பேருந்து படிக்கட்டில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்த கண்டக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை தினசரி மார்க்கெட் சந்திப்பு அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஈரோட்டில் இருந்து தாராபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் படிக்கட்டுகளில் சிலபேர் படியில் நின்றபடி பயணம் மேற்கொண்டனர். இதனை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் அந்த பேருந்தை நிறுத்தினார். அதன்பின் படிக்கட்டில் நின்றபடி பயணிகள் பயணம் செய்ய அனுமதித்த […]
Tag: பேருந்து
சுற்றுச்சுவரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ரகுராமன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் சுவாமிமலை அருகேயுள்ள சுந்தரப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் எதிர்ப்புறம் உள்ள சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் திடீரென அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட […]
நேற்று பாகிஸ்தானில் பேருந்து ஒன்று திருமண கோஷ்டி கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாகிஸ்தானில் உள்ள மண்டி பஹாவுதீன் என்ற நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருமண மண்டபத்துக்கு செல்ல மணமக்களின் உறவுக்காரர்கள் வாடகை வேன் ஒன்றை அமர்த்தியிருந்தனர். மேலும் வேனில் ஏறுவதற்காக வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த உறவுக்காரர்கள் நகரின் முக்கிய சாலையில் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வாகனங்கள் […]
சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில் சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை கூறினர். இந்நிலையில் அவ்வழியாக வந்த பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்தபடி வந்த ஒரு மாணவன் அதிகாரிகளை பார்த்ததும் ஓடும் பஸ்ஸில் இருந்து […]
ஈரோடில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்தில் 50 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பயணித்த பெண் பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டதை கவனித்த பயணிகள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். அப்போதுதான் மற்றவர்களுக்கு தெரிந்தது, அவர் போதையில் இருக்கிறார் என்று. மேலும் அவர் ஆபாசமாக பேசியதால் சக பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்தப் பெண் பயணிகளிடம் மிக மோசமாக நடந்துள்ளார். வயது வித்தியாசம் கூட பார்க்காமல் அவர்களை […]
அரசு பேருந்தில் ஏற வந்த இருளர் இன சமூக மக்களுக்கு பாலபிஷேகம் செய்து வரவேற்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் இருளர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பேருந்தில் ஏற வந்தது. இதைப் பார்த்த ஓட்டுனரும் நடத்துனரும் அவரது கால்களில் பாலபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி பேருந்தில் அமர வைத்தன.ர் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அந்த வீடியோவில் பேருந்து […]
மாணவர்கள் படிக்கட்டில் பயணித்தால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது நியாயமற்ற செயல் என போக்குவரத்து பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஏறி இறங்குவது, பேருந்துக்குள் இடமிருந்தும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருவது, ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டு வருவது, பின்பகுதியில் உள்ள ஏணியில் ஏறி நின்று செல்வது, மேற்கூரையில் நின்று பயணம் மேற்கொள்வது என பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதை கண்டிக்கும் ஓட்டுநர்கள் நடத்துநர்களிடம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் இருந்து நரிக்குறவ இன மக்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதி, மத, இன ரீதியாக பாகுபாடு காட்டக் கூடாது என்று முதல்வர் முக ஸ்டாலின் எச்சரித்தும் மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்னதாக சில தினங்களுக்கு முன்பு மீன் விற்கும் அம்மாவை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. https://www.youtube.com/watch?v=IMmEGDi3hOk&feature=emb_title இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
நாகர்கோயில் அருகே பேருந்திலிருந்து அவர் குடும்பம் ஒன்று இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்தில் ஏறிய குறவர் குடும்பத்தை கீழே இறக்கி விட்டு அவரது உடமைகளை வெளியே வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மூதாட்டியை இறக்கிவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குறவர் குடும்பத்தை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். பேருந்தில் இருந்து இறக்கி விட்ட பிறகு சிறிய குழந்தை கதறி அழும் […]
அரசுப் பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு 43 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து காளவாசல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து டிரைவர் ஆறுமுகத்திற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறுமுகம் பேருந்தை சாமர்த்தியமாக சாலையின் ஓரமாக நிறுத்தினார். இந்நிலையில் ஓட்டுநர் ஆறுமுகம் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
நிம்மதியாக உறங்க 5 மணிநேரம் போகக்கூடிய பயணத்திற்கு டூர் ஏஜென்சி ஒரு டபுள்-டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் ஒரு உள்ளூர் டூர் ஏஜன்சி எந்த தொல்லையும் இன்றி அமைதியாக உறங்குவதற்கு தனிப்பட்ட ஒரு பேருந்து சர்வீசைத் தொடங்கியுள்ளது. இதில் 52 மைல் வரை செல்லும் இந்த பயணம் ஹாங்காங் மக்கள் நிம்மதியாக எந்த தொந்தரவும் இன்றி உறங்க உதவியாக இருக்கிறது. இதனிடையில் மக்கள் நீண்ட நேரம் செல்லும்போது சிறிது நேரம் நம்மை அறியாமலேயே உறங்குவது வழக்கமாக இருக்கிறது. […]
மழைநீர் வடியும் பேருந்தில் நின்றவாறு மாணவ-மாணவிகள் பயணம் செய்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருக்கிறது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தினசரி அரசு பேருந்தில் சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 15 பேரை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து தாளவாடியில் இருந்து பெலத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து புறப்பட்ட […]
அதிமுகவின் தற்காலிக புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் என்னென்ன பொறுப்பில் பதவி வகித்தார் என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயலாற்றிய மூத்த நிர்வாகி தமிழ்மகன் உசேன். 1950களில் எம்ஜிஆர் மன்றத்தை தொடங்கி அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் கீழ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர். 1972-ல் திராவிட முன்னேற்ற கட்சியில் […]
மெக்சிகோவில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து குடியிருப்பின் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ சல்மா நகரிலுள்ள தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ், பிரேக்கில் பழுது ஏற்பட்டதால் குடியிருப்பின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் […]
ஆத்தூர் அருகே உள்ள தாம்போதி பாலத்தில் மழை வெள்ளம் செல்வதால் திருச்செந்தூர் தூத்துக்குடி வழியாக செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆறுமுகநேரி, ஆத்தூர்,காயல்பட்டினம், குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள ஆத்தூர் தாம்போதி மேம்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இந்த பாலத்தில் சுமார் இரண்டு அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக போக்குவரத்து […]
மாணவ-மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து பெருந்துறையை நோக்கி புறப்பட் ட அரசு டவுன் பேருந்து காலை 8 மணியளவில் கூரபாளையம் பிரிவு அருகே சென்றது. அப்போது அந்த பேருந்தில் ஏறி பெருந்துறை செல்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். ஆனால் அந்த பேருந்து அங்கு நிற்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பேருந்து பெருந்துறை சென்றுவிட்டு மீண்டும் பவானிக்கு […]
பல் கொரியாவிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 53 பேருந்து பயணிகளில் 46 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள். பல்கேரியாவிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சுமார் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அவ்வாறு சுமார் 53 பயணிகளை ஏற்றி கொண்டு நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளாகி தீ பிடித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் பேருந்தில் பயணம் செய்த 53 பயணிகளில் குழந்தைகள் உட்பட 46 பேர் பரிதாபமாக […]
லண்டனில் பேருந்தில் பயணித்த கருப்பினத்தை சேர்ந்த பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டன் நகரில் இரவு 9:20 மணிக்கு பேருந்தில் பயணித்த ஒரு நபர் சிகரெட் பிடித்திருக்கிறார். எனவே, அவரின் அருகில் இருந்த பெண், பேருந்தில் எதற்காக சிகரெட் பிடிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், “உனக்கு பிடிக்கவில்லை எனில், உன் நாட்டிற்கு செல்” என்று கூறியதோடு, அந்த பெண்ணை இன ரீதியாக தாக்கி பேசியிருக்கிறார். எனவே, அந்த நபரை காவல்துறையினர் […]
அரசு டவுன் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கு தினசரி காலை 8.30 மணிக்கு சி-6 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பேருந்து சென்று வருகிறது. இந்த பேருந்து எல்லக்காடு, சிறுக்களஞ்சி வழியே ஊத்துக்குளிக்கு காலை 9.50 மணிக்கு சென்றடையும். இதனையடுத்து இந்த பேருந்து அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு சென்னிமலைக்கு வந்தடைகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த […]
மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்துர் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஓட்டல் உரிமையாளராக இருந்தார். இந்நிலையில் மாதையன் தர்மபுரி- பாலக்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட மாதையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் அதிக அளவு மழை கொட்டி தீர்த்தது அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. குறிப்பாக சுரங்கப்பாதைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் […]
பெட்ரோல் லாரி வெடித்த விபத்தில் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோர் சடலங்கள் ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் தலைநகர் ஃப்ரீடௌனின் புகர்ப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் அங்கு கூடினர். அப்போது திடீரென்று லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதனால் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக […]
வட அயர்லாந்தில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திய பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் Antrim மாவட்டம் Newtownabbey பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 7.45 மணியளவில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது “சம்பவத்தின்போது 4 பேர் கொண்ட கும்பல் பேருந்து […]
தீபாவளி விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் பணிக்கு செல்ல தொடங்கியதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்களுக்கு வந்தனர். இதற்காக தமிழக அரசு சார்பாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ரயில்கள் மூலமும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து தங்கள் சொந்த ஊரில் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக […]
அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளையில் இருந்து ராசிபுரம் நோக்கி அரசு டவுன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கண்டர்குலமாணிக்கம் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அங்கு வந்த சிலர் வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து பேருந்து கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரியாம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி, கந்தசாமி, சண்முகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். […]
அரசு பேருந்து-லாரி மோதிய விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடி நோக்கி அரசு பேருந்து ஒன்று திம்பம் மலைப்பாதையின் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதனையடுத்து பேருந்து திம்பம் மலைப்பாதையில் 22-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு சோள பாரம் ஏற்றிச் சென்ற லாரியும், அரசு பேருந்தும் எதிர்பாராதவிதமாக […]
பிரேசிலில் பேருந்தில் ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. பிரேசிலில் இருக்கும் Belem என்ற பகுதியில் ஒரு இளம்பெண் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் மிகவும் மோசமாக அருவருக்கத்தக்க வகையில் நடந்திருக்கிறார். இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண், அந்த நபரின் கழுத்தை பிடித்து நெரித்துவிட்டார். அந்த பெண் தற்காப்புக் கலைகள் கற்றவர். அவர் உடற்பயிற்சி செய்து விட்டு வீடு […]
அதிகமாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலிருந்து நல்லம்பள்ளி, ஏலகிரி, நாகாவதி அணை வழியாக சின்னம்பள்ளி பகுதிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். இவர்களில் மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று […]
புதுச்சேரியில் 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு தவித்த தம்பதிகள் நூலிழையில் உயிர் தப்பினார். புதுச்சேரி மாநிலத்தில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு அரசு பேருந்து வேகமாக சென்றது. இந்த இரண்டு பேருக்கும் இடையே பைக்கில் வந்த ஒரு தம்பதிகள் கைக்குழந்தையுடன் சிக்கிக் கொண்டன. கல்மண்டபம் கிராம சந்திப்பில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த அவர்கள் வானத்தில் இருந்து […]
திருநெல்வேலியில் உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் கடந்த மாதம் சாதி பிரச்சனை காரணமாக இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது. மேலும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களில் சிலர் ஒருவருக்கு ஒருவர் கடுமையாகத் தாக்கி கொண்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் சாதியை அடிப்படையாக வைத்து தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சாதி மோதல்கள் தலைதூக்கி உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட நிர்வாகமானது அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் […]
பஸ்சின் கண்ணாடியினை யானை நொறுக்கி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினில் பெரும்பாலான காட்டு யானைகள் வசித்து வருகின்றது. இங்கு சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையானது செல்கிறது. இந்த சாலையில் தினசரி யானைகள் உலா வந்து அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்துத் தின்பதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு பேருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து பேருந்து சத்தியமங்கலம்-மைசூரு […]
கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தை திருடி அதிலிருந்து டீசலை ஆட்டையைப் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் ஹனுமந்த ராயா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணிக்கு அரசு பேருந்தை குப்பி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் விடுதியில் உறங்கச் சென்றுவிட்டார். மறுநாள் காலை 6 மணிக்கு பேருந்தை எடுப்பதற்காக குப்பி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து காணவில்லை. இதையடுத்து டெம்போ அதிகாரிகளுக்கு […]
செஞ்சி-திருப்பதி நேரடி பேருந்து சேவையை அமைச்சர் மஸ்தான் கொடிகாட்டி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை வழங்ககோரி அப்பகுதி மக்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு புதிய பேருந்து சேவையை கொடிகாட்டி தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் […]
பேருந்தில் பெண் தவறவிட்ட பணத்தை 10 நிமிடத்தில் கண்டுபிடித்த சட்ட ஒழுங்கு காவலர் மற்றும் போக்குவரத்து காவலர்களை போலீசார் பாராட்டினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருளாண்டி-சீனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீனியம்மாள் 40 ஆயிரம் ரூபாயை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு கமுதியில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்தில் வந்தார். அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இருந்தது. இதனையடுத்து சீனியம்மாள் மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலா நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது சீனியம்மாள் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது “தீபாவளியையொட்டி அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயங்க இருக்கிறது. இதுபோன்று தனியார் பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட இருகின்றது. இதில் தனியார் பேருந்துகளுக்கு முதலமைச்சர் உத்தரவின்படி குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி தனியார் பேருந்துகளில் […]
பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்களின் மூலம் படமாக்கியிருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞரொருவர். இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடம் அணிந்து பயணம் செய்யும் குறும்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அறிவித்திருந்தது. பல பெண்கள் அந்த இலவச பயணத்தை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த யூடியூப் சர்ஜின் என்ற இளைஞர் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அந்த […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். நொய்டாவில் இருந்து காசியாபாத்க்கு ஒரு பேருந்து 8 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பாடியா போத் என்ற இடத்தில் மேம்பாலத்தில் வரும்பொழுது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து […]
உத்திரபிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி என்ற மாவட்டத்தில் உள்ள பாபுரி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஒன்று நேற்று டெல்லியில் பக்ரியாச் என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது பாபுரி என்ற கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வரும்பொழுது சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது […]
கல்லூரி பேருந்தை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டம் பாப்பாகோவிலிலுள்ள காலேஜ் பேருந்தானது திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணவாளம்பேட்டை பகுதியில் நின்றது. அந்தப் பேருந்து கடந்த 28-ம் தேதி காணாமல் போனது குறித்து டிரைவர் ராஜசேகரன் நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது அந்த பேருந்து தஞ்சையை நோக்கி செல்வது தெரியவந்தது. […]
அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையிலிருந்து அந்தியூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுகரைப்புதூர் என்ற இடத்தில் சென்றபோது இந்த பேருந்தும், கவுந்தப்பாடியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் 2 பேருந்துகளின் முன் பகுதியும் நொறுங்கி சேதம் அடைந்தது. மேலும் பேருந்துகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி கோவை-அந்தியூர் டிரைவர் […]
சிறுமி காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜேந்திரம் ஆற்காடு அடுத்த தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி ருத்ராதேவியை அம்மன்பேட்டையில் இருந்து தாய் வீட்டிற்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஆனால் ருத்ராதேவி தாய் வீட்டிற்கு செல்லாமல் காணாமல் போனதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ருத்ராதேவியை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் […]
இளம் பெண் காரில் கடத்தப்பட்ட நான்கு பேர் சேர்ந்து கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதால் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாதகிரி மாவட்டத்தில், சகாபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் டவுனில் இருந்து தனது கிராமத்திற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸை எதிர்பார்த்து காத்து இருந்தது. அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அப்பெண்ணை வைத்து நான்கு […]
பஸ்சில் பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் ரோசிலி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூருக்கு வந்தார். இதனையடுத்து கண்டியன்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரோசிலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்தார். இந்நிலையில் அரசு பேருந்து தெற்கு காவல் நிலையம் அருகில் வந்தபோது ரோசிலியின் கைப்பையில் வைத்திருந்த 1 1/2 […]
தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொது போக்குவரத்தினை அவசியத்திற்கு மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் கேரளாவுடனான […]
பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு தஞ்சையிலிருந்து அம்மாபேட்டை, அவளிவநல்லூர் வழியாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்து வழக்கம்போல் அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு சென்றுவிட்டு பின் தஞ்சைக்கு சென்றுகொண்டிருந்தது. இதனையடுத்து பேருந்து அவளிவநல்லூர் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் திருபுவனம் மருத்துவ தெருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் அருண்குமார் […]
பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பத்தூருக்கு செல்வதற்காக தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறினார். அப்போது மணிமேகலை கையில் வைத்திருந்த 2,800 ரூபாய் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய பெண்ணை காவல்துறையினர் […]
லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சம்பேரி பெட்ரோல் விற்பனை எதிரில் சாலையோரம் ஒரு டேங்கர் லாரியும், அதற்கு அருகில் சிமெண்ட் பாரத்துடன் ஒரு லாரியின் நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது உரசியதோடு, சிமெண்ட் பாரத்துடன் நின்று […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் மாணவ மாணவிகள் கட்டணமின்றி செல்லலாம் என்றும், அரசு கல்லூரி […]
தமிழக அரசு சார்பாக மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். பெண் பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுமாறு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் தடம் எண் 17 என்ற பேருந்தின் ஓட்டுனர் பெண் பயணி ஒருவரிடம் செருப்பை கழட்டி அடிக்க ஓங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்களிடம் […]
பள்ளத்தாக்கில் பாதி கவிழ்ந்த நிலையில் பஸ் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இமாசலபிரதேச மாநிலம், சிர்மாவுர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தனியார் பேருந்து ஒன்று 22 பயணிகளுடன் பயணம் சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஷில்லாய் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து தறிகெட்டு ஓடி தடுப்பு சாலையை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழும் நிலைக்கு உருவானது. இந்த நிலையில் […]