சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் விநாயகம் 6வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பார்வதி (45). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருகின்றனர். இதில் கணவன்-மனைவி இருவரும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் லாரிகளில் சேகரித்து கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை பிரித்து எடுத்து அதனை பழைய இரும்பு கடையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். அதன்படி நேற்று காலை கணவன் -மனைவி […]
Tag: பொக்லைன் எந்திரம்
பர்கூர் மலைப்பகுதியில் 10 அடி பள்ளத்தில் இருந்து பொக்லைன் எந்திரம் உருண்டு விழுந்த நிலையில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஊசிமலை கிராமத்தில் வசித்து வருபவர் பூபதி(22). இவர் ஊசிமலை பகுதியில் இருந்து பவானி அருகில் உள்ள ஜம்பைக்கு பொக்லைன் எந்திரத்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது பர்கூர் மலைப்பாதையில் இருக்கும் ஒரு வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் தாறுமாறாக ஓடி […]
காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 10 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் அடைக்கப்பட்டபோது வெளி மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி அம்மாபேட்டை காவல்துறையினர் 3 ஆயிரம் மது பாட்டில்களையும், அந்தியூர் காவல்துறையினர் 667 மது பாட்டில்களையும், வெள்ளிதிருப்பூர் காவல்துறையினர் 280 மது பாட்டில்களையும் பறிமுதல் […]
பேருந்து நிலையத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலமாக பழைய கட்டிடம் இடிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்தி ரோடு பகுதியில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது. மேலும் தற்போது சத்தி ரோடு பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து […]
பொக்லைன் எந்திரத்தின் மூலமாக பள்ளம் தோண்டி கொண்டிருக்கும்போது முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் இருக்கின்றது. எனவே இது மிக பழமைவாய்ந்தால் கட்டிடங்களை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிதாக மாரியம்மன், விநாயகர், முருகன் மற்றும் சிவன் கோவில் கட்டுவதற்க்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவில் கட்டுவதற்கான இடத்தில் பொக்லைன் எந்திரத்தின மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 3 அடியில் முருகனின் […]
மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தில் ஒரு பண்ணைகுட்டையில் அனுமதியின்றி மணல் அள்ள படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அங்கு மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அனுமதியின்றி கொடைக்கானல் மலைப்பகுதியான தாண்டிக்குடியில் பொக்லைன் இயந்திரம் இயக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்து தாண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சேதுமணி, கொடைக்கானல் தாசில்தார் சந்திரன் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]