உலக சுகாதார மையம், அஸ்ட்ராஜெனேகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் ஒமிக்ரானை எதிர்த்து குறைந்த செயல்திறனை கொண்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு, தற்போது உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 90 க்கும் அதிகமான நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தயாரிப்பான பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள், ஒமிக்ரானை எதிர்த்து குறைந்த […]
Tag: பைசர் தடுப்பூசி
ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளைவுகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அரசிடம் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி குறித்த பிரச்சனைகளுக்காக 50 மில்லியன் டாலர் நிதி அளிக்க வேண்டிய காட்டாயத்தில் அரசு இருக்கிறது. நாட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திய 10,000-த்திற்கும் அதிகமான மக்கள், அரசிடம் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள். அதாவது, தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் வருமானத்தை இழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ஆஸ்திரேலிய டாலர் […]
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, பைசர் கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த மந்திரிசபை அடுத்த வாரம் அனுமதி வழங்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். கொரோனா தொற்று இரண்டாவது அலையால் உலக நாடுகள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசியானது நியூசிலாந்து நாட்டில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் பைசர் கொரோனா தடுப்பூசியை 12 […]
அமெரிக்காவில் பயன்படுத்தபடும் பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றளவும் அதனுடைய தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது . இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 16 கோடியை தாண்டி உள்ளது. […]
12-15 வயதுடைய சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 100% பலனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டம் முதியவர்களுக்குதான் அதிகமாக செயல்பட்டு வருகின்றது. பிரிட்டனில் சுமார் 80 வயதிருக்கும் அதிகமான முதியவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின்பு அனைத்து குடிமக்களுக்கும் படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை 16 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதைவிட குறைந்த வயது நபர்களுக்கு தற்போது […]
பிரிட்டனில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி சிறந்த பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் East Angila என்ற பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இஸ்ரேலின் தரவுகள் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி Fizer மற்றும் BioNTech என்ற தடுப்பூசிகள் இஸ்ரேலில் செலுத்தப்பட்டு 3 வாரங்கள் கடந்த நிலையில் தடுப்பூசிகள் 90% பயனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தற்போது பிரிட்டனில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]
பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிகளில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஆக்ஸ்போர்ட் மற்றும் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் 90 சதவீதம் வெற்றியடைந்ததை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது நார்வே நாட்டில் பைசர் […]
பெண் மருத்துவர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் உடல்நிலை மோசமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த மருத்துவரான 32 வயது பெண் ஒருவருக்கு கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, அந்த பெண் மருத்துவருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் […]
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாடானது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 12% ஆகும். மேலும் இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாளே சுமார் 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பைசர் […]
பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் தன் முதல் டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். இவர் தற்போது கொரோனா வைரஸிற்கு எதிரான தன் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளார். இந்த தகவலை சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் எஸ்பிபிஏ உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்துவ ஆணையமானது பைசர்/பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனோ தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் கடந்த […]
தடுப்பூசிகள் தட்டுப்பாட்டால் ஐரோப்பிய நாடுகள் அதனை வாங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐரோபிய கண்டத்திலேயே பிரிட்டன் அரசாங்கம் தான் முதன்முதலில் கொரோனோ தடுப்பூசியை வழங்க அனுமதியளித்திருந்தது.எனினும் தற்போது வரை சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் தடுப்பூசி வாங்குவதற்கு தயாராகவில்லை. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விரிவான திட்டத்திற்கு ஒன்றிணைய மறுத்ததாக பிரிட்டனை ஐரோப்பிய தலைவர்கள் சாடியுள்ளனர். ஆனால் ஐரோப்பாவின் பல நாடுகள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்க தாமதம் ஏற்படுவதாக வருத்தத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து பிரிட்டன் அரசாங்கம் விரைவாக நடவடிக்கை […]