சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் உணவகங்களில் அரசு பேருந்து நிற்க வேண்டுமென விண்ணப்பிக்கும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது. அந்த புதிய பட்டியலில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சைவ […]
Tag: பேருந்து
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த காலேஜ் மாணவர்கள் கெத்து என ஒரே பேருந்தில் பயணம் செய்வது, ஜன்னல், கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது. பேருந்தில் பாட்டு பாடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செய்வது என ரூட்டு தல பிரச்சினை என்பதால் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில்சென்னை மாநகரின் பேருந்துகளில் தொடர்ந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் பள்ளி மற்றும் […]
அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிட்டுள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம், சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் சைவ உணவு மட்டும் தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது. கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். பயோ கழிப்பறை இருக்க வேண்டும் மற்றும் உணவு வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொறுத்திருக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறது. உணவகத்தில் உணவு விலை பட்டியல் அவசியம் எம்ஆர்பி […]
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குப் பின் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நேரடி வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கான ஆசிரியர்கள் ஆவலுடன் கல்விப் பணியை சீராக மேற்கொள்ள பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்களின் உருவங்களும், உடைகளும் பழக்க வழக்கங்களும் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. இப்போது பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சட்டை பட்டனை கழட்டி விட்டு புள்ளின்கோ […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் வரை செல்லும் இருபத்தி ஏழாம் நம்பர் அரசு பேருந்தில் மாணவர்கள் தினந்தோறும் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருபத்தி ஏழாம் நம்பர் பேருந்துக்கு பதிலாக பேருந்து வழித்தடத்தில் விடப்பட்டுள்ளது. அதில் வீரசோழன், பார்த்திபனூர், கீழப்பெருங்கரை வழியாக பரமக்குடி செல்லும் வழியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி […]
பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா -ஒய் ஒசக்கோட்டை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து காலை வேளையில் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் உட்பட 80 பயணிகளுடன் பேருந்து சென்றுள்ளது. அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் அமர்ந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாவகடா தாலுகா, பளவள்ளி டவுன் அருகேயுள்ள ஏரி மீது சென்று கொண்டிந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து […]
மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை நகரில் காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில் புதிய பேருந்து நிலையத்தில் நகர பூங்கா சாலையில் நேற்று தார் சாலை போடும் பணி நடைபெற்று வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு வரக் கூடிய பேருந்துகள் அனைத்தும் நேற்று சின்ன கடைவீதி நகராட்சி அலுவலகம் […]
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 1198 ஆம் ஆண்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என்னும் ஒரு அருமையான திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் திடீரென 2003 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதன் பின்பு மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக […]
துபாயிலுள்ள தனியார் நிறுவனம் அருகில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லக்கூடிய ஒரு பேருந்து வெகு நாட்கள் ஆகியும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்து திடீரென காணாமல் போய்விட்டது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பேருந்து உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த பகுதியிலுள்ள குடோனில் பணிபுரிந்து வந்த 2 பேர் பேருந்தை திருடி சார்ஜாவில் உள்ள கார் நிறுவனத்தில் 34 […]
மதுரையில் அரசு ஊழியர்கள் வாரம் ஒருநாள் அலுவலகத்திற்கு பேருந்து அல்லது நடந்து வர வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் புதன்கிழமை அன்று பேருந்து அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 9-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய […]
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக் குழந்தைகள் ஏற்றிச்சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி வந்த விவேகம் மேல்நிலைப்பள்ளி பள்ளி வேன் டயர் திடீரென்று கழன்று ஓடியது. இதனால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீட்டுக்கு […]
கேரளா அரசு பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவோ, பயணத்தின் போது சத்தமாக பேசவோ தடை செய்துள்ளது. இந்தியாவில் ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றது. அதாவது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு போவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் கேரள அரசு […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19 (நாளை) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக நாளை […]
ராஜஸ்தானில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. ராஜஸ்தானில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஜெய்சால்மர் பகுதி அருகே ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பிப்..19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. முன்பே நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போதும், மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புறங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டும் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கு முந்தைய […]
கோயம்புத்தூரில் அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் சௌரிபாளையம் பகுதியில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் இருந்து வேகமாக வந்த அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மடவார்வளாகம் விளக்கு என்ற இடத்தில் ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த 30 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கோர விபத்து காரணமாக மதுரை, கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது […]
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் விழுந்ததில் பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்து வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி சென்றுள்ளது.அந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்தது. மேலும் இதுபற்றி அறிந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்தில் பயணித்த […]
சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தோனேசியா நாட்டில் யோக்யகார்த்தா மாநகரில் பந்தல் என்னும் ஊர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனை தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் […]
தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தையும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது…
லண்டனில் பேருந்து மோதிய விபத்தில் இளம் பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் காலை நேரத்தில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது 30 வயது இளம் பெண்மணியின் மீது பேருந்து ஒன்று மோதியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் விரைந்து வந்துள்ளார்கள். ஆனால் அந்த பெண் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூரை நோக்கி புறப்பட்டது. இதையடுத்து பேருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட டிரைவர் முயற்சி செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்துக்குள் சிக்கித் தவித்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு பேருந்து […]
சோமாலியா நாட்டில் கண்ணிவெடி குண்டில் பேருந்து மாட்டி 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரத்திற்கு பயணிகளுடன் ஒரு பேருந்து புறப்பட்டிருக்கிறது. அப்போது ஜுபாலேண்ட் என்ற மாகாணத்தில் அரச படையினருக்கும், அல் ஷபாப் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு சண்டை நடந்திருக்கிறது. இந்நிலையில், அந்த பேருந்தானது கண்ணிவெடியில் மாட்டியது. இதனால், பதறிய பயணிகள் மரண ஓலமிட்டனர். இக்கொடூர சம்பவத்தில் 10 பயணிகள் பலியாகினர். […]
சென்னை பூந்தமல்லி பகுதியில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த பேருந்தை நிறுத்திய இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் படியில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை பேருந்தின் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும் “பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டு வருடமும், கல்லூரி படிப்பு 3 வருடமும் என மொத்தம் 5 வருடங்கள் ஒழுங்காக படித்தால் வாழ்க்கையில் ராஜா போல இருக்கலாம். இல்லை என்றால் 50 வருடங்களுக்கு அம்போனு தான் போகணும்” என்று இன்ஸ்பெக்டர் […]
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தும் உணவகங்கள் மோசமானதாகவும், விலை மிகவும் அதிகமாகவும் இருப்பதாக நீண்ட நாள்களாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அண்மையில் இது குறித்த புகார் எழுந்த நிலையில் விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த உணவகங்கள் போன்று பல உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் […]
அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் மரப்பாலம் இடிந்து விழுந்ததில் பள்ளத்தில் கிடந்த பேருந்தை ராட்சத கிரேன் மூலமாக வெளியில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிபர் ஜோ பைடன் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் 50 வருடங்கள் பழமை வாய்ந்த மரத்தாலான மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. மேலும், அந்த நேரத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்து 10 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது மட்டுமன்றி, […]
தமிழக பேருந்து நிலையங்களில் ஒரு மாற்றுத்திறனாளி நின்று கொண்டிருந்தாலும் பேருந்தை நிறுத்தி அவரை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறும் வகையில் தமிழக பேருந்துகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. மேலும் 10 சதவிகிதம் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் தமிழக அரசு உறுதியளித்தது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் […]
குருகிராமில் இந்த பஸ் இத்தனை மணிக்கு இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடையும் என்ற தகவலை பேருந்து நிலையங்களில் ஒளிர் திரைகளில் வெளியிடும் புதிய திட்டம் அறிமுகமாக இருக்கிறது . ஹரியானா மாநிலம் குருகிராமில் பேருந்துகள் நிறுத்தத்தில் இந்த வசதி உருவாக்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக பொதுப் போக்குவரத்தில் 100 சிறிய பேருந்துகளின் நேரங்கள் இந்த ஒளிரும் எண்ம பலகையில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மூல்சந்த் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜமீன் காளியாபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஊத்துக்குளி அருகே முன்னால் சென்ற வாகனத்தை, பேருந்து ஓட்டுநர் முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்து சென்டர் மீடியனுக்கு மேல் சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மீடியனில் இருந்த செடிகளை சேதப்படுத்தியவாறு பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதனை பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வகையில் நாளை (23)ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், நாளை ஒருநாள் ஆம்னி பேருந்துகளும் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும். இதற்கு முன்னதாக பயணிகளின் நலனைக் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீரென்று தீப்பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள சாமராஜ பேட்டை பகுதியில் 40-க்கும் அதிகமான பயணிகளோடு சென்று கொண்டிருந்த பேருந்து முன்பக்க இன்ஜினில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகளை கீழே இறக்கியுள்ளார். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக 40-க்கும் அதிகமான பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். […]
புதுச்சேரி மாநிலத்தில் அரசு நலவழித்துறையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நடமாடும் அதிநவீன மொபைல் இரத்த தான பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தின் மூலம் ரத்தம் கொடுக்க முன் வருபவர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து ரத்தம் கொடையாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்து போக்குவரத்துதுறை சான்றிதழ் பெறுவதற்காக வாகனத்தை புதுப்பிக்க அரசு சார்பில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசு பணிமனைக்கு அனுப்பி புதுப்பிக்கப்பட்டு பின்னர் புதுவை அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்பதால் பேருந்து சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் முதல்வர் முக.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சிறிது காலம் முற்றிலும் பேருந்து சேவை நிறுத்துவது […]
குஜராத் மாநிலம் சூரத் அருகில் 15 பயணிகளுடன் கதிர்காம் பகுதியிலிருந்து பாவ்நகர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வராச்சா பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் கீழே இறங்கி ஓடினர். எனினும் இந்த தீ விபத்தில் ஒரு பெண் சிக்கி உடல் கருகி உயிரிழந்து விட்டார். மேலும் ஒரு ஆணும் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண் சுற்றுலா மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பஸ்ஸில் சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பினர். அப்போது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவருக்கு கை கால்கள் இழுத்த நிலையில் பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து நடுங்கி அழத் தொடங்கினார். அப்போது அந்தப் பேருந்தில் பயணம் செய்த யோகிதா சாவத் (42) என்ற பெண், டிரைவரை ஓரமாக அமரவைத்துவிட்டு, பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டினார். அதன்பிறகு டிரைவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து […]
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் உள்ள ராஜகோவிந்பூர் அருகே சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானை ஒன்று பின்புறமாக இருந்து தாக்கி சில மீட்டர் தூரம் வரை தும்பிக்கையால் தள்ளிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது. அந்தக் கூட்டத்திலிருந்த குட்டியானை ஒன்று கிராமத்தில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நேற்று 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடு தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்றவாறு, ஜனவரி 10ஆம் தேதிக்கு பின் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையில் ஜனவரி 9ஆம் தேதியன்று பயணிக்க அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதிக்கான முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]
தமிழகத்தில் தலைமையேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டால் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச பாட புத்தகம், சீருடை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறது. அதில் முக்கியமான ஒன்று இலவச பேருந்து பயணம். பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சினிகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவ்யா ஸ்ரீ என்ற சிறுமி கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இந்நிலையில் காலை வழக்கம்போல் மாணவி அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றதால், நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்து மாணவி கீழே இறங்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் நிலைதடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மாணவி நவ்யா ஸ்ரீ பலத்த காயமடைந்தார். இதையடுத்து மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் […]
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். நேபாளத்தில் பல்பா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் திடீரென பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் 15 பேர் இந்த விபத்தினால் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் கூட்ட நேரிசல் ஏற்படும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதன் காரணமாக விபத்து ஏற்படுகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கக்கூடிய நேரங்களில் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர். எனவே மாணவர்களின் வசதிக்காக கூடுதல் […]
சிங்கப்பூரில் இருக்கும் லிட்டில் இந்தியா நகரத்தை சேர்ந்த மூர்த்தி நாகப்பன் என்ற நபர் பேருந்தில் மதுபோதையில் தகராறு செய்ததால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த மூர்த்தி நாகப்பன்(65), என்பவர் இந்திய வம்சாவளியினர். இவர், மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி இருக்கிறார். மேலும், முகக்கவசத்தை சரியாக அணியவில்லை. எனவே ஓட்டுனர் அவரிடம் சரியாக முககவசத்தை அணியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால், மூர்த்தி நாகப்பன் கோபமடைந்து, ஓட்டுனரை மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். எனவே பயணிகள் அவரிடம் தட்டிக் கேட்ட […]
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் முயற்சியாக வாரத்தில் ஒரு நாள் அரசு அதிகாரிகள் பேருந்திலோ, சைக்கிளோ நடந்துவர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா இன்று இரண்டாவது வாரமாக தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்றார். பின்னர் அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்காக கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் […]
ஜப்பானில் தண்டவாளத்திலும், சாலையிலும் இயங்கக்கூடிய பார்ப்பதற்கு மினி பேருந்து போல் இருக்கும் வாகனத்தை கண்டறிந்துள்ளார்கள். ஜப்பானில் தண்டவாளத்திலும், சாலையிலும் இயங்கக்கூடிய பார்ப்பதற்கு மினி பேருந்து போல் இருக்க கூடிய வாகனத்தை கண்டறிந்துள்ளார்கள். இந்த இரட்டை பயன்பாட்டைவுடைய மேற்குறிப்பிட்டுள்ள வாகனம் சாலையில் செல்லும்போது ரப்பர் டயரில் இயங்குகிறது. அதேபோல் தண்டவாளத்தில் செல்லும்போது ரப்பர் டயரிலிருந்து இரும்பு சக்கரங்கள் கீழிறங்கி ரயில் போல் இயங்குகிறது. இந்த 21 பேர் பயணிக்கக்கூடிய மினி பேருந்து சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் […]
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பேருந்தில் பயணம் செய்யும் ஆண் பயணி பெண் பயணியிடம் தவறாக நடந்து கொள்ள முறைப்பட்டால் தவறாக நடந்து கொள்ளும் ஆண் பயணியை பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் பேருந்தில் புகார் புத்தகத்தை பராமரித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக போக்குவரத்துத் துறை சார்பாக இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக சென்று வருகின்றன. 2020 முதல் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காமல் விடுமுறை […]