Categories
உலகசெய்திகள்

சாலையில் கவிழ்ந்த பேருந்து…. கோர விபத்தில் 5 பேர் பலி…. 28 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டாஸ் மாகாணத்தின் தலைநகர் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Categories

Tech |