மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைப்பதற்கு ரூ 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை மாவட்டம், பேரூரில் பட்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்து விட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கோவிலுக்கு வரும் முதியோர் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரூ 5.25 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நன்கொடை வழங்கிய பேட்டரி கார் சேவையை ஆரம்பித்து வைத்தார். […]
Tag: பேரூர்
தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில் நேற்று 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள பேளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகைகளை வெட்டி திருடியதாக புகார் வந்துள்ளது. இதனடிப்படையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் யோகா விஷ்ணு புகார் அளித்த விவசாயிகளிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேளூர் கூட்டுறவு சங்கத்திலும் […]
பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஏறி செல்வதற்கு பணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர் கோவை மாவட்டம், பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து செங் குத்தாக உள்ள 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் இருக்கிறார். தென்கயிலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் […]