் படத்தில் நடித்த சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரும் “அல்டிமேட் ஸ்டார் ” அஜித்தை பற்றி பெருமையாகவே […]
தமிழகத்தில் மீண்டும் மக்கள் நல கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
திருப்பத்தூர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்போது தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், எம்ஜிஆர் வழிவந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறினார். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை என்றும், ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்று கூறினார். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதற்கு […]
தமிழகத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சசிகலா செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் தனது உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறிய தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜனின் வாழ்க்கை படமாக உருவாகுமா என்ற சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் சேலத்தை சேர்ந்த நடராஜன். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வலைப் பந்துவீச்சாளராக சென்றார். அங்கு தனது திறமை மற்றும் கடின உழைப்பு மூலம் ஒரு நாள், 20 ஓவர் , டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கி விளையாடினார். இதனால் இந்திய ரசிகர்களின் கவனம் நடராஜனின் பக்கம் சென்றது. […]
சசிகலா சிறையிலிருந்து விடுதலையானால் அதிமுக 15 பிரிவுகளாக பிரிய வாய்ப்புள்ளது என்று திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் கூறியுள்ளார். திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் நாளை தேனியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மேலும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அடித்து கொலைசெய்ததாக மக்களிடையே பேசி […]
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் உடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிக பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு பேட்டியில், “மூளை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உண்டு. அது பொதுவானது. ஆனால் பாலியல் அச்சம்தான் தனித்தன்மையானது. அந்த வகையில் பெண்களிடம் கூடுதலாக உள்ள கவர்ச்சியை எனக்கு பிடிக்கும். அதை போற்றுகிறேன்” என்று சொன்னதுடன் “பெண்களின் மூளை அல்ல, அவர்களின் உடல்தான் எனக்கு […]
என்னை திட்டவோ அணைக்கவோ கமலுக்கு முழு உரிமையும் உள்ளது என்று பாஜக எம்பி குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்பு தெரிவித்த கருத்துக்கு அவருக்கு சட்டங்கள் பற்றி ஒன்றும் தெரியாது என […]
தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லை என்று எல்.முருகன் மீண்டும் அதிரடியாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் முதல்வராக இருப்பது பழனிசாமிதான், ஆனால் அ.தி.மு.க கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பா.ஜ.க தலைமைதான் முடிவு செய்யும்.” என பா.ஜ.க. மாநிலச் செயலாளர் முருகன் கூறியிருக்கிறார். வேளாண் திருத்தச் சட்டம், விவசாயிகளை கார்பரேட்டுகளிடம் அடகுவைத்துவிடும், அதனால் இந்த அபாயகரமான சட்டத்தைச் திரும்பப் பெறவேண்டும் என டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்நிலையில் வேளாண் திருத்தச் […]
நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டை யில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு பிறகு சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. தற்போது அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சித்ராவின் செல்போனில் இருந்த தகவலை ரெக்கவரி செய்ததன் மூலம் சித்ரா ஹேம்நாதின் தந்தையிடம் உங்களது […]
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது மட்டும் தேர்தல் பிரசார பணிகளுக்கு தயாராவது போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா […]
ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன், வர்ணனையாளரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததோடு, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்துவீசி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் இந்திய அணி டி20 தொடரை வெல்ல பெரிதளவில் கை கொடுத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனியனில் புதிய நட்சத்திரமாக நடராஜன் இடம்பிடித்துள்ளார். மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு […]
தமிழகத்திலிருந்து திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று எம்பி கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து மு.க.அழகிரி, தனியாக கட்சி தொடங்குவது பற்றி தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வதாக நேற்று கூறியிருந்தார். அது பற்றி கருத்து தெரிவித்துள்ள எம்பி கனிமொழி அளித்த பேட்டியில், “முக.அழகிரி கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால், […]
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசிடம் உள்ளது போல் எங்களிடம் கஜானா இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மைய கட்சியின் […]
தமிழகத்தில் சசிகலாவின் விடுதலை கட்சியிலும் அரசியலிலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நாடு முழுவதிலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் முக்கிய நிலைப்பாடு. இருந்தாலும் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு […]
தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லை என்றால் அதிமுக என்ற ரயில் ஒருபோதும் நகராது என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான ராதாரவி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நடிகர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதா? நாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வேல் யாத்திரை நடத்தும் பாஜகவினரை தமிழக அரசு முழுமையாக நடைபயணம் மேற்கொள்ள விடுவதில்லை. தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லை என்றால் அதிமுக என்ற ரயில் நகராது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு […]
பாரதிய ஜனதா வேல் யாத்திரையில் சட்டம் தன் கடமையை செய்யும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 131 கோடி ரூபாய் மதிப்பிலான 123 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். அதன் பிறகு 189 கோடி ரூபாய் மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தமிழகத்தில் குறைவான பாதிப்பே மிக வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிக விரைவாக அளிக்கக்கூடிய வகையில் பல முன்னேற்றம் அடைந்துள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஒருகோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை […]
அதிமுக செய்த பிறகுதான் திமுக அனைத்தையும் செய்துவருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழு ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக செய்த பிறகுதான் திமுக இவற்றையெல்லாம் செய்துவருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பரக் குழு […]
எங்கள் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்துள்ளது எங்களுக்கு பலம்தான் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. மழை நீரை சேமிப்பதற்கு நீர்நிலைகள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பருவ மழையை எதிர் கொள்வதற்கு மண்டல அளவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும். எங்களின் […]