அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசியளிக்க அவசரகால அனுமதி வழங்குமாறு பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆறு மாதத்திலிருந்து நான்கு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசியளிக்க அவசரகால அனுமதியளிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம், அமெரிக்க மருந்து மற்றும் உணவுத் துறையிடம் விண்ணப்பித்திருக்கிறது. வருங்காலத்தில் புதிதாக உருமாறும் வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக மூன்றாம் தடுப்பூசி செலுத்தவும் அனுமதி […]
Tag: பைசர்
நியூசிலாந்து அரசு 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. நியூசிலாந்தில் பைசர் உட்பட பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி அளிக்க நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணை பைசர் தடுப்பூசியளிக்க தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு […]
ஒமைக்ரான் வைரசை 70% பைசர் மருந்து கட்டுப்படுத்தும் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரான் தொற்று தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. உலக நாடுகளில் தொற்று பரவி வருவதால் இவற்றை எப்படி தடுப்பது என்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதுவரை 44 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவு பாதிப்பு ஏற்படாமல் பைசர் மருந்து 70% தடுப்பதாக தென்ஆப்பிரிக்கா மேற்கொண்ட […]
பைசர் மற்றும் பயோ டெக் நிறுவனங்கள், ஒமிக்ரானை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடிகளை உடலில் அதிகரிக்கும் ஆற்றல் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள், இரண்டு தவணை தடுப்பூசிகள் பிற கொரோனா மாறுபாடுகளை எதிர்த்து செயல்படுகிறது என்றும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தினால், ஒமிக்ரான் வைரஸிற்கு எதிரான ஆண்டிபாடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக தெரிவித்துள்ளன. மேலும், இது தொடர்பில் முதல்கட்ட ஆராய்ச்சி முடிவுகள் தயாராக இருக்கிறது என்றும், அடுத்த […]
சவுதி அரேபியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளும் கொரோனா காரணமாக பல இன்னல்களை சந்தித்துள்ளது. மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பீடுகளை சந்தித்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவில் 12 முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் […]
பிரிட்டனில் தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் மக்களுக்கு மிகவும் நல்ல செய்தி கிடைத்துள்ளது என்று சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு சிறந்த பலனை அளிப்பது இல்லை என்று பல உலக நாடுகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்தும் பிரிட்டனில் ஆய்வு […]
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க பைசர் மருந்து சிறந்த பலனை அளிப்பதாக தெரியவந்துள்ளது. உலகின் பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பைசர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது, எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைசர் மருந்தின் ஒரு டோஸ் செலுத்தப்பட்டது. […]
பைசர் தடுப்பு மருந்து கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கு 95.8 சதவீதம் பயனுள்ளதாக உள்ளது என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 212 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் சில மருந்துகள் மற்றும் அவசரகால தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் இதுவரை 4.25 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பு மருந்து கொரோனாவிடமிருந்து 95.8% பயன் தருவதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 99.2சதவீதம் கடுமையான நோய் தொற்று […]
தடுப்பூசிகள் நல்ல பயன் அளிப்பதால் பொதுமுடக்கத்திற்கு அவசியமில்லை என்று பொதுமக்களும், அரசியல்வாதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் கொரோனாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 80 வயது மேற்பட்டவர்களில் 64 சதவீத பேருக்கும் 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 65 சதவீத கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் […]
உலகிலேயே முதன் முதலில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா போன்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசியும் கலப்பது குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் பலவகைகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக விரைவாக கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வழிமுறைகளை கண்டறிவதற்காக இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. மேலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் தோன்றிய உருமாற்றமைடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் உருமாற்றம் […]
ஸ்விட்சர்லாந்து பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு தற்போது பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகரத்துள்ளது. இது குறித்து ஸ்விஸ் மெடிக் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பைசர் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது மற்றும் அதில் உள்ள ஆபத்துக்கள் நன்மைகளை விட குறைவுதான் என்றும் கூறியுள்ளது. ஸ்விட்சர்லாந்து முதன்முதலில் ஃபைசர் உருவாக்கிய தடுப்பூசியை தான் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவிஸ் மெடிக் இயக்குனரான […]
தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பண்டிகை நாட்களில் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் தற்போது போடப்பட்டு வரும் பைசர் தடுப்பூசி வரும் ஜனவரி இறுதிக்குள் தீர்ந்துவிடும் என்று பிரிட்டனின் முன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான வினியோகம் தொடங்கப்பட்டால் தான் பொதுமக்கள் அனைவருக்கும் திட்டமிட்டபடி தடுப்பு ஊசி செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும் 2021 ஆம் […]
அமெரிக்காவில் வரும் திங்கட்கிழமை முதல் பைசர் கொரோனா தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். பைசர் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தரவுகளை ஆய்வு செய்த தடுப்பூசிக்கான வல்லுநர் குழு, 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.