நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் […]
Tag: பேஸ்புக் நிறுவனம்
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் மயூர். இவர் பேஸ்புக்குக்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பிழை ஒன்று இருப்பதாகவும் ,அதை யாரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளார். அந்த பிழையை கண்டுபிடித்து அதோடு மட்டுமல்லாமல் அதை சுட்டிக்காட்டி பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த மாணவருக்கு பிழையை சுட்டிக் காட்டியதற்காக ரூபாய் 22 லட்சம் பரிசு வழங்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தங்களிடம் இதுபோன்ற அறிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
முகநூல் பதிவுகள் தொடர்பாக பயனாளர்கள் விவரங்களை கேட்டு 2020 ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டில் மட்டும் 40,300 கோரிக்கைகள் வந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பல நாடுகள் தங்கள் நாட்டு பயனர்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்வது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2020 ஜுன் வரை இந்திய அரசு முன்வைத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையைவிட 13.3% அதிகம் என தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் பதிவுகள் வெளியிடுவோர் விவரங்களை கேட்டு இந்தியாவிலிருந்து மட்டும் 2020 […]
கொரோனா ஆபத்து காலத்தில் ஊழியர்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. சாக்ரமெண்டோ; உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் இந்த ஆபத்துக்கு மத்தியிலும், உலகமெங்கும் உள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்களை கட்டாயம் பணிக்கு வருமாறு அந்நிறுவனம் அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிறுவனம் தன்னுடைய லாப நோக்கத்திற்காக இது மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து தொலைதூரத்தில் உள்ளவர்கள் வேலை செய்ய ஏற்ற வகையில் […]
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரப்படும் வசதியை நிறுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் அனைத்து ஊடகங்களும் விளம்பர வருமானத்தை இறந்துள்ளன. அதனால் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு அதிக அளவு வருமானங்களை பெறுகின்றன. அதனை தடுத்து அவர்களுக்கு கடிவாளம் போட கூடிய வகையில், ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அவ்வகையில் ஊடகங்களில் […]
நிறவெறியை ஊக்குவிக்கும் பக்கத்தை முடக்கத் தவறியது தங்கள் தவறுதான் என்று பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே நிறவெறி பாகுபாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம், ஜாகோப் பிளேக் என்ற 29 ஆப்பிரிக்க அமெரிக்கரை அவரது மூன்று மகன்கள் முன்னிலையிலேயே ஏழு முறை கெனோஷா காவல் துறையினர் சுட்டனர். இதைத்தொடர்ந்து, ஜாகோப் பிளேக் சுடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் […]
எப்போதும் பாகுபாடு இல்லாமல் வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள், சில நாட்களாக தொடர்ந்து பேஸ்புக் தளத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியுள்ளது. அதனை குறித்து அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக […]
பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பேஸ்புக் தலைமை செயல் அதிகரிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பாரதிய ஜனதா கட்சியினர் வெறுப்பு பேச்சு தலை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு ஃபேஸ்புக் வலைத்தள நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிண்டே நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்தியாவில் ஃபேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், அமெரிக்க பத்திரிகையில் கூறப்பட்டுள்ள பாரதிய […]